முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மின்சார நாற்காலியில் தண்டிக்கப்படுவதனை புதிய அரசாங்கமே காப்பாற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை இலங்கைக்கு சாதகமானதேயாகும்.
மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தினால் நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு சர்வதேச சமூகம் வரவேற்பினை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் நாட்டில் சாதகமான மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் இலங்கை அரச படையின் எவரையும் சர்வதேச ஹேக் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.