வன்னி இனப்படுகொலைக்குப் பின் ராஜபக்ச குடும்பத்தின் பாசிச ஆட்சிக்குப் பின்னான எதிர்க்கட்சிகள் அற்ற சர்வாதிகார ஆட்சியை நடத்தும் இலங்கை அரசின் அங்கம் போன்று செயற்படும் சம்பந்தன் ஐக்கிய நாடுகளின் ஆலோசனைகளை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதே வேளை இலங்கையில் தயாரிப்பதாகக் கூறப்படும் புதிய அரசியல் யாப்பு வெளிவராது எனத் தெரியவருகிறது. அரசியல் யாப்புடன் தொடர்புடைய பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர் அதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் உட்பட பலரது கண்காணிப்பில் தயாரிக்கப்பட்டுவந்த அரசியல் யாப்பிற்கான வேலைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதே வேளை சம்பந்தன், குறித்த அரசியல் யாப்புத் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் செனட்டர் குழுவுடன் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசின் ஊது குழலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதின அரசியல் தலைமைகள் வெற்றிடமாகக் காணப்படும் நிலையில் அக் கட்சி தனது தேர்தல் வாக்குகள் குறித்துக்கூட துயரடையவில்லை.
கோத்தாபய மற்றும் பசில் ஆகியோரைப் ஊழல் மற்றும் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்போவதாக இலங்கை அரசு ஆட்சியமைத்துக்கொண்டது. இன்று இலங்கை அரசை நடத்தும் அமெரிக்காவில் கோத்தாபய மற்றும் பசில் ஆகியோர் மீள் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா ஆதரவளிப்பதாகக் கூறப்பட்டுவந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பான மாயை முற்றாகத் தகர்ந்துள்ளது.
இலங்கை அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் அமைப்புக்கள், கூட்டமைப்பின் எதிர்க்கட்சிகள் என்ற அனைத்தும் அமெரிக்காவால் இயக்கப்படும் ஒரே நேர்கோட்டில் செயற்பட தமிப் பேசும் மக்களின் அவல வாழ்க்கை தொடர்கிறது.