வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது.
கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான உணர்வை ஒடுக்கும் அரசுகளுக்கு ஆதரவாக மாற்றும் ஒரு கும்பல் வியாழேந்திரன் விலைபோனதை எதிர்த்தால் யாழ் மையவதம் எனக் கிளம்பிவிடுகிறது.
பேரினவாதிகளுக்கும், ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஆதரவான அனைத்து ஆயுதங்களையு ம் தேடித்தேடிப் பொறுக்கும் இக் கும்பல்கள் இன்று பிரதேச வாதத்தின் ஊடாக வியாழேந்திரனை நியாயப்படுத்துகிறது.
ரனில் என்ற இலங்கையின் மேல்தட்டு மனிதனின் ஆட்சிக் காலத்தில் வெறுப்படைந்த சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் மகிந்த ஆட்சிக்கு வந்ததும் தமது அன்றாட வாழ்க்கை வழமாகும் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நாளாந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறுகிய காலத்துள் இரண்டுமடங்கா உயர்த்திய ரனிலின் நான்கு வருட ஆட்சி மகிந்தவிற்கு ஆதரவாக மக்களை மாற்றியிருக்கிறது,
அப்படியிருந்தும் மகிந்தவிற்கு ஆகரவால சிங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வகுக்கவில்லை. தமது தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு மகிந்த தேவை என்ற முட்டாள் தனமான வாதத்தை முன்வைக்கவில்லை. மகிந்தவிடம் இணைந்தவர்கள் கடுமையாக ஊடகங்களின் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இன்று மக்களைச் சாரி சாரியாகக் கொன்று குவித்த ஒரு கிரிமினல் மீண்டும் அரசாள முன்வைந்த போது எந்தக் கூச்சமும் இல்லாமல் வெறும் பணத்திற்காக இணைந்து கொள்ளும் வியாழேந்திரன் எமது சமூகத்தின் சாபக்கேடு.
தான் மதிக்கும் ஒரே தமிழ் அரசியல் வாதி விக்னேஸ்வரன் எனக் கூறும் வியாழேந்திரன் அவரைத் தான் ஒரு காலத்திலும் எதிர்க்கப்போவதில்லை என்கிறார்.
மகிந்த என்று இதுவரை பெயர் குறிப்பிடாவிட்டாலும், இனப் படுக்லைக்கு நியாயம் பெற்றுத் தருவதாக பூவோடும் பொட்டோடும் முழங்கி வந்த விக்னேஸ்வரன் இப்போது எங்கே என்ற கேள்வி இத்தோடு தொக்கி நிற்பது இயல்பானது
விக்னேஸ்வரனும் விசிறிகளும் மூச்சுக்கூட விடாமல் மதில்மேல் பூனையாகி விட்டதன் உள்ளஎர்த்தம் என்ன?
இதுதான் வியாழேந்திரனின் அரசியல் வரலாற்றின் கடைசி அத்தியாயம். இனிமேல் அவர் காணாமல் போய்விடுவார். ஆனால், இன்னும் ஒரு முறை விக்னேஸ்வரன் மகிந்தவோடு குடும்பசகிதம் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தும் அரசியலில் இருப்பார். சிலவேளைகளில் தமிழ்த் தேசிய முன்னோட்டியாகக் கூட முன்னிறுத்தப்படுவார். ஆக, விக்னேஸ்வரனுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையிலான இடைவெளியில் தான் யாழ் மையவாதம் குடியிருக்கிறது, தவிர, இரண்டு முகங்களுமே வரலாற்றில் தமிழ்ப் பேசும் மக்கலின் சாபக்கேடுகள் தான்.