விபூசிகா என்ற குழந்தையும் அவரது தாயாரான ஜெயகுமாரியும் காணாமல் போனோரை விடுதலை செய்வதற்கன போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இவர்கள் இருவரையும் மகிந்த அரசு கடந்தவருடம் நவம்பர் மாதம் கைதுசெய்து சிறைகளில் அடைத்தது. விபூசிகாவை நலன்புரி முகாமிலும் ஜெயகுமாரியை தடுப்பு முகாமிலும் அடைத்துவைத்த இலங்கைப் பேரினவாத அரசு அவர்களைக் கைது செய்தத்தற்கான காரணங்களை உறுதிப்படுத்தவில்லை.
மைத்திரிபால-ரனில் அரசு ஆட்சிக்கு வந்ததும் விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரி தம்மை விடுவிக்குமாறு ஜனதிபதி மைத்திரிபாலவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். குற்றங்கள் எதுவும் உறுதிசெய்யப்படாத ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு நேற்று அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். அவர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதால் நீதிமன்றம் விடுதலை செய்ய முடியாது எனப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் பிணைக்கான அனுமதியைக் கோரியுள்ளது.
விபூசிகாவும் ஜெயகுமாரியும் மைத்திரிபால ஆட்சியின் பேரினவாத ஒடுக்குமுறையின் குறியிடு. அதே வேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு– புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
http://www.asianmirror.lk/news/item/7403-sri-lanka-may-release-jeyakumari-coinciding-with-modi-s-visit-reports