சுமந்திரன் அதிகாரவர்க்க அரசியலின் தமிழ்ப் பிரதிநிதி என்பதில் எந்தச சந்தேகமும் கிடையாது. சுமந்திரன் மட்டுமல்ல தமிழ்த்தேசிய அரசியலின் வரலாற்றின் பெரும்பகுதி வலதுசாரி அதிகாரவர்க்கம் சார்ந்தே நகர்ந்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருந்தாலும் அதன் உள்ளடக்கம் ஏகாதிபத்தியங்களுக்கும், உள்ளூர் அதிகாரவர்க்கத்திற்கும் தீனி போடுவதாகவே அமைந்திருந்தது. சுமந்திரன் அதன் வெளிப்படையான பிரதிநிதியே தவிர வேறில்லை.
கடந்த காலங்களில் விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை சுமந்திரன் உட்பட்ட அதிகாரவர்க்கம் உள்வாங்கிக்கொண்டு அவற்றைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
கடந்தகாலத்தை விமர்சன அடிப்படையில் அணுகி புதிய அரசியல் முன்வைக்கப்படும் வரை இன்றைய சூழல் சுமந்திரனுக்குச் சார்பாகவே அமையும்.
இன்று புலம்பெயர் நாடுகளில் மக்களின் பணத்தைச் சுருட்டிய சிறிய விரல்விட்டு எண்ணக்கூடிய குழுவினரே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமது பணத்தைப் பாதுகப்பதற்கான அரணாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இவர்கள் சுமந்திரன் மீது முன்வைக்கும் வன்முறைகளும், விமர்சனங்களும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக சுமந்திரன் போன்ற கொடியவர்களின் பலத்தை ஈழ மக்கள் மத்தியில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.
கடந்த காலத்தில் தவறுகள் நடந்துள்ளன அதனை இலங்கை அரசிற்கும் இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ள சுமந்திரனுக்கு எந்த உரிமையும் கிடையாது. மக்களதும், போராளிகளதும் தியாகங்களை சுமந்திரன் போன்றவர்கள் தாம் சார்ந்த வர்க்கத்தின் இருப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதன் மறுபக்கத்தில் தவறுகளை மூடி மறைத்து தமது சொந்த வயிற்றுப் பிழைப்பிற்காக விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்கள் சுமந்திரனுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் நடந்துகொள்கின்றன.
தவறுகளை நேர்மையாக விமர்சித்து விடுதலைக்கான போராட்டத்தை புதிய கட்டத்தை நோக்கி வளர்த்தெடுப்போம் எனக் கூறும் அரசியலுக்கான அடிப்படை தோன்றும் வரை சுமந்திரன் வாழ்வார். சுமந்திரனை புலம்பெயர் பிழைப்புவாதிகள் வாழவைப்பார்கள்.
அவுஸ்திரேலியவில் சுமந்திரனுக்கு எதிராகச் சிறிய அடிப்படைவாதிகளின் குழு ஒன்று வன்முறையில் ஈடுபடத்து தொடர்பாக இப் பதிவு எழுதப்பட்டது.
சுமந்திரனுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்:
Sumanthran’a image and respect had been elevated locally by this incident. I do not know why Sumanthiran had to face and answer these international street dogs. LTTE terrorists are NOT political prisoners. Otherwise, Pillaiyan who is in custody now also can claim that he is also a political prisoner.
Pillauiyan is not being prosecuted for what he did as a rebel, he was arrested for what he did as a civilian while working for the government. If you don’t understand this simple logic you have big issues inside your head that needs to be fixed by a shrink.
Wow! What a hair splitting argument, Sunthar.
First of all, Pillaiyan is not being prosecuted for anything now. He is taken into custody for questioning and one by one all the doors will be opened. You and I may forget as to what happened to the 600 policemen who were executed by Pillaiyan under the orders of Karuna, but the 600 families of those policemen will never forget and forgive of those so called ‘rebels’. Mind you, PTA was especially enacted to deal with the rebels and not for wrong doings of civilians. To begin with, when did he become a civilian? According to him, he became a professional killer from a rebellion. That is why, MR hired him for other jobs.
I wonder who is nit picking now? Have you abandoned MR already, poor man he shouldn’t have trusted the BCO folks. They not only lack intelligence but also loyalty 🙁
Rajan, good to see you are coming out with your true colours. That so called ‘intelligence and loyalty’ can be seen now in the way northern provincial council is functioning now (the only defunct PC in the country) and from the way that land suffered politically and physically during the last 35 years. You all deserve for what you all possess. But still, my land is ready and willing to accept all those displaced from bombing, land minings, killings etc. etc etc,. Once they come, they never return back!
Oops ! I am that Easterner who feels disgusted with the crap coming out from some dumb asses from BCO 🙂
இங்கு கூச்சல்போடுபவர்கள் மறைமுகமாக சுமந்திரன் போன்ற த.தே.கூ அரசியல்வாதிகளின் செல்வாக்கினை இலங்கையில் அதிகரிப்பதற்கே உதவுவார்கள். சரி, புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணத்தினை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை நடாத்துபவர்கள் பொதுமேடைக்கு வரும்போது இவ்வாறு துரோகி ,துரோகி என கூச்சலிடுவதில்லையே, ஏன்?
ஆஸ்திலியாவில் ஈழ அகதிகள் திருப்பி அனுப்பப்பட்ட போதும், சிறிய தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட போதும், இவர்கள் எங்கே போனார்கள்? இவர்கள் தாம் கொள்ளையடித்த பணத்தைப் பதுக்கவும், பாதுகாக்கவும் மட்டுமெ துரோகிகள் தேவைப்படுகிறார்கள். சுமேரியன் கேட்பது சரியானது. எல்லாருக்கும் தெரியும், புலிகளின் பணத்தைக் கொள்ளையடித்துப் பதுக்கி புலிகளை அழிக்கத் துணைபோனவர்கள் யார் என்று, ஏன் அவர்களை நோக்கி ஒருவரும் கூச்சல் போடுவதில்லை?
புலிகளின் பணத்தைக் கொள்ளையடித்து அவர்களைக் காட்டிக்கொடுத்தவர்களையும், இனப்படுகொலைக்கு மறைமுகமாகத் துணைபோனவர்களையும், அவர்களுக்கு பொழிப்பு எழுதி வெள்ளையடிக்கும் கூட்டத்தையும் இனியொரு இனி அம்பலப்படுத்த வேண்டும்!
சுமந்திரனும் துரோகி துரோகி எனக் கூச்சளிட்டோரும் தமிழ் மக்களுக்கு பயனற்ற சமாந்திர கோட்டில் தான் பயணிக்கிறார்கள். சுமந்திறனைப் பார்த்து துரோகி துரோகி என மாத்திரம் கத்துகிறார்கள். கருத்தியல் ரீதியாக மென் போக்கான முறையில் சுமந்திரனின் அரசியல் செல் நெறி குறித்து விவாதத்தை மேல் கொண்டிருக்கலாம்.
தமிழ் மக்களின் நியாயமான எதிர்ப்பு போராடங்களை வன்முறை சார்ந்ததாகவும், ஜனநாஜகப் பன்பற்றதாகவும் காட்ட இப்போது சுமந்திரன் மற்றும் அவர்களின் பின்னூக்கிகளுக்கு அரிய வாய்ப்பினை புலம் பெயர்ந்து வாழும் அறிவற்ற முட்டாள்கள் செய்கிறார்கள்.
இங்கு துரோகி கோசம் போடுபவர்கள் எவரும் அவுஸ்ரேலியாவில் நிரந்தர செற்றிலாகீவிட்டவர்கள்;இவர்கள் சொல்லும் தமிழீழத்துக்கோ பிரபாகரனின் ஆவி படைக்கு கிட்டவோ போகப்போவதில்லை;பிரபாகரன் தனக்கு தெரிந்த எல்லா வழிகளிலும் போராடி இனி முடியாது என்று உணர்ந்துதான் வன்னியை விட்டே வெளியேறி தப்பி போகாமல் இறந்துபோனார்.
இது இந்த பொடிப்பசலுகளுக்கு விளங்கியிருக்க வாய்ப்பில்லை.சுமந்திரன் முஸ்லீம்களை வெளியேற்றியதற்காக தமிழர்கள் வெட்கப்படவேண்டும் எனச்சொன்னதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.
இதேபோன்று இன்னும் சில காலத்துக்கு பின்னர் காசியானந்தனும் நெடுமாறனும் வைகோவும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தாததுக்காக முழுத்தமிழினமும் வெட்கப்பட வேண்டும் என்பார்கள் அப்போது யார்யார் துரோகிகள் பட்டியலில்????
பிரபாகரன் கூட தனது அரசியல் எதிரிகளைக்கூட துரையப்பா முதல் கொண்டு தேவானந்தா வரைக்கும் அவன் இவன் என்று தரக்குறைவாக கதைத்தது கிடையாது;ஆனால் இந்த அவுஸ்ரேலியன் சிற்றிசன்ஸ் வாயிலிருந்து அனல் பறக்கும் வசை பாடல்கள் ஆவிப்படைகளின் தேசியத்தலைவருக்கே அருவருப்பு அவமானம்
புலி பதுங்கியிருக்க புலிவால் உண்ணிகள் தான் அவுஸ்ரேலியாவிலும் யூரோப்பிலுமிருந்து பன்ச் டயலாக் பேசினம்;
Well said, Praveen.