சுப்பர் சிங்கர் நிகழ்ச்சில் கலந்துகொண்ட குழந்தைகளை வைத்து வியாபாரம் நடத்திவரும் விஜய் தொலைக்காட்சி இன்று லண்டனில் களியாட்ட விழா ஒன்றை நடத்தவிருக்கிறது. குழந்தைகளை நுகர்வுப்பண்டமாக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக இந்தியாவில் குழந்தைகள் நல நிறுவனம் ஒன்று வழக்குத் தொடரவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
பிரித்தானியாவில் தனது தொலைக்காட்சி சேவையை நடத்திவரும் விஜய் தொலைக்காட்சியின் சொந்தக்காரர் ‘ஊடக மாபியா’ என அழைக்கப்படும் ரூபெட் மெடொக் என்பவரவர். பிரித்தானியாவின் பண்பாட்டைச் சிதைப்பதிலும், நுகர்வுக் கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் பங்குவகித்த சண் நாழிதழ் உட்பட பல்வேறு ஊடகங்களின் உரிமையாளர் மெடொக்.
வேலைக்குச் செல்லும் வயதை எட்டாத பள்ளிக் குழந்தைகளை வைத்து களியாட்ட நிகழ்ச்சி நடத்தி அதனை பற்றுச்சீட்டுப் போட்டு விற்பனை செய்கிறது விஜய் தொலைக்காட்சி.
சுப்பர் சிங்கரில் வெற்றிபெற்ற குழந்தைகளான ஸ்பூர்த்தி, ஜெஸ்ஸிகா, அனுஷ்யா, பரத், ஹரிப் பிரியா மற்றும் ஸ்ரீஷா ஆகியோர் விஜய் தொலைக்காட்சியின் பண வெறிக்காக உழைக்கின்றனர். இன்று லண்டனில் பயன்படுத்தப்படும் குழந்தைகள் இவர்களே என விஜய் தொலைக்காட்சி விளம்பரம் செய்துள்ளது.
இவர்கள் மீதான உளவியல் அழுத்தங்களும், இவர்களைப் பயன்படுத்தும் முறையும் பிரித்தானியச் சட்டங்களுக்கு முரணானவை.
தவிர,பிரித்தானியாவில் விசேட சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே குழந்தைக் கலைஞர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட பின்பே அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் அவர்கள் ஊதியம் பெற்றுக்கொள்வது சட்டவிரோதமானது. நிலமை இவ்வாறிருக்க பெரும் பணச்செலவில் சுப்பர் சிங்கர் குழந்தைகளை வைத்து களியாட்ட விழா ஒன்றையே நடத்துகிறது விஜய் தொலைக்காட்சி.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் லண்டன் பிரிவே இந்த நிகழ்ச்சிய நடத்துவதாக விளம்பரங்கள் கூறுகின்றன. ஆக, பிரித்தானிய நிறுவனம் ஒன்று குழந்தை நட்சத்திரங்களைப் பயன்படுத்தி சட்டங்களுக்கு உட்படாது நடத்தப்படும் நிகழ்ச்சி இது.
கனடாவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா உட்பட விஜய் ரீவி இன் பணக்கொள்ளையிலும் பண்பாட்டுச் சிதைப்பிலும் பயன்படுத்தப்படும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
https://www.gov.uk/child-employment/performance-licences-for-children
I am sure if it is something illegal our good Tamil folks in the UK will make sure this gets reported, don’t you worry about it. On the flip side, is this the first time kids are being used in the entertainment industry in India and elsewhere or is it that good old Rupert is the exception here. We have seen kids used in this industry from the time we have known this. What is the big deal now ?