கிரேக்கத்தில் வெளிநாட்டவர்களுக்கும், வெள்ளை நிறத்தவர் அல்லாதவர்களுக்கும் எதிரான நிறவாத பாசிச அமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக அந்த நாட்டின் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. ஹிட்லர், மற்றும் இந்துத்துவ ஆரிய கோட்பாடே தமது கட்சியின் தத்துவம் என்றும், கிரேக்கர் அல்லாதவர்கள் தமது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், கிரேக்கம் கிரேக்கர்களுக்கே என்றும் ஆரம்பிக்கப்பட்ட தங்க விடியல் -Golden Dawn- என்ற கட்சி கட்சி, எல்லா இனவாதக் கட்சிகளையும் போன்றே பாசிசக் கட்சியாக உருமாறி கிரேக்கர் அல்லாதவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.
இந்தியாவில் மதவாத பாசிச ஆர்.எஸ்.எஸ், தமிழ் நாட்டில் நாம் தமிழர், பிரான்சில் தேசிய முன்னணி போன்ற கட்சிகளை ஒத்த கோட்ப்பாட்டை முன்வைத்த தங்க விடியல் கட்சி, நூற்றுக் கணக்கான வன்முறைகளிலும், கொலைக் குற்றங்களிலும் ஈடுபட்ட அதேவேளை, 2012 ஆம் ஆண்டு தேர்தலில் 7 வீத வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தமது பிரதி நிதியையும் அனுப்பியிருந்தது.
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி பொது அரசியலுக்குள் நுளைந்துகொண்ட இக் குழுக்கள், தொழிலாளர்களின் உரிமைக்கான முழக்கங்களைக்கூட முன்வைத்தன. குறிப்பாக கிரேக்க நாட்டில் மாடு வளர்ப்பையும், விவசாயத்தையும் தேசிய மயமாக்க வேண்டும் எனக் கூறின. கிரேக்கர்களே உலகின் மூத்த குடிகள் என இனப் பெருமை பேசின.
இக் கும்பலின் ஆபத்தை உணர்ந்துகொண்ட மக்கள் தமது எதிர்ப்புணர்வை பல்வேறு வழிகளில் வெளிக்காட்ட ஆரம்பித்தனர். 07.10.2020 அன்று தங்க விடியல் அமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கொலைக்குற்ற வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் 50 ஆயிரம் பேர் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். கொரோனா பெருந்தொற்று தொடர்பான அச்சம் இல்லாதிருந்திருந்தால் இத் தொகை பல மடங்காக இருந்திருக்கும் என்கிறது ஏதன்ஸ் போலிஸ்.
மக்களால் நீதிமன்றம் சுற்றிவளைக்கப்பட அதன் உள்ளே மக்கள் எதிர்பார்த்த தீர்ர்பு வெளியானது. தங்க விடியல் கட்சியின் தலைவர்கள் கொலைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர்.