தூத்துக்குடி படுகொலைகளின் பின்னால் இந்திய மத்திய மானில அரசுகளின் துணையுடன் செயற்பட்ட இரத்தம் தோய்ந்த நிறுவனமான வேதாந்தா லண்டன் பங்கு சந்த்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி மக்களின் வெற்றிக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கொண்டாடப்பட வேண்டும். வேதாந்தாவின் பங்குகள் அனைத்தையும் அதன் நிறுவனர் அனில் அக்ரவாலே கொள்வனவு செய்துகொண்டு பங்கு சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையிலிருந்து நீக்குமாறு பல்வேறு தரப்புக்களிலிருந்து கிடைத்த அழுத்தங்களைத் தொடர்ந்து அக்ரவால் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். பங்கு சந்த்தையில் நிறுவனத்தின் 33.65 வீதமான பங்குகள் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. அப் பங்குகளை தானே விலைகொடுத்து வாங்கி அனில் அக்ரவால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக வேதாந்தாவை தொடர்ந்து நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி படுகொலைகளுக்கும் தனது முடிவிற்கும் எத் தொடர்பும் இல்லை என அக்ரவால் தெரிவித்துள்ள போதிலும், வெளியேறப்படுவதற்கு முன்பு தனே வெளியேறிக்கொண்டார் என்பதே உண்மை.
அனில் அக்ரவாலின் வேதாந்தா மற்றும் -ஹிந்துஸ்தான் ஸிங் ஆகிய நிறுவனங்கள் மும்பாய் பங்கு சந்தையில் ஏற்கனவே பதிவிலிருக்கும் அதேவேளை, இந்தியாவிலுள்ள அவரின் மற்றொரு நிறுவனமான கரின் இந்தியாவை வேதாந்த்தாவுடன் இணைத்து பங்கு சந்தையை எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பங்கு சந்தையிலிருந்து வெளியேறிய வேதாந்தா சரவதேச எதிர்ப்புக்கள் எதுவுமின்றி தூத்துக்குடி ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் வேதாந்தா ஈடுபடும்.
தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டம் உலகின் மறுமுனையிலிருந்த நிறுவனத்தையும், லண்டன் பங்கு சந்தயையும் நிலை குலையச் செய்திருக்கிறது.