தூத்துக்குடி போலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் CCTV கமெராக்களை அதிகமாக வைத்திருக்குமாறு ஸ்டெரலைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் உத்தரவிடது மட்டுமன்றி காவல்துறையின் தலைமை அதிகாரி செல்வநாகரத்தினம் ஐ.பி.ஸ் என்பவரிடம் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான காசோலையைக் கையளித்ததாக வேதாந்தா நிறுவனம் தனது இணையத்தளத்திலேயே தெரிவித்துள்ளது. (ஆதாரம் இணைப்பு)
ஒரு தனியார் நிறுவனம் அதிலும் லண்டனைத் தலமையகமாகக் கொண்ட நிறுவனம் எப்படி உள்ளுர் போலிசிற்கு உத்தரவிட முடியும்? அதிலும் அவர்களுக்குப் பணம் வழங்கி அந்த உத்தரவை நிறைவேற்றும்படி பணிக்க முடியும்?? இவையெல்லாம் ஒரு பக்கக் கேள்விகளாக இருக்க வேதாந்தாவும் தூத்துக்குடி வேதாந்தா படுகொலைகளை நிகழ்த்திய போலிஸ் துறையும் எவ்வளவு நெருக்கமாகச் செயலாற்றியுள்ளன என்பது அவர்களின் அறிக்கையில் தெளிவாகிறது.
மூன்று லட்சம் ரூபா பெறுமானமுள்ள காசோலையை வேதாந்தா சார்பில் வழங்கியவர் எம்.எசக்கிபாலன் எனவும் அவரது அலைபேசி இலக்கம் +91 82200 54113 எனவும் தெரிவித்துள்ள வேதாந்தா, மேலதிக விபரங்களுக்கு அவரைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுத் தளத்தில் கோரியுள்ளது. ஆக, படுகொலை நடத்திய போலிசிற்கு 3 லட்சம் ரூபா வழங்கியது ஏன் என அவரை தமிழக மக்கள் உட்பட அனைவரும் தொலை பேசியில் அழைத்து கேள்வியெழுப்புவது சட்டரீதியாகச் சரியானதே,
ஆதாரம்: