தூத்துக்குடி இன்றும் போர்கோலமாகக் காட்சிதருகிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவிரி மேட்டூர் அணைப்பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ள வேதாந்தா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவங்களை நடத்தி வருகிறது. இந்தியாவில் கர்னாடகா பஞ்சாப் போன்ற பலபகுதிகள் உட்பட ஆபிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களையும் சிதைத்துவரும் வேதாந்தாவிற்கு தமிழக மக்களின் போராட்டம் உலகளாவிய முதல் அடி.
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே,சம்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளின் பல பிரதேசங்களைச் சிதைத்து நீர் வளத்தை அழித்து வரண்ட பிரதேசமாக்கிய வேதாந்தா, கர்னாடகா, கோவா பகுதிகளிலிருந்து 3000 லட்சம் தொன் இரும்புத் தாதை அழந்தெடுக்கிறது.
பஞ்சாப், சட்ட்சிஸ்கார் போன்ற மானிலங்களில் ஹட்ரோ காபன் திட்டத்தை அமுல் நடத்தி வருகிறது.
கர்னாடக அகழ்வுத் திட்டம் முன்னதாக நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் கடந்த வருடம் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் வேதாந்தா நடத்தும் உலகளவிலான அழிவிற்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டத்தை அழிக்கவும், காவிரி நீர்ப் பிரச்சனையை இனவாதப் பிரச்சனையாக மாற்றவும் வேதாந்தா தன்னாலான அனைத்தையும் மேற்கொள்ளும்.
இது தமிழர்கள் மீதான தாக்குதலாகக் குறுக்காமல் வீரம் செறிந்த மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றால் மட்டுமே வேதாந்தா தோல்வியடையும்.
பிரித்தானியாவில் வாழும் சம்பிய மக்களின் துணையுடன் பொயில் வேதாந்தா என்ற தன்னார்வ அமைப்பு வேதாந்தாவிற்கு எதிராக லண்டனில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஆனால் வீரம் செறிந்த மக்களின் போராட்டம் தமிழகத்திலேயே முதல் தடவையாக நடைபெறுகிறது.
வினவு இணையத்தளச் செய்தி:
தூத்துக்குடியில் போலீசின் கொலைவெறி தொடர்கிறது! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இன்று கொல்லப்பட்டார்!
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி நகரின் முக்கியமான பகுதியாகும். இங்கே நாடார் சமூக மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். பெரிய தெருக்களைக் கொண்ட இப்பகுதியில் மக்கள் காலை முதலே போலீசை எதிர்த்து வருகிறார்கள். மருத்துவமனையில் இருந்து விரட்டப்பட்டபிறகு மக்களின் கோபமும் ஆத்திரமும் அதிகரித்திருக்கிறது. போலீசோ அப்படி மக்களை கோபப்படுத்துவதை திட்டமிட்டே செய்கிறது. நேருக்கு நேர் பார்க்கும் போது மக்களை திட்டுவதும், சுடுவதாக மிரட்டுவதும் செய்கிறார்கள். அப்படி இன்று மதியம் வரை அண்ணா நகர் பகுதி பதட்டமாகவே இருந்தது. மதியம் போலீசு வெறிநாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் எனும் 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார். அரசின் பயங்கரவாதம் தொடர்கிறது. – வினவு செய்தியாளர்
.
.