தென்னித்திய சினிமாப் பாட்டெழுதும் வைரமுத்து இலங்கைக்குச் சென்று சினிமாக் கவிதைகள் பேசியமை இன்றைய தமிழ் ஊடகங்களின் தலைப்புச் செய்தி. ஈழத்துக் கவிதை மரபு ஒன்றிருந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்க கடந்து போக முடியாத காலம் ஒன்று உள்ளது. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை அழைத்து ஈழத்தில் கவிதை பாடவேண்டிய அவலத்துள் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வட மாகாணசபயில் பல்தேசிய நிறுவனங்களின் ஊழலின் ஊற்றுமூலமாகத் திகழும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசனின் அழைப்பின் பேரில் இலங்கை சென்ற வைரமுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் பெருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
2009 இல் வன்னிப் படுகொலைகள் நடந்துகொண்டிருந்த் வேளையில் கருணாநிதிக்காகக் கவிதைபாடிய வைரமுத்து, இன்று ஈழத் தமிழர்களின் துயரத்தை மாகா காவியமாக எழுதுவேன் என்று முல்லைத்தீவில் முழங்க அதனை தமிழ்த் தேசியக் கோமாளிகள் சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பெருமையாகப் பேசி மகிழ்கிறார்கள்.
இதற்கு நடுவே ஐங்கரனேசன் மற்றும் விக்னேஸ்வரன் அமைத்த போலி நிபுணர்குழுவால் அடிப்படை வசதிகளைக் கூட இழந்து வாழும் மக்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டமும் நடைபெற்றது. வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன், சட்டத்தரணி தேவராசா உட்படப் பலர் உரையாற்றிய இந்த நிகழ்வு அவலங்களுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதி.
வைரமுத்துவை அழைத்து இந்திய சினிமாக் கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் ஐங்கரனேசன் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் மில்லியன்களை வாங்கிக்கொண்டு மக்களை மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளிய பேரழிவிற்கு எதிரான இந்த நிகழ்வில் சுன்னாகம் மக்களும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய பொறியியலாளர் சூரியசேகரம் போராட்டம் தொடரும் என்றார்.
“முகவரி அழிக்கப்பட்ட மக்களின் இரத்தத நாளங்களின் நஞ்சை உற்றிவிட்டு வன்னி மண்ணில் கவிதை அல்லவா பாடிக்கொண்டிருக்க்கிறார்கள்? கிடுகு இடுக்குகளைக் கடந்து அவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது கிறீசையும், ஒயிலைம் பற்றியா பேசிக்கொள்வார்கள்??”
எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றுவதற்காக வட மாகாண சபை நடத்திய நாடகம் அம்பலப்படுத்தப்படுகிறது…
அவனுக்கும் பொழப்பு ஓடனும்ல்ல…அதான் கவிதை வியாபாரம் செய்யுறான்….
தயவு செய்து நல்லது ஏதன் சொல்ல இருந்தால் சொல்லுங்க. தயவு செய்து ஒருவரைபற்றி நல்லது சொல்ல இல்லாட்டில் அமைதியை இருக்கிறது நல்லம். இதை நான் வடமாகாண மந்திரிக்காகவோ அல்ல வைரமுத்துக்காகவோ சொல்லவில்லை.
ஓகோ…அப்ப மகிந்தவைப் பற்றிச் சொன்னீர்களோ?
பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமரிசனங்களிற்குப் பயப்படக் கூடாது.
வைரமுத்து பணத்திற்காக எழுதும் ஒரு இலக்கிய வியாபாரி. பல ஆபாச பாடல்களின் உரிமையாளர். இவர் வந்து தமிழ் மக்களின் துயரை நியாயத்தின் பக்கம் நின்று எழுதப் போவதில்லை. தனது பிழைப்பிற்கு ஏற்றபடி பாதுகாப்பாக நின்று கொண்டு தான் யாரை திருப்திபடுத்த வேண்டுமோ அவர்களுக்காக எழுதுவார். வீர வசனத்தில் உசுப்பேற்றுவார். ஈழப் போராட்டத்திற்கு இன்னொரு பக்கம் உண்டு. கேட்டால் தெரியாது என்பார். ஆக மொத்தத்தில் வைரமுத்து தமிழ் மக்களுக்கு தனது எழுத்தினால் உண்மையை உரைக்க வேண்டும் அல்லது எழுதாமல் விட்டு விடுதலும் நன்மை தருவதே.
He is a song writer who makes money out of it. Nothing more and nothing less about it. Guys please get over it.
I agree we should waste time thinking that Vairamuttu is going to do something. But It is time to expose him too.
எல்லோருக்கும் ஈழத் தமிழர் துயரம் வியாபாரப் பொருள்
உங்களுக்குத் தெரியுமா ஐங்கரநேசனின் வாகனங்கள் 1984 இல் எரிக்கப்பட்டது பற்றி
ஆ!………… ஐங்கரனெசண்டையை எரிச்சான்களோ! யார் பார்த்தது? யார் எரிச்சது?. அவர் ஓட்டினவரோ?! …………….. வாகனம்!
1984?! இல் எரிக்கப்பட்டது பற்றி!!! சத்தியமா தெரியாது. அவர் ஓட்டினதும் , அவற்றைய எரிச்சதும் தமிழர் அரசியலில் இன்று மிக முக்கியமானது. இவற்றை நாம் மறைக்க முனையாது அம்பலப் படுத்த வேண்டும். அது காலத்தின் தேவையும் கட்டாயமும்.
அப்ப இந்த தமிழ் சாதியில் எந்த சாதியிலும் நல்லவங்கள் இல்லை போல கிடக்கு எல்லோரும் கூறு கெட்ட கொங்காப் பயலுகளா இருக்கிறானுகள்.
முல்லைத்தீவில் கயிறுவிட்ட வைரமுத்து! பற்றி நாம் வயிறு விட்டு பேசுகிறோம்!. பேசுவோம்!…. பேசிக்கொண்டிருப்போம்!!……. தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்!!!………
அப்புறம் வேறு என்ன பேச இருக்கு?………….. ஒன்னுமில்லையே!…… திண்ட சோத்தை எந்த வழியிலும் கக்கியே ஆகணும். அப்ப கக்கிற வழி பற்றி பேசுறதா? சும்மா போங்கையா நமக்கு எது கிடைச்சாலும் பேசுவம்.
வைர முத்து இந்திய தேசியமும் , தமிழ் தேசியமும் சம காலத்திலேயே பேசக் கூடிய மனிதர். அவர் பேசுவார் ஒரு கலையனாக அடையாள படுத்தப் பட்டவர் அவரால் பேசமுடிந்ததை பேசுவார்.
நீங்கள் அவரை பேசுங்கள் சும்மா சும்மா பேசுவதே ஒரு சுகம் தானே. பேச்சில் ஒரு அர்த்தம் மற்றும் மாற்றம் தரும் விளைவு என்பன இருக்கவேண்டும் என யார் பார்ப்பார். தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்!!!………சும்மா சும்மா பேசுவதே ஒரு சுகம் தானே!
It is a favorite past time for us Tamils, just talking. We did it when we were young and we are doing it now though we claim we are matured and enlightened.