இலங்கை அரசும் அமெரிக்க அரசும் இணைந்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைத்துள்ள தீர்மானம் பேரினவாதத்தை ஊக்கப்படுத்துகிறது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இனவத சக்திகளைப் பலப்படுத்தும் என்பதற்காக போர்க்குற்ற விசாரணை அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை அமெரிக்க மற்றும் இலங்கை அரசுகளின் அனுசரணையுடன் ஐ.நா பின்போட்டது. இன்று அறிக்கை வெளியிடப்பட்டதும் விசாரணை செய்து தண்டனை வழங்கும் பொறுப்பை இலங்கை அரசிடமே ஒப்படைத்து விடுவதாக அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்காக முன்வைக்கப்படும் காரணம் இலங்கையின் பேரினவாதிகள் பலமடைந்து விடுவார்கள் என்பதே! ஆக, பேரினவாதத்தின் இருப்பைப் பேணுவதே அமெரிக்க அரசின் நோக்கமே தவிர அதனை எதிர்கொள்வதல்ல. உலகின் அதிபயங்கரவாத அரசு இதைத் தவிர வேறு எதையும் முன்வைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
80 களில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதே அது இந்திய மற்றும் அமெரிக அழிவு அரசுகளால் பயன்படுத்தப்பட்டது. சிறிது சிறிதாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடியான கண்காணிப்பிற்குள் போராட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் தோற்றதாக வரலாறில்லை. சீனாவில் மாவோ சேதுங்கும் அவரது தோழர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் இராணுவத்தை ஒழுங்கமைப்பது தொடர்பன நவீன முறையை உலகத்திற்கு வழங்கியிருந்தனர். அதனைப் பின்பற்றிய வியட்னாமியப் போராட்டம் அணுவாயுதங்களோடு யுத்தம் செய்த பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஆகிரமிப்புப் படையை புறமுதுகு காட்டி ஓடச் செய்தது. இன்று பிலிப்பைன்ஸ் கெரில்லாக்களை அமெரிக்கப் படைகளால் கூட அணுக முடியவில்லை. இந்திய அரசின் கொல்லைப் புறத்தில் நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் மன்னராட்சியை அழித்துத் தலை நகரைக் கையகப்படுத்தியது.
ஆக, தெளிவான அரசியல் வழிமுறையும் அதன் வழியில் கட்டமைக்கப்பட்ட மக்கள் இராணுவமும் இல்லாமை புலிகளை அழிப்படக்கூடிய இயக்கமாகவே பேணி வந்தது. ஏகாதிபத்தியங்கள் அழிப்பின் வழிமுறையைத் தமது எதிர்கால நலன்களுக்கு ஏற்பவே திட்டமிட்டன. மக்கள் அழிவில்லாமல் புலிகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தால் போராட்டம் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிராது. ஆக, இலகுவில் அழிக்கப்படக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை பேரழிவின் ஊடாக அழித்தமைகான காரணங்கள் தெளிவானவை. அவ்வாறான கோரமான அழிப்பின் பலனை இன்றைய அமெரிக்கத் தீர்மானம் அறுவடை செய்திருக்க்றது.
ரனில் விக்ரமசிங்க இப்போது போர்க்குற்றங்களுக்குப் புலிகளே பொறுப்புக்கூற வேண்டும் என பேரினவாதத்திற்குத் தீனி போட்டிருக்கிறார். கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தடைகள் விதிக்கப்படும், யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டிக்கப்படுவர் ஆகிய அச்சத்திலிருந்து நாட்டு மக்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆக, அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானம் இலங்கையில் பேரினவாதக் கோட்பாட்டை வளர்த்து சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை ஆழப்படுத்தும் என்பது தெளிவானது.
புலிகள் தங்கள் மூளையில் இயங்கியிருந்தால் இன்றும் அவா்கள் வாழ்ந்திருப்பாா்கள் நமது கருத்துக்களோ வேறுவிதமாக இருந்திருக்கும். அதாவது கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை அவா்கள் பாதையில் விட்டுவிட்டு கொில்லா யுத்தத்திற்கு மறுபடியும் சென்றிருந்தால் நிலையே வேறு, ஆனால் அவா்கள் புலம்பெயா் புலிகளின் மூளையில் இயங்கியதால் கடைசிவரை அமொிக்கா வரும் இந்தியா வரும் என்று நம்பி ஏமாந்துபோனாா்கள்.
இதை புாிவதற்கு நிறைய தத்துவங்கள் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.
EVER LASTING BUTCHERING BY BARBARIANS ON MINORITIES THAT TOO THE VERY OLD HOLY HINDUS AND DISCIPLINED CHRISTIANS COULD BACKFIRE IN NO TIME. NO CHINA CAN DO ANYTHING AS ANY ACTION BY ANY FRUSTRATED MASSES COULD ACHIEVE THEIR TASK IN MINUTES IN FUTURE. ALL GROUPS OF RUTHLESS NATURE HAS TO COME CLEAN.