மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் (UPFA) வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா. எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிரிபால டி சில்வா ஆகியோர் மைத்திரிபால சிரிசேனவின் இச்செய்தியை மகிந்த ராஜபக்சவிற்கு இன்று கண்டியில் தெரிவித்தனர்.
இந்த அடிப்படையில் மகிந்க ராஜபக்ச ஒரு பொது உடன்பாட்டிற்கு வருவதற்கு இணைங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அமெரிக்க அரசின் ஆதரவுடன் நல்லாட்சியை நிறுவப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிரிசேன பல்வேறு கொலை மற்றும் ஊழல் குற்றங்களோடு தொடர்புடைய மகிந்த ராஜபக்சவுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
உலகறிந்த இனக்கொலையாளி ராஜபக்ச இலங்கை அரசியலில் மீண்டும் நுளைவதற்கான கதவுகளை அவரின் முன்னை நாள் அமைச்சரான மைத்திரிபால சிரிசேன திறந்து விட்டுள்ளார். மகிந்த ஆட்சிக்காலத்தில் கொலை முயற்சியிலிருந்து தப்பிய மைத்திரிபால சிரிசேன மகிந்தவிற்கு எதிராக வாக்களித்த மக்கள் அனைவரையும் ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே ஏமாற்றியுள்ளார்.