Wednesday, May 14, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பணத்துக்குள் புதையுண்டு போகும் மலையகக் கல்வி: சை .கிங்ஸிலி கோமஸ்

இனியொரு... by இனியொரு...
03/01/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

thalawakelleஇந்திய தத்துவ ஞானி ஜெ.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் சில வார்த்தைகள் கீழ் காணுமாறு எழுதப்பட்டுள்ளது. ‘ கல்வி கற்காத ஒருவன் கல்விமான் ஒருவனை விடவும் அதி உயர் மானிட பண்புகளைக் கொண்டவனாக இருப்பான். அதற்கு காரணம் போட்டிப் பரீட்சைகளையும், பட்டங்களையும் கொண்டு அறிவினை அளவீடுசெய்யும் நிலைமை எம்மத்தியில் காணப்படுகின்றது. மிகவும் முக்கியமான மனித உணர்வுகளை புரம் தள்ளிவிட்டு கொடுரமான மனித பண்புகளுடனான மனவளர்ச்சியையே நாம் கொண்டுள்ளோம். அறிவு என்பது தேவையானவற்றை தேடுவது அல்லது தேடல். அதாவது இருக்கும் ஒன்றின் ஊடாக பலவற்றை தேடிப் பெறுவது ஆகும். இவ்வாறு தேடியதனை தன்னுள்ளேயும் மற்றவர்களுக்குக்குள்ளேயும் பரினமிக்க செய்வது அறிவு என்று கூறியுள்ளார்.

இதற்கு நேர் எதிரான மலையக கல்வி நிலைமை பயணித்துக்கொண்டிருப்பது வேதைனைக்குறிய விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் மலையகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில், இவ்வாறு நடந்தேரிக் கொண்டிருக்கும் போது வேறு விதமாக பணம் சம்பாதிக்கும் முறைமை ஒன்றினை மற்றும் ஒரு நிறுவனம் அரங்கேற்றி வருகின்றது.

யுனெஸ்கோ நிறுவனத்தின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் உலகின் அனைத்து சிறுவர்களுக்குமான ஆரம்பக்கல்வி என்னும் திட்டமும் அதனை தொடர்ந்து கல்வி என்பது சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி சுதந்திர கல்வி என்று அர்த்தப்பட்ட போதும் உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் படி சமூக, அரசியல், கலாசார பிரகடனங்களின் அடிப்படையில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும் கல்வி என்பது சுதந்திரம் அல்லது தேவை என்பதனை விட அது உரிமை என்று கூறப்பட்டுள்ளது. இந்த கல்வி உரிமை எங்கெல்லாம் எவ்வாறு மீறப்படுகின்றது அல்லது சுரண்டப்படுகின்றது என்று நோக்கும் போது மலையகம் இதற்கெல்லாம் மிகச் சிறந்த உதாரணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சைக்கான அனுமதியினைக் கூட பணத்திற்கு விற்பனை செய்த பாடசாலை ஒன்று தொடர்பாக பெற்றோர்கள் தயங்கி தயங்கி தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். மலையகத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்தி சபை என்னும் பெயரில் பற்றுச்சீட்டு வழங்கி 1200 ரூபாய் பணத்தினை சுமார் 200 மாணவர்களிடம் அறவிட்டுள்ளனர். 1200×200 = 240000.00 மேற்படி பணம் கட்டாத மாணவர்களுக்கு பரீட்சைக்கான பணத்தினை வழங்காததன் காரணத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பது மாத்திரம் இன்றி அவர்கள் வீடுகளுக்கு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 1200 ரூபாய் கட்டியப் பின்புதான் அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கட்டிய பணத்தினை பாடசாலை காரியாலயத்தில் கட்டியப்பின் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

2009_mahinda_1000r_fபற்றுச்சீட்டினை வகுப்பு ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டதன் பின்பு பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மிக நுணுக்கமாக திட்டமிட்டு மேற்படி கல்வி வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. எது வித அடையாளங்களும் விடாமல் பணம் சம்பாதிப்பதில் தனது துணிச்சல் மிக்க கொள்ளையினை மேற்படி அதிபர் மிக சாதூர்யமாக செய்துள்ளார். இது தொடர்பாக பல பெற்றோர்கள் முனு முனுத்தவன்னம் இருக்கின்றார்கள். இவர்களிடம் இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முன்வருமாறு அழைத்தப்போது, தங்களின் பிள்ளைகளை பழிவாங்குவார்கள் என்று அஞ்சி நடுங்கியதனைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்களில் ஒருவர் ஏற்கனவே எனது பிள்ளை இது போன்று விடயங்களில் நான் கேள்வி கேட்டதற்காய் படு மோசமாக தண்டிக்கப்பட்டதன் பின் விளைவுகளை அனுபவித்து வருவதாகவும் கூறினார்.

மேற்படி அதிபரிடம் இது போன்ற விடயங்கள் தொடர்பாக சில பழைய மாணவர்கள் கேட்டபோது முடியுமானால் என்னைப்பிடித்துக்காட்டுங்கள் என்றும் அமைச்சர் , கல்வி அமைச்சர், மத்தியமாகாணம் யாராலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். பழைய மாணவர்கள் இவர் தொடர்பாக கூறும் போது, அரசியல் செல்வாக்கு இருக்கும் பிரதேசத்தின் ஒரே அதிபர் இவர் என்பதனால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி விட்டனர். உண்மையிலேயே கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டங்களில் பகிரங்கமாக உரையாற்றிய மேற்படி அதிபர,; குறிப்பிட்ட தொழிற்சங்கத்திற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதன் காரணத்தினால் பல வருட காலமாக ஒரே பாடசாலையில் அதிபராக கடமையாற்றிவருகின்றார்.

இவரது பண வசூலிப்புக்கள் தொடர்பாக பேசுபவர்கள் எவரும் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வராததற்கு மேற்கூறிய காரணங்கள் மாத்திரம் இன்றி மேலும் பல விடயங்களை காணலாம்.

அண்மையில் பிரதேசத்தின் ஒரு பணக்கார மாணவன் தனது தந்தையின் காரை திருடிக்கொண்டு மற்றும் ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு ஓடி போய்விட்டான். ஆனால் பாடசாலை மட்டத்தில் தண்டிக்கப்பட்டது பணக்கார மகனுக்கு பதிலாக துணைக்கு போன ஏழை மாணவன் மாத்திரமே என்று ஏனைய பெற்றோர்கள் கூறி கவலைப் படுகின்றார்கள். குறிப்பிட்ட பணக்கார தந்தை அதிபருக்கு தனிப்பட்ட ரீதியில் பல உதவிகளை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டத்தின் அத்தியாயம் ஒஎii இன்படி பொது மக்களிடம் இருந்து நிதியை சேகரிக்க பாளுமன்றத்தின் முடிவின் படி திரை சேகரிக்கும், திரை சேரி அங்கீகாரம் வழங்கும் திணைகளங்;களுக்கும் மாத்திரமே முடியும். ஆனால் 1940-1959 காலகட்டத்தில் இலவச கல்விக்கான சுற்றரிக்கை 5ஃ59 இன் மூலமூம் 1960-1972 இலவசக்கல்வி அறிமுகத்திற்காய் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதனையும், தொடர்ந்து பாடசாலைகளின் நிதி மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு பூரணப்படுத்தப்பட்டது. 1962 மார்ச் 30 ஆம் திகதி 9ஃ4ஃ28 என்னும் விசேட சுற்றரிக்கையின் படி பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை நிர்மானிப்பதற்கான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இந்த சட்ட திட்டங்கள் தொடர்பாக நோக்கும் போது ஒரு பாடசாலையில் குறிப்பிட்ட தொகை பணத்தினை அரவிடுவதாயின் கல்வி அதிகாரியின் கையொப்பத்துடனான பற்றுச்சீட்டு வழங்கப்படுவது அவசியம். அந்தப் பற்றுச் சீட்டை கட்டாயமாக பணம் வழங்குனருக்கு கொடுக்க வேண்டும். பற்றுச்சீட்டு வழங்கப்படாமல் பெறப்படும் அனைத்து பணமும், சட்டத்திற்கு முரணாக சேகரிக்கப்பட்ட பணமாகும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம் தொடர்பான சரியான இறுதி கணக்கினை கணக்காய்வாளர்கள் நாயகத்திற்கு வருட இறுதியில் அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

எது எவ்வாறிருந்த போதும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக் கோவைக்கமைய இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அரசியல் உரிமையற்றவராவார். அவருக்கு இரகசியமாக வாக்களிக்கும் உரிமை மாத்திமே உள்ளது. ஆனால் மேற்படி அதிபர்கள் அரசியல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக உரையாற்றி இருப்பதுடன் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்காக வாக்குகளை குறுக்கு வழியில் எவ்வாறு பெற்றுக் கொடுப்பது என்றும் உரையாடி உள்ளார்கள். இவ்வாறு உரையாடியதன் பதிவுகள் பலரிடமும் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனவே இலங்கை சட்டங்களுக்கு முரணாக தனது எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் மேற்படி அதிகாரிகளுக்கு எதிராக பொது மக்களும், பெற்றோர்களும் எது வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க மலையகத்தின் கற்றவர்கள் முன் வர வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா?

மலையக மக்களின் கல்விக்கான உரிமைகளை பரிப்பவர்களுக்கு எதிராக பாரிய மக்கள் போராட்டங்களையும், எதிர்ப்பு நவடிக்கைகளையும் எடுப்பதுடன் இவ்வாறானவர்களின் முகத்திரைகளை கிழிக்க வேண்டியது மலையகத்தை நேசிப்பவர்களின் பொறுப்பள்ளவா?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சந்தேகத்திற்குரிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றுக் கோசங்கள்

சந்தேகத்திற்குரிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றுக் கோசங்கள்

Comments 1

  1. Sai Ram says:
    10 years ago

    This may be shock to you in Sri Lanka but we have been facing this kind of attitude in schools & colleges. In schools its far better . In private colleges of Thamizh Nadu, we are forced to pay “breakage fees” every semester. I used to pay in thousands for each semester. Unfortunately, if a lone wolf voices against such day-robbery, he is either victimized or silenced by fellow mates. Moreover, there is lack of associations for students & parents to voice their grievances. There are many among parents who feel like giving away money without questioning. Unless the education system is fund by govt or govt-monitored commercialization of education can’t be stopped.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...