ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு இன்று-24.02.2015- அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். பல்கலைக் கழக சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
வன்னி இனப்படுகொலையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டமாக இது கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தது.
பாராளுமன்றத் தேர்தலை நோக்கமாக முன்வைத்துச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதுடன் போராட்டத்திலும் பங்குபற்றினர்.
அமெரிக்க ஆதரவோடு அமெரிக்காவின் நலன்களுக்காக முன் மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா குழு மேற்கொண்ட விசாரணைக்கான அறிக்கை இன்று அமெரிக்காவினால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அறிக்கை வெளியிடப்பட்டால், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு ஆதரவான நிலை தோன்றும் என்பதே மைத்திரி – ரனில் அரசும் அமெரிக்க அரசும் கூறும் நியாயம்.
ஒரு தேசிய இனத்தின் ஒரு பகுதியை அழித்த கோரம் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு பெருகும் என்ற கொச்சைத்தனமான நியாயத்தை அமெரிக்க ஏகாதிபத்தியமும் இலங்கை அரசும் முன்வைக்கின்றன.
இது வரைக்கும் அமெரிக்காவின் எடுபிடிகள் போன்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய அரசியல் வழி முறை எதனையும் முன்வைக்காமல், சுய விமர்சனமின்றி மக்கள் மத்தியில் நிர்வாணமாக நின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் மத்தியில் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாகவிருந்தது.
ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்றவற்றின் உண்மையான கோர முகத்தை மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றையே மேலும் நம்பக் கோரும் இனவாத அரசியலை முன்வைக்கும் கஜேந்திர குமார் குழுவினர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைத் திசைதிருப்ப முயன்றனர்.
10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான போராட்டம், பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது. சிங்கள மாணவர்களும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டமை புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்து. ஐ.நாவிடம் கையளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை மத குருக்ககள் ஊடாக ஐ.நாவிடம் சேர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டது.
இராணுவம், போலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
உலகின் அழகிய மூலை ஒன்றினுள் குழந்தைகள், முதியோர் என்று பாகுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின்னர், அந்த அழிப்பிற்கான நீதிபதியாக அழிப்பை நடத்திய அமெரிக்காவை நியமித்த அரசியல் வாதிகளே இன்றைய நிலைக்குக் காரணம். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அமெரிக்காவின் உளவுப்படைகைளை நிராகரித்து மக்கள் மத்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். சிங்கள் முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் மத்தியில் மறைக்கப்பட்ட போராட்டத்திற்கான நியாயம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கான ஆரம்பமாக இப்போராட்டம் அமையுமானால் அது தனது நோக்கத்தைப் பூர்த்திசெய்ததாக அமையும்.
ஜோர்டான் நாடு ட்ரான்ஸ்-ஜோர்டான் இலிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஆட்டி ஆள உருவாக்கப்பட்டு பயங்கரவாத நாடகங்கள் பல நடந்தேற்றப்பட்டு ஐக்கிய அமெரிக்கா-இன் ஒரு முக்கிய தளமாகி இன்று மூன்று தசாப்தங்கள். அதுக்குள் இருந்து வந்தவன் தான் இந்த அரச பரம்பரையின் உள்ளகக் கலப்பினால் மந்தகதியில் இயங்கும் வேசக்காரன் இளவரசன் Zஸைட்.
ஜோர்டானிய அரச பரம்பரையின் மூத்த உறுப்பினன், நாட்டு அரசனின் சித்தப்பா ‘ஹஸன் எல் பின் டலால்’ – ஊரைத் தின்ற பாதகன். மனிதவுரிமை ஆர்வலன் என்று வேடந்தரித்து ஐ.சி.ஜி (ICG) மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அதிபாதக சிந்தனை மையங்கள் போன்றவற்றினூடாக தனது வெள்ளைத் துரைகளுக்கு பணிவிடை செய்பவன். ஐ.நா மனித உரிமை ஆணையகத்திலும் பலகாலம் முக்கிய நிரந்தர பதவிகளில் நிலைத்திருந்து அரசியல் செய்பவன். ஈழத்தமிழரில் படி படி என்று படித்து விட்டு ஒன்றும் தெரியாத குழந்தைகள் போல் சர்வதேச மட்டத்தில் திணறுபவரை விட அதி மொக்கன் இந்த ‘ஹஸன் எல் பின் டலால்’ . ஆனால் அவனை ஸ்ரீலங்காவின் பிரித்தானிய தூதுவனாய் இருந்த க்ரிஸ் நோனிஸ் அண்மையிலும் லண்டனில் உபசரித்தவன். மகிந்த ராஜபக்ச-உம் ஜோர்டான் நாட்டுக்கு பல தடவை பயணித்தவன்.
ஐக்கிய அமெரிக்காவின் பாரிய மனித உரிமை மீறல்கலில் முக்கியத்துவமான சர்வதேச சட்டத்துக்கு புறம்பான ஆகாயவழி ஆட்கடத்தல்கள், ரகசிய சித்திரவதைக்கூடங்கள் என ரணில் பிரதமராயிருந்த 2002, 2003 காலகட்டங்களில் ஸ்ரீலங்காவும் ஜோர்டானும் ஒரே சர்வதேச மனிதவுரிமை மீறலில் இணைபட்டவை.
இன்னும் பல கடந்த கால தமிழ் ஆயுதார கோமாளிக் கூத்துகளும் பலஸ்தீன மக்கள் நிரந்தர அகதிகளாய் பெரிதும் அலையும் ஜோர்டானையும் ஈழத்தையும் இணைக்கிறது. இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய இரு நாடுகளும் தற்போதய தமக்குள்ளாலான சுமூக உறவு நாடகத்துக்கும் அப்பால் பலகாலம் ரகசிய ஈடுபாடுகளில் இருப்பது இன்னொரு முக்கிய விடயம். இஸ்ரேலின் கருணை இல்லாவிட்டால் ஜோர்டானின் அரச பரம்பரைக்கு வழியில்லை. இஸ்ரேலைக் காப்பாற்ற ஸ்ரீலங்காவை காரணங்காட்டி ஐ.நா. மனிதவுரிமை மையம் இன்னொருமுறை இழுத்து விழுத்தப்படுகிறது. இப்படி ஏதோ வேறொரு பாதையில் யதார்த்தம் என்றொன்றிருக்க அது இது தான் யதார்த்தம் என்னைப்பார் என்ர அர்ப்பணிப்பைப்பார் என்று சர்வதேச தலைமத்துவ நிலைகளில் தாமும் நிரந்தரமாக நிலைத்திருக்க குழி தோண்டுகிறது ஒரு ஈழத் தமிழ் ஒட்டுண்ணிக் கூட்டம். அதைவிட ஏமாளிகளையும் கோமாளிகளையும் ரவுடிக் கோஷ்டி என்று சொல்லி திசை திருப்புது இன்னொரு அகங்காரம் பிடித்த நாசகாரக் கூட்டம். ஏமாற எனவே வாழும் சில கோமாளிகன் மீண்டும் படங்களை எரிகின்றனர். கொடும்பாவி எரித்ததாம் என்று வடமாகாணசபையும் வாதாடி தனது மொக்குத் தனங்களையும் காட்டுகிறது.
.
யாழில் மக்கள் திரண்டது பெரிய காரியம் ஆனால் அவ்வளவும் ஐக்கிய அமெரிக்காவினால் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட மூச்சு இடைவெளியே என்பதை நாம் உணர வேண்டும்.
இம்மூச்சு இடவெளியிலும் தமிழன் தனக்குள் சண்டையையே பெரிதுபடுத்துவான் என ஊகித்திருந்திருக்கக் கூடிய எந்த விஷமிக்கும் தீன் போடுவதே இனியொருவின் இந்த திசைதிருப்பப்பார்த்தவயள் என்ற குற்றச்சாட்டு.
மைத்திரியைக் கொண்டு வந்தது ராஜபக்சவை காப்பாற்றவே என்று ரஜித சேனாரட்ன வெளிப்படையாக சொன்ன பிறகும் காலத்தை தாமதிக்கும் எச்செயலும் கண்டிக்கப்படவேண்டியது. திசை திரும்பாமல் யாழ் பல்கலைக்கழக சமூகம் பயணிக்குமேயானால் அது எங்கே போகிறது?
வெறுமனே ஐ.நா-இன் குப்பைத்தொட்டிக்கு மகஜர் கையளிப்பதால் ஏமாற்றத்தை விட ஒன்றும் வரப்போவதில்லை.
இளவரசன் Zஸைட் மனிதவுரிமை ஆணையாளனானது எப்படி என்பது பற்றியும் அதன் பின்னணி பற்றியும் விரிவான ஒரு ஆய்வை முன்னெடுக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா அரச பங்குதாரிகள் வரும் ஆறு மாதங்களில் ஐ.நா. மனிதவுரிமை சபையிம் பிடியிலிருந்து தப்ப முயற்சிகள் எடுக்கப்படும் என்று எவ்வளவோ வெளிப்படையாக சொன்னபிறகும் , எப்படி அது பற்றி ஐ.நா. மனிதவுரிமை சபை கவனம் செலுத்தவில்லை?
குருணாகலில் ரணில் விக்கிரமசிங்க ஜெனீவா அறிக்கை பிற்போடப்பட்டது வடமாகாணசபை முதலமைச்சருக்கு கன்னத்தில் அறைவதற்கு மட்டுந்தான் என்று பொருள்படக் கூட வெளிப்படையாக சொல்லியுள்ளான்.
தேசிய இனங்களின் வளர்ச்சி என்பது நிலப்பரப்பு, பொருளாதார உறவுகள், மொழி, கலாச்சாரம், மனப்பாங்கு மேலும் ஜனநாயக பண்பைக் கொண்டு வளர்த்துக் கொள்ளும் நோக்கில் அமைந்ததாக விஸ்தரிக்கப்பட வேண்டும்.