சென்ற ஆண்டு இதே நாளில்தான் அந்த கோர நிகழ்வு நடந்தது. ஆதிக்க சாதி இந்து ஒருவர் தனது வீட்டைச் சுற்றி தலித் மக்களின் குடியிருப்பை தனிமைப்படுத்திக் கட்டிய கற் சுவர் தலித் மக்களின் குடிசை மீதும், ஓட்டு வீடுகள் மீதும் விழுந்ததில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என 17 பேர் இரவோடு இரவாக உயிரிழந்தனர். இந்த கொடிய நிகழ்வு தமிழகத்தையே உலுக்கினாலும் அது சாதி மனத்தையோ, சாதீய பண்பாட்டை வாழ்க்கையையோ அசைத்துப் பார்க்கவில்லை. காரணம் இந்த மரணங்கள் தொடர்பாக வருந்துவோருக்குள்ளும் கூட சாதி இருக்கிறது. ஆதி திராவிடர் காலனியைச் சுற்றி கட்டப்பட்ட அந்த சுவர் 25 அடி உயரத்தில் கருங்கற்களால் கட்டப்பட்டது. 80 அடி சென்ற ஆண்டு இதே நாளில்தான் அந்த கோர நிகழ்வு நடந்தது. ஆதிக்க சாதி இந்து ஒருவர் தனது வீட்டைச் சுற்றி தலித் மக்களின் குடியிருப்பை தனிமைப்படுத்திக் கட்டிய கற் சுவர் தலித் மக்களின் குடிசை மீதும், ஓட்டு வீடுகள் மீதும் விழுந்ததில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என 17 பேர் இரவோடு இரவாக உயிரிழந்தனர். இந்த கொடிய நிகழ்வு தமிழகத்தையே உலுக்கினாலும் அது சாதி மனத்தையோ, சாதீய பண்பாட்டை வாழ்க்கையையோ அசைத்துப் பார்க்கவில்லை. காரணம் இந்த மரணங்கள் தொடர்பாக வருந்துவோருக்குள்ளும் கூட சாதி இருக்கிறது. ஆதி திராவிடர் காலனியைச் சுற்றி கட்டப்பட்ட அந்த சுவர் 25 அடி உயரத்தில் கருங்கற்களால் கட்டப்பட்டது. 80 அடி நீளம் கொண்ட அந்த சுவர் தலித் மக்கள் தங்கள் பகுதிக்குள் நுழையக் கூடாது என்ற ஒற்றைக் காரணங்களுக்காகவே கட்டப்பட்டது.
மிகச்சரியாக அது தலித் காலனியை விலக்கி வைத்து கட்டப்பட்டது. அன்று இந்த நிகழ்வுக்காக போராடிய பலரும் மிக மோசமான வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் தீண்டாமைச் சுவரைக் கட்டிய அந்த சுவரின் உரிமையாளர் சில நாட்களில் ஜாமீனில் வந்து விட்டார். இதோ ஓராண்டுகள் ஆகி விட்டது.
இறந்த 17 பேரில் ஒரு வீட்டில் ஏழுபேரை மொத்தமாக இழந்தவர்களும் உண்டு. இறந்து போன குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ஈழப்பீடு கொடுத்து தமிழக அரசு கதையை முடித்து விட்டது. உயிரிழப்புகளைச் சந்தித்த தலித் அருந்ததியர் மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள். சுவரையொட்டி தலித் மக்கள் குடிசை போட அரசும் அனுமதிக்கவில்லை.
இதோ. ஓராண்டு ஆகி விட்டது. 20 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்த சுவரை இப்போது 22 அடியாக உயர்த்திக் கட்டிக் கொண்டுள்ளார்கள். சுவர் இடிந்து விழ முடியா தூரத்தில் தலித் மக்களின் ஒரு வரிசை வீடு இப்போதும் அப்படியே நிற்கிறது. தீண்டாமைச் சுவரும் முன்னரை விட அதிக உயரத்தோடு எழுப்பட்டிருக்கிறது.
நீளம் கொண்ட அந்த சுவர் தலித் மக்கள் தங்கள் பகுதிக்குள் நுழையக் கூடாது என்ற ஒற்றைக் காரணங்களுக்காகவே கட்டப்பட்டது.