Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

Under the Bombs -குண்டுகளுக்கடியில்…:ரதன்

இனியொரு... by இனியொரு...
02/02/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

பாலஸ்தீனிய-இஸ்ரேல் போர் பாலஸ்தீனியத்தை இரு பகுதிகளாக பிரித்துள்ளது. காசா, வெஸ்ட் பாங் என்ற இந்த இரு பகுதிகளும் கலாச்சார மாற்றங்களையும் கொண்டுள்ளன. கமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசா தீவிர இஸ்லாமிய கலாச்சாரத்தை கடைப்பிடிக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். குண்டுகள் இவர்களின் விளையாட்டகங்கள் உட்பட்ட பலவற்றை அழித்துவிட்டது. கமாஸ் திரை அரங்குகளை மூடிவிட்டது. இசையை அங்கு அரிதாகவே கேட்கலாம். இஸ்ரேல்   குழந்தைகள் விளையாட்டு பொருட்களை தடை செய்துவிட்டது. கடத்தலில் வரும் விளையாட்டு பொருட்களே குழந்தைகளிடம் உள்ளது. குண்டுகள் குழந்தைகளை கொல்கின்றன. தீவிரவாதிகள் பிள்ளை பிறப்பை அதிகரிக்க உற்சாகப்படுத்துகின்றனர். உலகிலேயே அதிக பிள்ளை பிறக்கும் பிரதேசம் காசாவாகும். இங்கு சராசரியாக 5.1 பிள்ளைகள் ஒரு பெற்றோருக்கு பிறக்கின்றன. பெரும்பாலான மக்கள் வெளி உலகத்தை அறியாதவர்கள். 70 வீதமானேரின் மாத வருமானம் வெறும் ஒரு டொலருக்கு குறைவானவையே. உலகின் முதல் தோன்றிய குடியிருப்புக்களில் காசாவும் ஒன்று கி.மு 3000ம் ஆண்டளவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

 2006 கோடை காலம் இஸ்ரேலிய துருப்புக்கள், லெபான் மீது தொடர்ச்சியாக 34 நாட்கள் குண்டுகளை வீசித் தள்ளின. இந்த போருக்கான ஆரம்பம் ஹிஸ்புல்லா படைகளால் என கூறப்படுகின்றது.  யூலை 12ம் நாள் இரண்டு இஸ்ரேலிய படை வீரர்களை கைப்பற்றியமையே காரணம் என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதற்கு முன்பாக ஹமாஸ் படைகள், இஸ்ரேலிய இராணுவ அதிகாரி Gilad Shalit  ஜ கைப்பற்றி, பல ஆயிரம் ஹமாஸ் கைதிகளை விடுதலை செய்யக் கோரியது. இதன் தொடர்ச்சியே ஹிஸ்புல்லாவின் நடவடிக்கை. விளைவு இஸ்ரேல் வழமை போல் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி குண்டு மழை பொழிந்தது. இதற்கு பதிலளித்த ஹிஸ்புல்லா படைகள் C-802 Silkworm missile மூலம் இஸ்ரேலிய கப்பலை மூழ்கடித்தது. இறுதியில் ஒரு மில்லியன் அரபு மக்கள் அகதிகளாயினர். பல ஆயிரம் அரேபியர்கள் கொலை செய்யப்பட்டனர்.

 இந்த போர் உச்சத்தில் இருந்த ஒரு நாள் பெய்ரூத் வாடகை கார் நிலையம் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. தெற்கு லெபானானை நோக்கி குண்டு மழைகள் பொழிந்த வண்ணமிருந்தன. புல கட்டிடங்கள் வீழ்வதையும் பெரும் புகை மண்டலம் கிளம்பிக் கொண்டிப்பதையும் காணக்கூடியதாhக இருந்தது. அமெரிக்க – ஈராக் போரின் போது இக் காட்சிகளை தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். மக்கள் திசை கெட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். வன்னி இறுதிப் போரை நினைவு படுத்தும் காட்சிகள். குழந்தைகள் பெற்றோரை தேடிக் கொண்டிருந்தன. Zeina (Nada Abou Farhat)  வாடகை கார் ஒன்றை தேடிக் கொண்டிருந்தார். பலர் தெற்கு லெபனானுக்கு செல்ல மறுத்து விட்டனர். அனைவரும் டமாஸ்கஸ் வரை செல்லத்தான் விரும்பினர். இறுதியாக ரொனி இதற்கு உடன்படுகின்றார். சினா முதலிலேயே கறாராக “எவ்வளவு காசு” எனக் கேட்கின்றார். 300க்கு உடன் படுகின்றனர். முதலில் 150ம், இறங்கும் பொழுது மிகுதி 150ம் என தீர்மானமாகின்றது. சினா ஓர் இளம் பெண். சுமார் 35 வயது மதிக்கத்தவர். வசீகரமானவர். வுழமையான அரேபிய பெண்களைப் போலல்லாது நாகரீகமாக உள்ளார். தலையைச் சுற்றி துண்டு அணியவில்லை. ரொனிக்கு ஆரம்பம் முதலே சினா மீது ஒரு கண்.

 இவர்கள் மிகவும் கடினமான பாதையில் பயணிக்கின்றனர். ரொனி மீண்டும், மீண்டும் கேட்ட பின்னர், சினா தான் தனது மகனையும், சகோதரியையும் தேடிச் செல்வதாக கூறுகின்றாள். ரொனிக்கு வாடகைக் கார் ஓட்டுவதை விட, பகுதி நேரமாக அகதிகளுக்கு மருந்துகள் விற்பனை செய்வதுமுண்டு . ரொனி, சினாவை முதல் ஒரு முகாமில் விட்டு விட்டு தனது பகுதி நேர மருந்துகள் வாங்க சென்று விடுகின்றார். சினாவும், கணவனுவும் அண்மையில் பிரிந்து விட்டனர். மகன் தங்களது சண்டைகளால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சகோதரி மகாவுடன் மகனை அனுப்பிவிட்டு டுபாய் சென்று விடுகின்றார். போரின் போது தெற்கு லெபனான் மிகவும் பாதிக்கப்பட்டதை அறிந்தே இங்கு வந்துள்ளார்.

 இவர்களது தேடும் படலம் தொடர்கின்றது. இறுதியாக ஒரு உடைந்த கட்டிடத்தின் முன்னால், அங்குள்ளவர்களால் சினாவின் சகோதரி மகா குண்டு வீச்சில் இறந்தது உறுதிப்படுத்தப்படுகின்றது. மகன் கரீம் உயிருடன் இருப்பது உறுதியாகின்றது. பிரென்ச் ஊடகவியலாளர்கள் கூட்டிச் சென்றதாக கூறுகின்றனர்.

மகாவின் மரணம் சினாவை மிகவும் பாதிக்கின்றது. போரை நோக்கி சினா எழுப்பும் கேள்விகள் நியாயமானவை. அன்றிரவு அங்குள்ள விடுதியில் தங்குகின்றனர். இரவு மகாவை நினைத்து அழுகின்றார். மகாவின் உடலைக் கூட சினா காணவில்லை. சினாவின் துயரம் வார்த்தைகளாக வெடிக்கின்றது.

“Let them bury her themselves”

“They didn’t ask her opinion nor mine either, even for this war”

“No…it is not my war…..it is not yours”

 இவை மிகவும் முக்கியமானவை. இந்தப் போரைப்பற்றி எங்களிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை. இறந்தவர்களிடமும் கேட்கவில்லை. நாங்கள் போரில் யார்?  இறக்கப்படுபவர்கள். எங்களது எண்ணிக்கையில் தான் உங்களது அரசியல் உள்ளது.

 சினாவின் மற்றொரு கேள்வி மிகவும் உக்கிரமானது

“இது எனது போரல்ல… உனதுமல்ல…”.

இந்த உனது என்பது பலரை நோக்கி வீசப்படுகின்றது. குண்டுகளை வீசும் இராணுவ வீரர்களுக்கும் இது பொருந்தும். போரை காவிச் செல்பவர்கள் இந்த இறந்தவர்கள், இராணுவ வீரர்கள், காயமடைந்தோர், அகதிகள்.

போரை நடாத்துவோர் பெரும் அறைக்குள் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள்.

இறுதியாக கேட்கின்றார் “Do we have the right to live”

”நாங்கள் உயிர் வாழ்வதற்கு உரிமையுண்டா?” இது உலகெங்கும் போரால் பாதிக்கப்படும் மக்களின் குரலாக வெளிப்படுகின்றது. அண்மையில் வன்னி மக்களின் அவலக் குரலாக எதிரொலிக்கின்றது.

சினா ஒரு அறைக்குள் அழுது கொண்டிருக்கும் பொழுது மற்ற அறையில் ரொனி விடுதி வரவேற்பாளருடன் உறவு கொண்டிருக்கின்றார். இது தான் மனித இயல்பா? சினாவின் பெரும் அலறும் சத்தத்தைக் கேட்டு ரொனி மற்ற அறைக்கு உறவை இடையில் விட்டு விட்டு ஓடிச் செல்கின்றார்.

 மறு நாள் இவர்களது பயணம் தொடர்கின்றது. இப்பொழுது சினா வழமையான அரேபிய பெண்களைப் போல் முழு நீள உடையணிந்து முக்காடிட்டு காணப்படுகின்றார். வண்டிக்கு பெற்றோல் அடிக்க ஒரு பெற்றோல் நிலையத்திற்கு செல்கின்றனர். இது குண்டு வீச்சால் முற்றாக சேதமடைந்துள்ளது. நிலைய முதலாளி, தனது மகன் வெளி நாட்டில் வேலை பார்க்கின்றார். அவர் அனுப்பும் பணம் மூலம் நிலையத்தை புதுப்பிக்கப் போவதாக கூறுகின்றார். சினாவின் பெருமூச்சில் இயக்குனரின் தொனி வெளிப்படுகின்றது. உடைந்த கட்டிடத்தை புதுப்பிக்கலாம், அழிந்த நகரத்தை உருவாக்கலாம், வீடுகளை கட்டலாம். இறந்த உயிர்களை புதுப்பிக்கலாமா? சினாவின் சகோதரி மகா திருப்பிக் கிடைப்பாரா?

 பல முகாம்கள் ஏறி இறங்கி ஒருவாறு சினாவின் மகன் கரீம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகின்றனர். மற்றொரு நகரத்தில் உள்ள கிறிஸ்தவ விடுதியில் கரீம் உள்ளார். கரீமுடன் சினா கைத்தொலை பேசி மூலம் கதைக்கின்றார். கரீம் எதுவுமே கூறவில்லை. அந்த நகரத்தை நோக்கிச் செல்லும் போது இருண்டு விடுகின்றது. ரொனியின் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்குகின்றனர். அந்த நண்பர் இஸ்ரேலில் சென்று வேலை செய்ய விரும்புகின்றார். அவருடன் ரொனி சண்டை பிடிக்கின்றார். எதிரியின் வீட்டில் சென்று வேலை செய்வதா?  அங்குள்ள மற்றொரு நண்பர் “நாங்கள் கிறிஸ்தவர்கள், எங்களையும் இஸ்ரேலியர் அரேபியராகத்தான் கருதுகின்றார்கள்” என கவலைப்படுகின்றார்.

 சினா இரவே அங்கு சென்று விடவேண்டும் என பிடிவாதம் பிடிக்கின்றார். ரொனியின் நண்பர்கள் அது மிகவும் கடுமையான பாதை. இஸ்ரேலியரின் ரோந்து அதிகம். வாகனத்தைக் கண்டாலேயே சுட்டு விடுவார்கள் எனக் கூறி தடுக்கின்றனர். அரை மனதுடன் சினா உடன் படுகின்றார். அங்கு சினா, ரொனியுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பொழுது, ரொனி இப்பொழுதே அங்கு செல்வோம் எனக் கூறி செல்கின்றனர்.

 கடுமையான பாதை. ஆளரவமற்றுள்ளது. வாகனங்கள் எதுவுமே இல்லை. சிறிது தூரத்தின் பின்னர் ரொனி வாகனத்தின் முன் பக்க விளக்குகளை அனைத்து விட்டு வாகனத்தை ஓட்டுகின்றார். வாகனம் இடையில் நின்று விடுகின்றது. வாகனத்தை அப்படியே விட்டு விட்டு நடந்து பல மைல்களை கடக்கின்றனர். காலையில் கரீம் தங்கியுள்ள விடுதியை சென்றடைகின்றனர்.

 கரீமின் தங்கியுள்ள அறைக்குள் சினா செல்கின்றார். அங்கு கரீமின் ஜக்கெட்டை அணிந்து கொண்டு ஒரு சிறுவன் காணப்படுகின்றான். கரீம் எங்கே? சுpனாவின் கேள்விக்கு?……………

“என்னிடம் ஜக்கெட்டை தந்து விட்டு குண்டுகளுக்குள் இறந்து விட்டான்”.

 படத்தின் இயக்குனர் Philippe Aractingi  லெபனானைச் சேர்ந்தவர். கதையை மட்டும் மனதில் கொண்டு போர் முடிந்து பத்து நாட்களுக்குள் தெற்கு லெபனானில் படத்தை எடுத்துள்ளார். போரின் புழுதி படம் முழுவதும் காணப்படுகின்றது. “பாதிக்கப்பட்வர்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும்” என்பதற்காகவே இதனை போர் முடிந்த சில காலங்களில் படமாக்கினேன் என இயக்குனர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கத்தியர்களுக்கு “போர் ஒரு கோப்பை தேநீர், எங்களுக்கு போர் தான் வாழ்க்கை” இதனை எனது படத்தில் நிறுவியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார். வழமை போல் இல்லாமல் முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் திரைக்கதை மெருகூட்டப்பட்டு பின்னர் மிகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் வரும் பல காட்சிகள் பாதிக்கப்பட்ட மக்கள் நிஜமாக கூறியவை.

 பாதிக்கப்பட்ட மக்களின் துக்கங்களை கமரா காவிச் செல்கின்றது. படத்தில் இறந்த உடல்கள் காட்டப்படவில்லை. அவர்கள் அங்குள்ள உடைந்த கட்டிடங்களின் சிதைவுகளின் கீழ், கால்வாயினுள், சாய்ந்த மரங்களின் கீழ் உள்ளனர். அந்த எதிரொலி படம் முழுவதும் உள்ளது.

 வழமையான போர் படங்கள் ஒன்றில் அரசு சார்பாக இருக்கும் இல்லையேல் தீவிரவாதிகள் பக்கமாக இருக்கும். முதன் முதலாக ஒரு படம் மக்கள் சார்பாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய பாத்திரங்கள் இருவரும் போரை எதிர்த்தாலும், தங்களது தேசிய நலனின் மீத அக்கறை கொண்டவர்கள். ரொனி தங்களது முதல் எதிரி இஸ்ரேல் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார்.

 உடைக்கப்பட்ட துண்டுகளை ஒன்றினைக்க முற்படமால், உடைவுகளாகவே படமாக்கியுள்ளார். சிதைவுகளில் இருந்து சிற்பத்தை செதுக்குவது போல் , காட்சிகளின் சுதந்திரத்தை சிறகடிக்காமல் திரைப்படத்தை தொகுத்தளித்துள்ளார். படத்தின் action image  இக் காட்சிகள் தான்.

 கமாஸின்; சிறையில உள்ள் இஸ்ரேல் இராணுவ வீரர் Gilad Shalit  ன் தந்தை நோம், காசா மக்களை நோக்கி பத்திரிகையாளர்களுடாக தெரிவித்த செய்தி “உங்களின் விரும்பிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். பெண்கள், சிறுவர்கள், அப்பாவிகள்…. ஒரு பெற்றோராக பல்லாயிரம் பெற்றோரிடம் கேட்கின்றேன் எனது குடும்பத்தின் துயரத்தை விளங்கிக்கொள்ளுங்கள்.;.( Some of your loved ones have been killed-women and children, young and innocent…..As a parent speaking to a multitude of parents, I ask you to understand my family’s anguish.)

இதனை இஸ்ரேலிய அரசு விளங்கிக் கொள்ளும் வரை, இந்தத் தாயின் வலியை நாங்கள் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் மோசமான முறையில்...:அனைத்துலக மன்னிப்புச்சபை.

Comments 10

  1. thamilmaran says:
    16 years ago

    இந்த பேச்செடுத்தாலேநென்செல்லாம் நெருப்பாகும் கனம்.வெந்த புண்ணீல் வேல் பாய்ச்சும் ரணம். எல்லாக் குரல்களூம் அடங்கி அங்கு மனித இனமே மரித்துப் போனாலும் கண் மூடித் தூங்கும் உலகம்.பாரதி கேட்டான் விதியே மனிதச் சாதியை என்ன செய்ய நினைத்தாய்/

  2. kanthan says:
    16 years ago

    இப் படத்தை புலம் பெயர் புலிகளுக்கு போட்டு காட்ட வேண்டும். இது எனது போரல்ல… உனதுமல்ல…”. இது முக்கியமானது. நடந்து முடிந்த போரின் விமர்சனமாக இக் கட்டுரை உள்ளது. நிஜமும் அது தான். நடந்த போரில் இரு பக்கங்களும் அழித்தது மக்களையே.

    • எதிர்வு says:
      16 years ago

      அழிவற்றது போராட்டமல்ல.வல்லது வாழும் என்பது வெளிப்படையானது.இழப்புகள் என் சார்ந்தவர்களுக்கு நடக்கும் போது வலிதான். தத்துவங்கள் மனிதத்துவம் பேசத் தூண்டும்.இரட்டைக் கோபுரத்திற்காக இருநாடுகளை அழித்தாலும் போரின் கொடுரம் மேனாட்டானுக்குத் தெரியாது,ஒரு விளையாட்டின் முடிவு போல மதுவருந்தி,வெற்றியையும்,தோல்வியையும் களிப்புடன் முடிக்கிறான்.அடுத்த வெற்றிக்காக பயிற்சி எடுக்கிறான்.வென்றவன் அரசாளுவான்,சினிமாவும் எடுப்பான்.தோற்றவன்,தன் சார்பில் சினிமா எடுத்து,தத்துவம் சொல்லி வென்றவனை வாழ வழி செய்கிறான்.கதை,கட்டுரை வரைபவனின் நிலையும் அவ்வாறே.

    • Shiva says:
      16 years ago

      எதிர்வு:
      தயவுசெய்து இப்படி எல்லாரையும் இன இடிப்படையில் கொச்சைப் படுத்தாதீர்கள்.

  3. எதிர்வு says:
    16 years ago

    அட சிவனே!
    என் கருத்தில் எங்கே ‘எல்லாரையும் இன இடிப்படையில் கொச்சைப்’படுத்தியிருக்கிறேன்?
    என் தமிழே எனக்கு எதிரியாகிறதோ?
    உன் பார்வையை எனக்குத் தெளிவுபடுத்தப்பா?

    • Shiva says:
      16 years ago

      எதிர்வு:
      தயவு செய்து எல்லார் நன்மைக்காகவும் சொற்களைக் கவனமாகப் பயன் படுத்துங்கள்.:
      “இரட்டைக் கோபுரத்திற்காக இருநாடுகளை அழித்தாலும் போரின் கொடுரம் மேனாட்டானுக்குத் தெரியாது,ஒரு விளையாட்டின் முடிவு போல மதுவருந்தி வெற்றியையும் தோல்வியையும் களிப்புடன் முடிக்கிறான்.”
      இதில் உள்ள சொற்கள் மேனாட்டானைப் பற்றியவையில்லையா?
      நம்மவர் என்ன மேலா?

      பயனுள்ள போர் எதிர்ப்புச் சிந்தனைகள் சிலரிடமிருந்தாவது வரும் போது வரவேற்க முடியாவிட்டாலும் கேலி செய்யாமலாவது இருக்கலமல்லவா.

      • எதிர்வு says:
        16 years ago

        siva! மேனாட்டான் என்பது ஆளுமைக்குரிய சொற்பதம்,இனத்தைக் குறிப்பதற்கல்ல.அதை இனமாகப் பார்த்தாலும் அந்த இனத்திடம் போரின் கொடுரம் பற்றிய சிந்தனையை விட,ஆயுதத் தொழில் வருமானத்தை பற்றிய சிந்தனையே அதிகம்.அதிகாரமும், ஆளுமையும் உள்ளவர்களின் எண்ணப்பாடே ஒரு பொதுமைப்படுத்தப் படுகிறது. புறம்போக்குகளின் வெளிப்பாடுகள் புனிதமானவையாகலாம்.ஆனால் புறம் தள்ளப் பட்டுவிடும். என் கருத்தில் இடர் கண்டு நீங்கள், எந்த எசமானுக்காக இரக்கப்படுகிறீர்கள்? ஆளுபவனுக்கு போர் சிந்தனையும்,அங்கலாய்ப்பவனுக்கு போர் எதிர்ப்பு சிந்தனையும் எப்படி ஒரேயடியாக வருகிறது?

        இந்த சிந்தனைகளை கேலி செய்யக்கூடாது.கேள்விக்குரியதாக்கு,இல்லையெனில் கேவலப்படுத்து என்பதே என் கருத்து.

      • எதிர்வு says:
        16 years ago

        siva!

        மேனாட்டான் என்பது ஆளுமைக்குரிய சொற்பதம்,இனத்தைக் குறிப்பதற்கல்ல.அதை இனமாகப் பார்த்தாலும் அந்த இனத்திடம் போரின் கொடுரம் பற்றிய சிந்தனையை விட,ஆயுதத் தொழில் வருமானத்தை பற்றிய சிந்தனையே அதிகம்.அதிகாரமும், ஆளுமையும் உள்ளவர்களின் எண்ணப்பாடே ஒரு பொதுமைப்படுத்தப் படுகிறது. புறம்போக்குகளின் வெளிப்பாடுகள் புனிதமானவையாகலாம்.ஆனால் புறம் தள்ளப் பட்டுவிடும். என் கருத்தில் இடர் கண்டு நீங்கள், எந்த எசமானுக்காக இரக்கப்படுகிறீர்கள்? ஆளுபவனுக்கு போர் சிந்தனையும்,அங்கலாய்ப்பவனுக்கு போர் எதிர்ப்பு சிந்தனையும் எப்படி ஒரேயடியாக வருகிறது?

        இந்த சிந்தனைகளை கேலி செய்யக்கூடாது.கேள்விக்குரியதாக்கு,இல்லையெனில் கேவலப்படுத்து என்பதே என் கருத்து.

  4. thamilmaran says:
    16 years ago

    சிவா நாங்கள் இங்கு மேனாட்டனை விட மோசம்.தண்ணீர்பாட்டிகளீல்தான் பெரும்பாலும் அரசியலும் இடபெறூம்.

  5. thamilmaran says:
    16 years ago

    வெள்லைக் காரனுக்கு நான்நாட்டான் என்றூ நம்மவர் ஒருவர் சொல்லப்போக அதுவேநானாட்டான் என்ற ஊரானதாம்.அதுபோல் மேனாட்டான் என்றால் மேன்மையானவன் என்றூ நாமெல்லாம் நம்பி இருந்த காலம் இருந்தது.இங்கு வந்து பார்த்தால் எங்கலை விடநீங்கள் மேலே போகிறீர்கள் என்ற புகைச்சல்.உண்மையில்நாங்கள் இங்கு வந்து வெள்லைகலை கொப்பி பண்ணீ இருந்த கோவணமும் இழந்துநிற்கிறோம்.ஆக விமர்சனங்கள் எங்கள் மீது இருக்கும் போதுநம்மையேநாம் திருத்த வேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...