ஐ.நா மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்ற விசாரணை அறிக்கை எந்தப் பெறுமானமும் அற்றுக் கிடப்பில் போடப்படும் நிலை தோன்றியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் வாழும் இனவாதிகள் தம்மிடம் ஒரு அரசியல் வேலைத்திட்டம் உண்டு என்பதைக் காட்டிக்கொள்வதற்கு ஐ.நாவில் தாம் ராஜபக்சவைத் தண்டித்து தமிழீழம் பிடிக்கப் போகிறோம் என மக்களை ஏமாற்றி வந்தனர். ஐ.நாவைச் சுற்றி ஆதரவாகவும் எதிராகவும் இயங்கிவந்த இனவாதிகளிடம் எந்தக் குறிப்பான வேலைத்திட்டங்களும் இருந்ததில்லை. தமது இலக்கை அடைவதற்கு காலாகாலத்திற்குப் பொய்யான நம்பிக்கைகளை மக்களுக்கு வழங்கி மக்கள் மத்தியிலிருந்து தோன்றக் கூடிய புதிய அரசியல் தலைமைகளை அழித்து வந்தனர்.
இன்று நடைபெற்ற ஐ.நா மனித்த உரிமைக் கூட்டத் தொடரில் பேசிய அமெரிக்க அரச துறைச் செயலாளர் ஜோன் கெரி, உள்ளூர் அரசுகளுகு அழுத்தங்கள் வழங்குவதற்காகவே மனித உரிமை பயன்படுத்தப்பட்டது எனக் கூறியுள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்குக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
பர்மா, சிறிலங்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவர்களின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை ஊக்குவித்து உண்மையான மாற்றங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பங்காற்றியுள்ளது.
அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை நிச்சயம் மாற்ற முடியும். எனினும் அது ஒரே இரவில் நடந்து விடாது. அழுத்தங்களின் மூலம் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும், சுதந்திரத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்.
அதே வேளை, இன்று ஆரம்பான ஐக்கிய நாடுகள் சபையின் 28 வது மனிதவுரிமை தொடரின் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கர சமரவீர உரையாற்றியுள்ளார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மனித உரிமை தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரன தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்காவும் இலங்கை அரசும் இணைந்து போர்க்குற்ற ஆவணத்தைக் கிடப்பில் போடுள்ளன.
இதனல் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வேலைத்திட்டம் எனக் கூறிவந்த போர்க்குற்ற விசரணை வலுவற்றதாகிவிட்டது. போர்க்குற்றவாளிகளதும் இனக் கொலையாளிகளதும் கூடாரம் போன்று திகழும் ஐ.நாவில் போர்க்குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை.
இன்று மாற்று வேலைத்திட்டம் அவசியமானது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்காவை மனிதவுரிமை மீறல் அடிப்படையில் தொட்டால் எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்து ஒரு கறுப்பு ஜனாதிபதியைக் கூட தலையில் தூக்கிபிடித்து மனித்வுரிமைத் திடலில் மத்திய புள்ளிக்கு ஊர்ந்துள்ள ஐக்கிய அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடி உண்டாகும். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்த பெரும் நெருக்கடி ஐக்கிய அமெரிகாவுக்கு தற்போது இல்லை ஆனால் ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரேனும் தப்பித் தவறி எப்படியாவது தமக்கு எவ்வாறு 2005 இல் தமிழர் இனவழிப்பை துரிதப்படுத்தும் பந்தம் ஐக்கிய அமெரிக்காவினால் கையளிக்கப்பட்டது என்பதை தெளிவாக (அதாவது ரஷ்ய, சீன புரட்டியடிப்புகளுக்கு அப்பால் …சர்வதேச நீதிமன்றம் இதற்கு ஒரு நல்ல தளம்) வெளிச்சொல்ல வழி ஏற்பட்டால் ஐக்கிய அமெரிக்காவின் ப்ன்னெடுங்கால முகத்திரை கிழியும்.
ஐக்கிய அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்துக்கான ரோம் சாசனத்தில் (Rome Statute), இந்தியாவுடனும் ஸ்ரீலங்காவுடனும் சேர்ந்தே முழுக்கலும் கையெழுத்திடாமல் வெளியே நிற்கின்றது.
ஐக்கிய அமெரிக்கா ரோம் சாசனத்தில் அங்கம் 98 (Article 98) எனும் இடைவெளியைஒரு மனிதவுரிமை மீறல்களை மறைக்கும் யுக்தியாக பாவித்து ஸ்ரீலங்கஅவின் உதவியுடன் பல நாடுகளுடன் 2002 இல் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டு ஆனால் அதை அங்கீகரிக்காது குழப்பித் தள்ளியது. இச் சதி நடந்தேறியது 2001 – 2003 காலப்பகுதியில்.
இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ரோம் சாசனத்தில் கையொப்பமிடாத நாடுகளின் பட்டியலிலேயே திகழ்கின்றன.
ஐக்கிய அமெரிக்கா ரோம் சாசனத்தையே பாவித்து ‘பாரிய அழிவாயுதங்கள்’ (WMD) பாவிக்கும் சர்வதேச பயங்கரவாதம் எனும் சாட்டோடு ஈராக் நாட்டை சின்னபின்னமாக்க வெளிக்கிட பெரிதும் உதவிய நபர்களின் பட்டியலில் அன்றைய அவுஸ்திரேலிய ஐ.நா பூச்சி பாலித கொஹனா-உம் ஸ்ரீலங்கா-இன் வெளியுறவுத்துறையின் நெடுங்கால சட்ட ஆலோசகன் ரொஹான் பெரேரா-உம் முக்கியமானவர்கள்.
ஜோன் கெரி தனது அடிமையான ஜோர்டானிய இளவரசன் Zசைட்-க்கு ஜெனீவாவில் அறிவுரைகள் வழங்கும் அதே நேரத்தில் நியூயோர்க்-இல் பாலித கொஹோனா ரோஹான் பெரேரா-ஆல் மற்றஞ் செய்யப்படுகிறான். இது ராஜபக்ச சகோதரர்களுக்கு அப்பாற்பட்ட ரணில் விக்கிரமசிங்க-இன் நரித்தனத்தின் உச்சக்கட்டம்.