இன்று -01/10/2015- எதிர்பார்த்தபடி ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசின் ஆதரவுடன் அமெரிக்கா முன்மொழிந்த இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரைக்கும் அமெரிக்காவை பிடித்து ராஜபக்சவைத் தண்டிப்பதே தமது ஒரே அரசியல் என நம்பியிருந்த புலம்பெயர் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ இத்துடன் முடிவிற்கு வந்துள்ளது. இதுவரை காலமும் புலிகளையும், பிரபாகரனையும் முன்வைத்து புலம்பெயர் குழுக்கள் நடத்திய நோக்கங்களற்ற போராட்டங்களால் மக்கள் விரக்த்தியடைந்திருந்தனர்.
அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடுகள் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் நலன்கள் சார்ந்ததல்ல என்பதை சில முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாகக் கூறிவந்த போதும், மக்கள் நேரடியாகவே அதனை உணர்ந்துகொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு சூழலில் கூட புலம்பெயர் நாடுகளில் இதுவரை அமெரிக்க அறிக்கைக்கு எதிரான அடையாளப் போராட்டங்கள் கூட நடைபெறவில்லை என்பது மக்களின் விரக்தியக் காட்டுகின்றது.
ஐ.நா அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கூறப்படிருந்தாலும், அவற்றின் சூத்திரதாரிகள் சுட்டிக்காட்டப்படவில்லை. அடிப்படையில் போர்க்குற்றவாளிகள் என்று கருதப்படும் எவரும் உலகின் எந்தப்பகுதியிலும் அச்சமின்றி உலா வருவதற்கான வாய்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் கொலையாளிகள் மக்கள் மத்தியில் நடமாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எது எவ்வாறாயினும் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் புலம்பெயர் பிழைப்புவாதக் குழுக்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டு புலத்திலுள்ள தமிழர்களை நோக்கு நகர்த்தப்படும் நிலை தீர்மானத்தின் பின்னர் காணப்படும். தவிர ஏகாதிபத்தியங்கள் தொடர்பாக தமிழர்கள் நேரடியான புரிதல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
anna parai varaathu
VERY STRANGE ORDER BY HUMAN RIGHTS COMMISSION OF UN .NO DECISIVE AUTHORITY IN ASKING THE ISLAND NATION O PROBE THE WAR CRIMINAL’S ACTIVITIES ALMOST W/O ANY INTERFERENCE BY OTHER NATION, JUDGES, HUMAN RIGHTS WINGS, AND NOT EVEN THE SPECIFIC FINDINGS OF THE COMMISSION IN THE LAST 4 YEARS ARE MENTIONED FOR VIDEO-CATCHING OF THE CRIMINALS ON THE SPOT AND BEHIND.THE CURTAIN INCLUDING THE JOINT-VENTURE OPERATIONS OF THIRD COUNTRIES. MEEK SURRENDER OF UN AGAIN IS EVIDENT.MINCING HIS OWN WORDS THAT UN FAILED DURING THE TIME OF WAR IN WATCHING THE BUTCHERING OF MINORITIES-HINDUS AND CHRISTIANS- BY THE RUTHLESS ARMY OF THE MAJORITY.
புலம் பெயர் அரசியல் அவளவு லேசில் அழியாது. பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான வருமானத்தை இன்னும் வைத்திருக்கிறது. அது இந்தியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கபூர், கம்போடியா, சீனா, ரசியா போன்ற எல்லா நாட்டு மாபியாக் குழுக்கள், சில அரசுகள் ஆகியவற்றுடன் நேடடியாகவும் மறை முகமாகவும் தொடர்பு கொண்டது. அப்படியான ,மாபியாவை வளர்த்துப் பாதுகாக்க ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், கிழண்டிப்போன பழசுகள், தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் எல்லாம் உள்ளன. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவர இதுவரை பாவிக்கப்பட்ட இக் குழுக்கள் இன்னும் அமெரிக்காவுக்குத் தேவைப்படும்.