உலகம் முழுவதும் 1,034,974 மனிதர்கள் கோரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்துள்ள நிலையில், இன்று மட்டும் பிரித்தானியாவில் 22,961 நோய்த் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரான்சில் அதிகரிக்கும் தொற்றைத் தவிர்க்கும் வகையில் அனைத்து மதுபான சாலைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் கிரிஸ்மஸ் வரையிலும் அதன் பின்னரும் கூட கொரோரா வைரஸ் தொற்று அதிகரிக்கும் பிரித்தானியப் பிரதமர் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றிற்கு எதிராகப் போராடும் அதே வேளை பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு வழி கிடியாது என ஜோன்சன் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை விய்ற்னாம் கியூபா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. வியற்னாமில் இதுவரை 1,096 தொற்றாளர்களில் 35 பேர் வரையிலேயே மரணமடைந்துள்ளனர். கியூபா 29 புதிய தொற்றாளர்களைக் கண்டறிந்த போதிலும் எவரும் மரணிக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது.
இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் உடை உற்பத்தி ஆலை ஒன்றில் கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் பல இடங்கள் பொது முடக்கத்திற்கு உள்ளானது.
உலக முதலாளித்துவம் தனது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
சோவியத் ரஷ்யாவிற்குப் போட்டியாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நலத்திட்டங்கள் பின்னர் போராட்டங்களிலிருந்த மக்களை அமைதிப்படுத்தப் பயன்பட்டது. பெரு வியாபார நிறுவனனங்களின் பாரிய வளர்ச்சியின் பின்னர், சிறித்து சிறிதாகச் சிதைக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள், சமூகத்தின் சம நிலையை உடைத்து புதிய நிதி மூலதன அடிமைச் சமூகம் ஒன்றைத் தோற்றுவித்தது.
இந்த புதிய கட்டமைப்பு கோரோனா போன்ற பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத சூழலுக்கு அதிகார வர்க்கத்தைத் தள்ளியுள்ளது. உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினரை மாபெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா அரசுகள், பெரு முதலாளிகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து வழிகளையும் தேடிக்கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும் இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பு சரிந்து விழும் நிலையே காணப்படுகின்றது.