Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தூத்துக்குடி வேதாந்தா படுகொலை:மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது:ஆலை மீண்டும் திறக்கப்படும்

இனியொரு... by இனியொரு...
06/12/2018
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

தெற்காசியாவின் அரசியல் மையமாக தமிழகம் மாறியிருக்கிறது. இந்துதுவா பயங்கரவாதத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்யும் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் சமூகவிரோதக் கும்பல்கள் தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தைத் திட்டமிட்டு உருவாக்க முயற்சிக்கின்றன. கடந்த வாரம் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புக்களைத் தடை செய்ய வேண்டும் என பாரதீய ஜனதாவின் தமிழகத்தில் குடியேறியுள்ள பயங்கரவாதி ஹெச்.ராஜா அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள் பலரைச் சாட்சியின்றிக் கடத்திய தமிழகக் காவல்துறை அவர்களை அடைத்துவைத்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்ரெரலைட் ஆலையை மீண்டும் திறப்போம் எனக் கூறும் அதன் தலைவர் அனில் அக்ராவால் என்ற தனிமனிதனின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா மதவாதக் கும்பல் செயற்படுகின்றது என்பதற்கான ஆதாரங்களை முன்னதாக இனியொருவில் வெளியிட்டிருந்தோம். தமிழ் நாட்டில் தனது முதலீடுகளை உறுதிப்படுத்தவும் அரசியல் வாதிகளை கையாளவும் சிறீனிவாசன் வெங்கட்கிருஷ்ணன் என்ற தமிழகத் தமிழரை வேதாந்தா அதன் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளது.

தூத்துக்குடி வேதாந்தா படுகொலைகளைத் தொடர்ந்து பாரதீய ஜனதா பயங்கரவாதிகள் தமிழகத்தில் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் போராடும் மக்கள் பிரிவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். வேதாந்தா ஆலையை மீண்டும் திறப்பதற்கும், வேதாந்தாவின் மின் உற்பத்திக்காக காவிரி நீரை முடக்குவதற்கும் திட்டமிட்டுள்ள எடப்பாடி மற்றும் மோடி அரசுகள், ஜனநாயகரீதியான அமைப்புக்களை அழிக்கும் நோக்கில் நடத்தும் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அனைத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வேதாந்தா படுகொலைகளைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ள கைதுகள் உலகின் மனித உரிமை வரம்புகளை மீறும் செயல் என்பதைப் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மக்கள் அதிகாரம் தோழர்கள் தொடர்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பத்திரிகைச் செய்தி :மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி பேரணியை நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். போராட்டத்திற்குப் பின்னர் எங்கள் மீதும், கூட்டமைப்பின் முன்னணியாளர்கள் மீதும், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் மீதும், தூத்துக்குடி சிப்காட், தூத்துக்குடி தெற்கு மற்றும் மத்திய காவல் நிலையங்களில் பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 250 க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.
போலிஸ் வேனைக் கவிழ்த்தது, ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைத்தது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்கியது, போலீசு வாகனத்தை கொளுத்தியது.. என திட்டமிட்டே நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் எங்களையும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரையும் பலிகடா ஆக்கும் முயற்சி நடக்கிறது. எங்களையும் போராட்ட முன்னணியாளர்களையும் ஊபா சட்டம் (UAPA) மற்றும் குண்டர் சட்டம் போன்றவற்றில் கைது செய்து சிறையில் அடைத்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, இந்தப் பின்புலத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
தூத்துக்குடி மாடல் துப்பாக்கிச் சூடு என்பது இந்தியாவில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. துப்பாக்கிச் சூடு பற்றி எனக்கே தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று தமிழக முதல்வர் கூறியது முதல், நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட தூத்துக்குடி சார் ஆட்சியரின் உத்தரவு வரை தூத்துக்குடி கொலைத்திட்டத்தில் பல்வேறு சதிப் பின்னணிகள் உள்ளன. இதில் மத்திய மாநில ஆட்சியாளர்கள், மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கையாட்களாக செயல்பட்டிருக்கின்றனர். இந்தச் சதிகள் ஒவ்வொன்றாக வெளிவரும் சூழலில், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, எங்கள் மீதும் போராட்ட முன்னணியாளர்கள் மீதும் வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது.
மே 22 அன்று நாங்கள் தூத்துக்குடி அருகிலுள்ள மடத்தூர் கிராமத்திலிருந்து பேரணியாக கிளம்பிய மக்களுடன் இருந்தோம். காலை 9 மணி முதல் சுமார் 11.30 வரை மடத்தூர் விலக்கு அருகே மாவட்ட கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தி, மக்கள் மீது தடியடியைத் தொடங்கினர். நாங்கள் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தினோம். மக்கள் கலைய மறுத்து அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகியிருக்கின்றன.
ஆனால், இதே நேரத்தில் நாங்கள் தூத்துக்குடி பனியமாதா கோயில் முன்பு கூடி நகருக்குள் வந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு, வேன் கவிழ்ப்பு முதல் தீ வைப்பு வரையிலான பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. உண்மையில் மடத்தூர் விலக்கில் எஸ்.பி மகேந்திரனால் தடுத்து நிறுத்தப்பட்டதால், துப்பாக்கிச் சூடு நடந்த பின்பே நாங்கள் மூன்றாம் மைல் பகுதிக்கே வர முடிந்தது. பனியமாதா கோயிலுக்கும் மடத்தூருக்கும் சுமார் 6 கி.மீ தூரம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மே 22 போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் நேரலை செய்திருக்கின்றன. நகரம் முழுவதும் சி.சி.டி.வி காமெராக்களில் போராட்டம் பதிவாகியிருக்கிறது. காவல்துறை வீடியோகிராபர்கள் மட்டுமின்றி டிரோன் விமானங்களும் கண்காணித்தன. தாக்கப்பட்ட அரசு அலுவலகங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பிலும் சி.சி.டி.வி காமெராக்கள் உள்ளன. மே 22 இல் பதிவான மேற்கண்ட அனைத்து வீடியோ பதிவுளையும் காவல்துறை வெளியிடட்டும். ஏதாவது ஒரு வீடியோ பதிவில் நாங்களோ மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளோ, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரோ வன்முறையில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இருந்தால், உடனே நாங்கள் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம்.
அப்படி ஒரு சான்றைக்கூட காவல்துறையால் காட்ட முடியாது. இருப்பினும் அரசு எங்கள் மீது அடுக்கடுக்காக பொய்வழக்குகள் போடுவதற்கு காரணம் இருக்கிறது. பிப்ரவரி 2018 இல் குமரெட்டியாபுரம் மக்கள் போராடத் தொடங்கியது முதல் இன்றுவரை நாங்கள் மக்களுடன் இருந்து சட்ட உதவி செய்து வருகிறோம். பொய வழக்குகளில் பிணை எடுப்பது, நீதிமன்றத்தில் பொதுக்கூட்ட அனுமதி பெறுவது, மனுக்கள் தயாரித்து கொடுப்பது, வழக்குகளுக்கு ஆஜராவது எனவும் மே-22 க்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவிக்கான உத்தரவு பெற்றது, மறு உடற்கூராய்வுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.. என சாத்தியமான அளவுக்கு மக்களுடைய போராட்டத்துக்கு துணை நின்றிருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கர்சுப்பு, பாவேந்தன், பார்வேந்தன், மதுரை வழக்கறிஞர்கள், தூத்துக்குடி சங்க வழக்கறிஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து சட்ட உதவிகள் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று இன்றுவரை சட்ட உதவிகள் செய்து வருகிறோம். காவல்துறை அச்சுறுத்தலை மக்கள் எதிர்கொள்வதற்கு எங்களுடைய உதவிதான் காரணம் என்று அரசு நினைக்கிறது. எதிர்காலத்தில் ஆலை திறக்கப்பட்டாலும் நாங்கள் மக்களுடன் நிற்போம் என்ற காரணத்தினால்தான் UAPA, குண்டர் சட்டம் போன்றவற்றை எங்கள் மீதும் பாய்ச்சும்முயற்சி நடக்கிறது.
வழக்குகள் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பின்பும் சட்டவிரோதமாக உள்ளூர் போலீஸ் கைதுகளை தொடர்கிறது. மாநில, தேசிய மனித உரிமை ஆணையங்கள், சி.பி.சி.ஐ.டி, அரசு விசாரணைக் கமிசன் போன்றவற்றில் மக்கள் சாட்சியமளிப்பதைத் தடுக்கவே, வழக்கறிஞர்களான நாங்கள் குறிவைக்கப்படுகிறோம். மே 22 அன்று கொல்லப்பட்ட பிற முன்னணியாளர்களைப் போலவே, நாங்களும் துப்பாக்கிச் சூட்டில் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது ஜூன் 14 வரை எங்களக் கைது செய்ய தடை உயர்நீதி மன்றம் தடை விதித்திருப்பதால் உங்கள் முன் பேசுகிறோம்.
இந்த அடக்குமுறை என்பது எங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. தூத்துக்குடி மாடலின் பின்னால் உள்ள குற்றவாளிகளை, தமிழகத்தின் கட்சிகளும் மக்கள் இயக்கங்களும் போராடித் தண்டிக்கத் தவறினால், இந்த தூத்துக்குடி மாடல் அடக்குமுறை தமிழகம் முழுக்க எல்லா மக்கள் போராட்டங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கும் விரிவாக்கப்படும். இதற்கெதிராக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் போராடவேண்டுமெனக் கோருகிறோம்.

தங்கள்
சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...