தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய அரசியல் முன்முகமாகத் தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டு புலம்பெயர்ந்த ஆதரவைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதிய வாக்குப் பொறுக்கும் தந்திரமும் தோல்வியில் முடிவடையும் நிலையை அடைந்துள்ளது. இந்திய இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்திருந்த போது மண்டையன் குழு என்ற கிரிமினல் குழுவைத் தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் அணியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது கூட்டைத் தமிழ் மக்கள் பேரவை ஆதரிக்கும் என்று அறிவித்திருந்தது.
இக்கூட்டணியிக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க தமிழ் மக்கள் பேரவையின் “தேசியத் தலைவராரக்” கருதப்படும் வட மாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிராகரித்த காரணத்தால் அதன் ஆரம்பமே கேள்விக்குள்ளாகியுள்ளது.
இலங்கை அரசின் ஊதுகுழலாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான அரசியல் தலைமை என்பது புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதன் ஊடாகவே தோற்றம் பெறலாம். மற்றொரு வாக்குக் கட்சியால் அதனைப் பிரதியிட முடியாது.
பேரினவாதத்திற்கு எதிராகத் தமிழ் இனவாதத்தை முன்வைத்து அதனை வாக்குகளாக மாற்ற முயலும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் செயற்பாட்டையே முன்னெடுகின்றன.