Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பேட்டை ரவுடி’ சுமந்திரனின் இருப்பின் பின்புலம்

இனியொரு... by இனியொரு...
09/22/2016
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

sumanthiranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பேட்டை ரவுடி’ சுமந்திரன் என்ற பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அதனைப் பலரும் மறுக்கமாட்டார்கள். இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுள் தனது சொந்தக் கருத்திற்காக மக்களையும் ஊடகங்களையும் கூட சுமந்திரன் மிரட்டிய சம்பவங்கள் பலவற்றைக் காணலாம். தென்மராட்சி பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 19.09.2016 அன்று நடைபெற்ற வேளையில் அங்கு கருத்துத் தெரிவித்த பொது மக்களை மிரட்டிய சுமந்திரன் அவர்களை வெளியேற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

கேரை தீவுப் பிரதேசத்தில் உப்பளம் அமைக்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்ட போது, அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் தொடர்பாக விவசாயிகளும் மீனவரகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என பொதுமக்கள் சார்பில் ஒருவர் கருத்துத் தெரிவித்த அதே வேளை திட்டத்தினால் ஏற்படும் பின் விளைவுகள் தொடர்பாக அப்பாவி மீனவர்கள் எதிர்ப்புப் பதாகைகளைத் தாங்கியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது கருத்துக்களையும் கேட்குமாறு ஒருவர் கோரிக்கைவிடுத்த போது, சுமந்திரன் அவரை மிரட்டிய அதிகாரவர்க்க திமிர் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கைக்குரிய தெருச்சண்டியன் என மீண்டும் நிரூபித்துள்ளது.

‘இங்கு எடுக்கும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். தீர்மானங்கள் எதுவும் மாற்றப்படுமாக இருந்தால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும். மற்ற இணைத் தலைவர்களைப் போன்று நான் செயற்பட மாட்டேன். உங்களுக்கு எதிராக ஒழுக்காறு நடவடிக்கை எடுக்கப்படும், அது ,மாவட்டச் செயலாளராகக்கூட இருக்கலாம்’ என உரத்த குரலில் பொது வெளியில் மிரட்டிய சுமந்திரனுக்கு எதிராக அங்கு கருத்துத் தெரிவிக்க யாரும் இருக்கவில்லை. தவிர அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுமந்திரன் அதிகாரவர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய அடியாள்! அமெரிக்க அரசு இலங்கை முழுவதையும் ஆக்கிரமிப்பதற்காக ஏற்படுத்திய சமரசத்தில் ரணிலும் மைத்திரியும் தெற்கின் பிரதிநிதிகள் என்றால் சுமந்திரனும் சம்பந்தனும் வடக்கின் பிரதிநிதிகள்.

உத்தியோகபூவர்க் கூட்டடங்களில் கூட கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் சுமந்திரனுக்கு எதிராகவே ஒழுக்காற்று  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாண மேலாதிக்க நிலப்பிரபுத்துவ சாதித் திமிர் தலைக்கு மேல் ஏற அத் திமிரின் மற்றொரு குறியீடான வன்முறையை மக்கள் மீது பிரயோகிக்கும் சுமந்திரனுக்கு எதிரான அரசியல் முன்வைக்கப்படுவதே இன்றைய காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் வாக்குப் பொறுக்க வரும் போது கூட தனக்கே வாக்குகள் கிடைக்கும் என்ற சுமந்திரனின் திமிருக்குக் காரணம் அவர் சார்ந்த சீரழிந்த வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் இல்லை என்பதே காரணம்.

இன்று சுமந்திரன் மற்றும் சம்பந்தனை அவர்கள் இருவரும் கூறுவது போன்றே அமெரிக்க ஏகாதிபத்திய அரசு இயக்கிவருகிறது. இலங்கை அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சமரச அரசியலுக்குள் கொண்டுவந்த அமெரிக்க அரசு எதிர்க்கட்சி அற்ற சர்வாதிகார ஒற்றைப் பரிமாண அரசை உருவாக்கியுள்ளது. இங்கு மக்களின் நலன் என்பது இரண்டாம்பட்சம், முன்னிலைப்படுத்தப்படுவது அமெரிக்கா மற்றும் அதன் தரகுகளான இலங்கை அதிகாரவர்க்கம்.

இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையில் பௌத்த சிங்களப் பெருந்தேசிய வாதமே அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கும் அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான போராட்டங்கள் தோன்றும் போதெல்லாம் அவர்களைப் பேரினவாத நச்சூட்டி சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராகத் திசை திருப்புவதே இலங்கை ஆளும் வர்க்கத்தின் சமூக சமரசத்திற்கான அரச அமைப்பு. ஆக, தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் விடுதலையடைந்தால் மட்டுமே சிங்கள மக்கள் கூட இலங்கை அரசின் ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்வார்கள். ஆக, தமது எதிர்காலத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்துசெல்லும் உரிமையைப் பெற்றுக்கொள்வது அவசியமானது.

தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கு எதிராகவும் சமூக மாற்றத்திற்கு எதிராகவும் யாழ்ப்பாண நிலப்பிரபுத்துவ பின் தங்கிய மனோபாவம் கொண்ட அநாகரீகமான பிரதிநிதி சுமந்திரன் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சுமந்திரன் என்ற தனி மனிதனும் அவர்சார்ந்த கட்சியும் இலங்கை பின் தங்கிய அதிகாரவர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்றால் அதன் மறுபக்கத்தில் மக்கள் பற்றிக்கொள்ள மாற்றுத் தலைமைகள் கிடையாது, சுமந்திரனின் எதிர்த்தரப்பிலுள்ள ஏனைய தலைமைகள் சுமந்திரனுக்கு ஈடான பிற்போக்கு மனோபாவம் கொண்ட மக்கள் பற்றற்ற வாக்குப் பொறுக்கிகள். பாராளுமன்றம் செல்வதற்காக வாக்குகளைத் திரட்டிக்கொள்ளும் தந்திரோபாயங்களை பல்வேறு வழிகளில் தேடிக்கொள்ள முற்படும் இக் குழுக்களும் சுமந்திரனைப் போன்றே மக்கள் விரோத அரசிலை முன்வைக்கும் நிலையில் மக்களுக்கு மாற்று வழிகள் கிடையாது, இந்திய இராணுவத்தின் துணைக்குழுத் தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரனோடு இணைந்து வாக்குப் பொறுக்குவதற்காக உதிரிகளாக மக்களை இணைத்து நடத்த முற்படும் குழுக்களின் அருவருப்பு அரசியல் சுமந்திரன் போன்ற தெருச் சண்டியர்களை வாழ வைக்கிறது.

இது இரண்டு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது,

ஒரு புறத்தில் ஒரே வடிவிலுள்ள சமூகப்பற்றற்ற வாக்குக் கட்சிகளை நிராகரிக்கும் மக்கள் சுமந்திரனை அங்கீகரித்தாலே போதுமானது என்று நம்பும் அபாயம் காணப்படுகிறது, அதன் மறுபக்கத்தில் இந்த இரண்டு தெரிவிற்கும் எதிராக பேரினவாதிகளைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளும் நிலை தோன்றும். ஆக, இன்று வடக்குக் கிழக்கில் உறுதியாகப் புடம்போடப்பட்ட மக்கள் சார்ந்த அரசியல் அவசியமாகிறது. அதற்கான வழிகளை ஜனநாயக முற்போக்கு சக்திகள் தேடிக்கொள்ளாதவரை சுமந்திரன் போன்ற ஜனநாயக விரோதிகளின் இருப்பு தவிர்க்கமுடியாதது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பில் கேட்ஸ் தெரிந்து கொண்டே குழந்தைக்கொல்லி தடுப்பூசியைப் பயன்படுத்தினார்: ஆதாரம்

பில் கேட்ஸ் தெரிந்து கொண்டே குழந்தைக்கொல்லி தடுப்பூசியைப் பயன்படுத்தினார்: ஆதாரம்

Comments 3

  1. Joseph says:
    9 years ago

    No Ltte so sad
    if LTTE live please eliminate சுமந்திரன்

  2. a voter says:
    9 years ago

    இதுபற்றி முகநூலில் வந்த பதிவிலிருந்து; எழுதியவர்; அயுப் அஸ்மின்

    இன்று தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஊடக சுதந்திரத்தை மதிக்கமால் ஊடகவியலாளர்களை வெளியில் செல்லுமாறு சுமந்திரன் கூறினார் என்ற ஒரு செய்தி வெளி வந்திருந்தது. அந்தக் கூட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நான் கலந்துகொண்டிருந்தேன். கூட்டம் நடைபெற்று நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மக்கள் அமர்ந்திருந்த ஆசனங்களுக்கும் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் அமர்ந்திருந்த ஆசனங்களுக்கும் நடுவில் நின்றுகொண்டிருந்த ஒரு ஒலிப்படப்பிடிப்பாளரை நோக்கி கௌரவ சுமந்திரன் (பா.உ) அவர்கள் “தம்பி நீர் கருத்துக் கூறுகின்ற மக்களின் முகம் எமக்குத் தெரிவதற்கு இடையூறாக நிற்கின்றீர், பின்னே செல்லும் அல்லது ஒரு ஓரமாக செல்லும் என்று கூறினார்; அதற்கு அந்த ஊடகவியலாளர் சடுதியாக தன்னுடைய கமெராவை இயக்கிவிட்டு தான் ஊடகவியலாளர் என்று கூறினார்; அதன்போது நீர் ஊடகம் என்று எமக்குத் தெரியும், மறைக்காமல் கூட்டத்தை நடத்துவதற்கு இடையூறு செய்யாமல் ஊடகங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடத்தில் நில்லும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்;

    அதன்போது கருத்துவெளியிட்ட மாவை சேனாதிராஜா (பா.உ) அவர்கள் எங்களுடைய கூட்டத்தின் எல்லா கருத்துக்களையும் பதிவு செய்யவேண்டிய தேவை இருக்கின்றதா? என்று கேட்டார், இங்கு நடக்கின்ற விடயங்களை, தீர்மானங்களை நாம் இறுதியாக ஊடகங்களுக்கு தெரிவிப்போம், இப்போது கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது அதனை முழுமையாக ஒலிப் பதிவு செய்யும் தேவை எந்த ஊடகத்திற்கும் இருக்காது என்று சுட்டிக்காட்டினார்.

    அதற்கமைய கூட்டத்தை நடாத்துவதற்கு இடையூறாக நடுவில் நின்றுகொண்டிருந்த ஊடகவியலாளரை மண்டபத்திற்கு வெளியில் செல்லுமாறு கூறப்பட்டது. சில மணிநேரம் கழித்து அங்கு வந்த மற்றுமொரு ஒலிப்படப்பிடிப்பு ஊடகவியலாளரும் தன்னுடைய பொதுவான ஒலிப்பதிவுகளை முடித்துக்கொண்டு வெளியே செல்லுமாறு கேட்கப்பட்டார். செய்தி சேகரிப்பதற்கு எவருக்கும் தடை விதிக்கப்படவில்லை முழு நேரமாக ஒலிப்பதிவு செய்யும் கமெரா இயக்குனர்களுக்கு கூட்டத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டது,

  3. a voter says:
    9 years ago

    https://www.youtube.com/watch?v=ykGWexVXtzw&index=1&list=PLwBEINflt3JEUuheTzUf1qzNZcV89qSvc
    21ம் நிமிடத்தில் இதுபற்றி வருகிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...