ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய தகுதியான வேட்பாளர் இரா. சம்பந்தன் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்திற் கொண்டு தமிழ் வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களமிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் சார்பில் போட்டியிடக் கூடிய வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடக் கூடிய தகுதி இரா. சம்பந்தனுக்குக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேரில்லா பாசிகள் எந்த பக்கம் அடித்து போகப்பட்டு ஒதிங்கிலாலென்ன?. பார்ப்பதற்க்கு பசுமையாகதெரியும்.வேறொரு பயனும் இல்லை.தடாகத்துக்கும் அதில் உள்ள உயிர்களுக்கும் இதனால் தீமையெ தவிர பயன் ஏதும் இல்லை.
எல்லாச் சிறுபான்மைத் தேசிய இனங்களும் நல்ல இடதுசாரிக் கட்சிகளும் பிற ஜனநாயகவாதிகளும் கூடி ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்புப் பற்றி ஏலவே சிலராற் பேசப்பட்டது.
அண்மையில் இ.தம்பையா (புதிய ஜனநாயகக் கட்சி) அதன் மூலம் யாருக்குமே 50 சதவீத வாக்குக்கள் கிடைக்காமல் தடுக்கலாம் என்று விளக்கியிருந்தார்.
எது எப்படியானாலும் மூன்று ட்றொட்ஸ்கிவாதக் கட்சித் தலைவர்களும் அவசர அவசரமாகத் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இது ஏன்?
ஒரு கட்சி மிக வரட்டுத்தனமானது. அதற்குப் பொது வேலைத்திட்டம் என்றாலே தெரியாது.
மற்ற இரண்டும் முன்பு பலவேறு கூட்டணிகள் அமைத்தவை. பொது வேலைத்திட்டம் பற்றிப் பேசிவந்தவை.
ஆனால் தங்களது நெருங்கிய சகாக்கள் ஓரிருவரைத் தவிர யாருடனுமே கலந்தாலோசியாமல் போட்டியிடுவது பற்றி அறிவித்துள்ளன.
அவை இரண்டும் இப்போது என்.ஜி.ஓ. தயவில் பிழைப்பு நடத்தத் தொடங்கி விட்டதையும் விக்கிரமபாகு தனது சுயநலத்துக்காக புதிய இடதுசாரி முன்னணியை உடைத்ததையும் தமிழ்த் தேசியவாதிகளை மிஞ்சிய தமிழ்த் தேசியவாத வேடம் போட்டதையும் சிரிதுங்கவினது அரசியலும் வணிகமாகி விட்டதையும் நினைவுகூரும் போது நோக்கங்கள் நல்லவையாகத் தெரியவில்லை.
அரசியல் அனாதையாகிவிட்ட தமிழ்த் தலைமையின் ஒரு பகுதியின் தடுமாற்றத்தைச் சமாளிக்கவா சம்பந்தனின் இந்த அறிவிப்பு?
மக்களை விரக்தியடையச் செய்கிற இந்தச் சுயநல அரசியல் ஒன்றுபட்ட எதிர்ப்பு அரசியலின் வளர்ச்சிக்குத் தடையானது என நாம் வியங்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டு பேரினவாதப் பிற்போக்காளர்களைத் தவிர்க்க வேண்டி நல்ல சக்திகள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த இன்னமும் காலங் கடந்துவிடவில்லை.
உரிய அழுத்தங்களை நாம் செலுத்தினால் அதற்கு ஒரு வாய்ப்பு உண்டு.