தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தற்கொலைப் போராளிகள் அங்கம் வகிப்பதாகவும், அவர்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் தற்கொலைப் போராளிப் பிரிவொன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கூலிப்படையாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.