Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இரா.துரைரத்தினமும் ரவிகுமாரும் ஐபீசி தொலைக்காட்சியும் : வழி பிறழும் விவாதங்கள்

இனியொரு... by இனியொரு...
02/28/2016
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

thuratnam_ravikumar_ibcஇரா.துரைரத்தினம் என்ற ஊடகவியலாளர் சமூக வலைத்தளம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவி குமார் என்ற அரசியல்வாதியைப் ‘பறை நாயே’ என்று அவரது சாதிப்பிரிவு சார்ந்த பெயரைக் கூறி விழித்துள்ளமை தொடர்பாக பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. முதலில் இரா. துரைரத்தினத்தின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, அதன் பின்புலத்தில் புதைந்திருக்கும் மனோ நிலைக்கு எதிரான போராட்டமும் எமது சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். துரைரத்தினம் பிரதிபலித்ததுள்ளது மொத்த சமூகத்தின் மனோநிலையையே.

ஆயுதப் போராட்டம் எங்கு நடந்தாலும் அதற்கான ஆள்பல தேவைக்காக சமூக ஒடுக்குமுறைகள் தணிந்திருக்கும். ஈழப் போராட்ட காலத்திலும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதீயினரின் பங்களிப்புத் தேவைப்பட்டது. சாதீயம் பெண் ஒடுக்குமுறை போன்றவற்றிற்கு எதிராக ஆயுதப் போராட்டத் தலைமைகள் செயற்பட்டனவாயினும் அதனை முற்றாக அழிப்பதற்கான வர்க்கம் சார்ந்த கோட்பாடுகளை யாரும் கொண்டிருக்கவில்லை. ஆக, புரையோடிப் போயிருந்த சாதிய மேலாதிக்க மனோபாவம், இன்று அதன் புதிய ஆதிக்க எல்லைகளை வகுத்துக்கொள்கிறது.

துரைரத்தினம் போன்றவர்கள் போருக்குப் பின்னான சமூகத்தின் வெளித்தெரியும் பிரதிநிதிகளே என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அதிலும் புலம்பெயர் சமூகத்தில் சாதிய முரண்பாடுகள் மிகவும் அழுத்தமானதாகக் காணப்படுகின்றன. புலம்பெயர் நாடுகளின் அரசியல் சூழலோடு இரண்டறக் கலந்துவிட முடியாத தமிழர்கள் தமது அடையாளங்கள் அனைத்தையும் பல தசாப்பதங்களுக்கு முன்பிருந்த நிலையிலேயே பேணிவருகின்றனர். ஆக, முழு சமூகத்தின் ஆதிக்க சாதி மனோபாவத்தின் ஒரு உதாரணம் மட்டுமே துரைரத்தினம்.

இவ்வாறான சிக்கல்களை தனிமனிதர்களின் மனோபாவமாக மட்டும் கருதுவது மிகவும் தவறான முடிவுகளுக்கே நம்மை அழைத்துச்செல்லும்.

போருக்குப் பின்னான சாதீய முரண்பாடுகள் ஆழமடைந்துள்ளதைத் தொடர்ந்து தோன்றியுள்ள சூழலில் ஆதிக்க சாதியினரின் எழுச்சி மட்டுமல்ல சாதீய அடையாளத்தைப் பயன்படுத்தி சுயலாபமடையும் குழுக்களின் எழுச்சியும் சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளை மறைத்து அதிகாரவர்க்கத்திற்குத் துணை செல்கிறது.

ravikumar1இன்று துரைரத்தினத்திற்கு எதிராகப் பேசுகின்ற முகநூல் நண்பர் குழுக்களில் பெரும்பாலானவர்கள் அதன் மறுபக்கத்தை மறந்துவிடுக்கின்றனர். சாதீய அடையாள அரசியலால் சுயலாபமடையும் குழுக்கள் துரைரத்தினத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் அடித்தளத்திலுள்ள முரண்பாடுகளை மறைத்துவிடுகின்றனர். இக் குழுக்களையும் அதிகாரவர்க்கமே வளர்த்தெடுக்கின்றது. ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகவே பெரும்பாலான சாதியக் குழுக்கள் செயற்படுகின்றன. ரவிகுமார் இந்த அடையாளக் குழுக்களை தோற்றுவிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். பின்நவீனத்துவ அடையாள அரசியல் என்ற அழிவை தென்னித்தியாவில் புகுத்திய ஆரம்பகால முகவர்களில் ரவிகுமாரும் ஒருவர்.

ஆக, துரைரத்தினத்தின் சாதீய வெறி என்பது ரவிகுமாரின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துக் குழுக்களுக்கும் பொன்முட்டை போடும் வாத்து.

ரவிகுமாருக்கு ஐ.பி.சி தொலைக்காட்சி வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை திருப்பிப் பெற வேண்டும் என்பது இதே முகநூல் காரர்கள் பலரின் கோரிக்கை. ஐ.பி.சி என்பது வியாபார நிறுவனம். அதனைச் சமூகப்பற்றுள்ளதாகக் கருதிக் கோரிக்கை முன்வைப்பது என்பது கேலிக்குரியது. தற்செயலாக ஐ.பி.சி, துரைரத்தினத்தின் விருதைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் அது மக்கள் சார்ந்த நிறுவனம் என்று இவர்கள் அறிப்பார்களா என்ன?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கானதா?: நிருபா குணசேகரலிங்கம்

இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கானதா?: நிருபா குணசேகரலிங்கம்

Comments 4

  1. sumerian says:
    10 years ago

    இந்த ஊடகவியலாளர் துரைரத்தினம் மிக பிற்போக்கானவர். முன்பு பல தடவை முஸ்லீம்களிற்கு எதிராக பல விசக்கருத்துக்களை கக்கியவர். தமிழக மீனவர் பிரச்சனையிலும் துவேசத்தினை கக்கி தமிழர்களிடையே பிளவுகளை உண்டாக்கியவர். இப்போது சாதிப்பிரச்சனையினை கையிலெடுத்துள்ளார். இவருடைய நோக்கமே மனிதர்களை பிரித்துவைப்பதுதான். எனது ஊகம் சரியானால் இவர் ஒரு RSS இன் ஈழத்து ஊதுகுழல்.

  2. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    யார் இந்த துரை? துரையின் அரசியலின் பின்னணி என்ன ?

    பறை நாயே என சக மனிதனை பொது அரங்கில் இருக்கும் ஒருவர் பொது வெளியில் பேசுதல் என்பது மிகவும் அநாகரிகமானது கண்டிக்கத் தக்கது. பறை நாயே என்பதன் உண்மையான பொருள் சொல்லு நாயே என்பதே ஆகும். இப்போது அது சாதீய இழிவு படுத்தலுக்கு மாத்திரமே பயன் படுகிறது.

    இங்கே இரா. துரைரத்தினம் அவர்களின் மேலதிக முகங்களையும் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

    விடுதலைப் புலிகள் உட்பிளவுகளை சந்திக்கவும், பிரதேசவாதம் தலை தூக்கவும், விடுதலைப்புலிகளின் உள் விவகாரங்கள் பலவற்றை ஊதி பெருப்பித்தும், மற்றும் புலிகளின் பல தகவல்கள் புலனாய்வு அமைப்புகளுக்கு செல்ல தமிழ் ஊடகவியல் துறையைச் சேர்ந்ததோர் வேலை செய்தனர். இவர்கள் தமது வேலையை சுலபமாகச் செய்ய தம்மை தீவிரமான தேசிய வாதிகளாகவும் புலிகள் ஆதரவு சக்திகளாகவும் காட்டிக் கொண்டு புலிகளின் பல்வேறு எல்லைகள் வரை சென்று, தகவல் திரட்டிகள், தகவல் குழப்பிகளாகச் செயல் பட்டனர். இன்றும் தமிழ் மக்களை குழப்ப அவர்கள் செயல் பட்டு வருகின்றனர்.

    இரா. துரைரத்தினம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் மட்டக்களப்பில் திருமணம் செய்து அங்கு வாழ்ந்தவர். இந்திய கொள்கை வகுப்பு அணிகளோடு சுமூகமாக இப்போதும் பயணித்துக் கொண்டிருப்பவர் என்பதை தனது கட்டுரைகள் மூலமே நிரூபித்துக் கொண்டிருப்பவர். இந்திய உளவு அமைப்பின் முதலாவது Assignment முடிந்தவுடன், அடுத்த assignment க்காக சில இராயதந்திரிகளின் உதவியுடன் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பின்மையை காரணங் காட்டி இந்திய உளவுத் துறையின் பின்னணியில், சுவிஸ் சென்றார் . அங்கு புலம் பெயர் அமைப்புகளின் வலுவைச் சிதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் தனியாக உளவுத் துறையால் இறக்கப் படவில்லை இவ்வாறு பலர் பல முனைகளில் இறக்கப் பட்டு உள்ளனர் அதில் வெற்றியும் அடைந்து உள்ளனர்.

    இனி கிழக்கில் கிழக்கு தேசியம் பேசிய சில யாழ் பாணத்து குடியானவர்கள் பற்றி பார்ப்போம். ராயன் சத்திய மூர்த்தி மற்றும் ராயன் ஆசீர்வாதம் போன்றோர் யாழ்பாணத்தின் தொண்டமானாற்றைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் போன்ற சிலர், கிழக்கின் அரசியல் பொருளாதார அந்தஸ்துகளை பெற்றுகொள்ளவும், அதனை உறுதிப் படுத்தவும் பிரதேச வாதத்தை தூண்டி இலாபம் பெற்றனர். தம்மை மட்டக் களப்பின் மைந்தர்களாக இனங்காட்டினர்.

    இப்போது புலத்து மக்களும் புலம் பெயர் மக்களும் மிகவும் நிதானமாகச் சிந்திக்கவேண்டும். தமிழ் மக்கள் குறித்து , அம்மக்களின் உட் கூறுகள் குறித்து வரும் எந்தகைய கதை பின்னணிகளையும் நாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எது சரி எது பிழை என நாம் சரி பார்த்து இயங்க வேண்டும். அதற்குரிய அறிவியலை நாம் வளர்க்க வேண்டும். எமக்கு ஒரு புலமை சார்ந்த பகுப்பாய்வு சார்ந்த ஒரு கட்டமைப்பு இல்லை. அவ்வாறு ஒரு கட்டமைப்பு இருப்பதை அல்லது உருவாவதை தமிழ் மக்களுக்கு எதிரான உளவு அமைப்புகள் கவனமாகச் சிதைத்து வருகிறது. தமிழ் மக்களை முற்று முழுவதுமாக கருத்தியல் சிதைப்புக்கு உள்ளாக்கி விட்டது என்றே கூற முடியும்.

  3. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    மன்னிக்கவும், மேலே தகவல் பிழை உள்ளது. ராஜன் ஆசீர்வாதம் என்பது ராஜன் செல்வநாயகம் எனவரவேண்டும்.

  4. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    ஈழப்பிரியன் ஈழப் போராட்டத்தில் சாமானியர்கள் ஊகித்து கண்டு பிடிக்க முடியாத மறைகரங்கள் பல சூழ்ந்து எம்மை அழித்து விட்டன. தமிழ் வின் சிறிதரனின் உறவினரால் நடாத்தப் படுகிறது. சிறிதரன் தளபதி தீபனின் உறவினர். அதே போன்று எஸ்.பி. தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் ஊர் காரர் பலர் ஈ.பி.டீ.பி இல் இருத்தவர்கள் இப்படி இருந்த தொடர்புகள் மூலமாக சமாதான காலத்தில் மறைமுகமாக புலிகளின் கட்டமைப்புகள் ஊடுருவப் பட்டிருக்கலாம். வன்னி உட்பட புலிகளின் கட்டுப் பாட்டு பகுதிகளில் இலங்கை இந்திய புலனாய்வு மையங்களால் தகவல்கள் உள்ளிருத்திகள் பேணப் பட்டு வந்தனர். கூடுதலாக எஸ்.பி யைச் சுற்றி இருந்த பலர் அவ்வாறு இருந்திருக்கிற்றனர். குறிப்பாக புலிகளின் மூத்த உறுப்பினரும் விடுதலை புலிகளின் வாகனப் பொறுப்பாளருமான குட்டி என்பவர் எஸ்.பியின் நபர் அவரின் ஊரைச் சேர்ந்தவரும் ஆகும். சமாதான காலத்தில் குட்டியின் உறவினர் ஒருவர் வன்னியில் என்னுடன் கச்சேரியில் வேலை செய்தவர் சொன்னார். பார் அண்ணை ஒரு சண்டை தொடங்கினால் முதல் இலங்கை ராணுவத்தோட போய் எத்தனை புலியில் உள்ள பெரியாக்கள் நிக்கிறானுகள் எண்டு பாருங்கோ என்று சொன்னார். அத்துடன் புலனாய்வுத் துறை எல்லாம் பிரிச்சு மேய்கிரானுகள். அவன் அவன் காசை அடிச்சுட்டு ஓட நிக்குரானுகள். உண்மையில் எஸ்.பி யுடன் புலிகள் அமைப்பில் உள்ளிலும் வெளியிலும் நெருக்கமாக இருந்த பலர் குட்டி யுட்பட இலங்கை புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். குட்டி இறுதி யுத்தம் முடிய முன்னர் இலங்கை அரசுப் படைகளுடன் இணைந்து செயல் பட்டார். இப்போது பிரான்சில் வசிக்கிறார். புலம் பெயர் புலிகள் அமைப்பில் தொடர்பிலும் உள்ளார். எல்லாம் விசித்திரமாகவே உள்ளது. இதில் நிலாம் டீன் என்ன விதி விலக்கா?

    சிலவேளை பாகிஸ்தான் உளவுத் துறைக்காக சரியான களம் ஒன்றை அமைக்க இந்திய விரோத அரசியலை தமிழ் மக்களிடம் விதைக்கிறாரோ அல்லது அபரிதமான தமிழ் தேசியம் பேசுவதன் ஊடாக ஒரு புலனாய்வு இருப்பை தமிழ் தேசிய அரசியலில் செய்ய முனைகிறாரோ யார் அறிவர்?

    இப்போது அது அல்ல தமிழ் மக்களின் பிரச்சினை. எத்தகைய புலனாய்வு அரசியலுக்குள்ளும் தோய்ந்து விடாது மிக அமைதியான முறையில் புலனாய்வு முறியடிப்புகளை செய்து எமது பலத்தை பேணிக்கொண்டு எமது விடுதலையை முன்னெடுப்பதே.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...