வன்னியில் நடத்தப்பட இனப்படுகொலை மட்டும் தமிழ்ப் பேசும் மக்களின் முன்னால் உள்ள அரசியல் பிரச்சனை அல்ல. கடந்த 30 வருட காலத்தில் இலங்கை அரச படைகளாலும், ஏனைய குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றைய எரியும் பிரச்சனை. அமெரிக்கா தனது தெற்காசிய அடியாட்களாக இலங்கை அரசையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏனைய குழுக்களையும் உருவாக்கிய வெற்றிக் களிப்பில் திழைக்கும் அதேவேளை காணாமல் போனவர்களைத் தேடி உறவினர்களின் பயணம் தொடர்கிறது.
இலங்கை என்ற சிறிய தீவின் ஏதாவது ஒரு மூலையில் அதன் அதிகாரவர்க்க மேய்ப்பர்களால் உயிருடன் வைக்கப்படுள்ளார்களா அன்றி கொல்லப்பட்டுவிட்டார்களா என்ற எந்தத் தகவலுமின்றி அவர்களின் தேடல் பயணம் முடிவற்றுத் தொடர்கிறது.
‘சாணக்கியர்’ சம்பந்தனாகட்டும், ‘ஒரு நாடு இருதேசம்’ கஜேந்திரகுமாராகட்டும், ஒட்டிக்கொள்ள கட்சி தேடும் டக்ளஸ் ஆகட்டும், அவர்கள் என்ன ஆனார்கள் என்பதில் அக்கறை கொள்ளவில்லை. தெருத்தெருவாக ஆண்டாண்டுகளாக அவலங்களுடன் அலைந்துகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை ‘நல்லாட்சி அரசு’ இதுவரை திரும்பிப் பார்த்ததில்லை.
புலம்பெயர் தமிழர்கள் சிலர் கடந்த ஆறு வருடங்களாக ஜெனீவா வாசலில் மட்டும் தான் கொடியோடு, தூசு தட்டப்பட பிரபாகரனின் கட்டவுட்டோடும் அலைந்துகொண்டிருக்க மக்கள் நெஞ்சில் வலியைச் சுமந்துகொண்டு தெருத்தெருவாக கண்ணீரோடு வலம்வருகிறார்கள்.
இந்தச் சுழலில் கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கம் கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் நாழிதழுக்கு வழங்கிய நேர்காணல் மனதை உறுத்துகிறது. 1990 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு வந்தாறுமூலை அகதி முகாமின் பொறுப்பதியாகவிருந்த அவர் அங்கிருந்து கடத்திச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் குறித்துச் சாட்சி கூறியுள்ளார்.
கேள்வி – உண்மையில் அன்று என்ன நடந்தது?
பதில் – இந்த சம்பவம் 25 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் இன்னும் என் நினைவில் உள்ளது.
செங்கலடி கிராமத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான் சிரேஷ்ட விரிவுரையாளர், அந்த கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.
அவர்களில் சுமார் 150 குடும்பங்கள் அகதி முகாமில் இருந்தனர். ஒரு நாள் அங்கு வந்த இராணுவத்தினர் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக பிரித்து சோதனையிட்டனர்.
இதன் பின்னர் அவர்கள் பலவந்தமாக பஸ்களில் ஏற்றப்பட்டு வெளியில் அழைத்துச் செல்லப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் எம்.எஸ்.எப் அமைப்புகள் நலன் கவனிப்பவர்களாக இருந்தனர்.
அந்த நேரத்தில் 25 குழந்தைகள் பிறந்ததுடன் 15 பேர் இறந்திருந்தனர். மேலும் 18 பேர் முகாமில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டனர்.
படிப்படியாக முகாமில் இருந்த மக்களின் எண்ணிக்கை குறைந்து போனது, இதனையடுத்து செப்டம்பர் 30 ஆம் திகதி முகாம் மூடப்பட்டது. இறுதியாக வாக்குறுதியுடன் நான் முகாமில் இருந்து வெளியேறினேன்.
முகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது யாருக்கும் தெரியாது என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
கேள்வி – சில சந்தர்ப்பங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி நடக்கவில்லையா?.
பதில் – நான் அவர்கள் அனைவரையும் புலிகள் என்று கூறினேன். எவரும் எதனையும் கூறலாம். வழமையாக சிலர் முன்னிலையில் மக்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், என்னை தவிர அந்த நிலைமையை பார்த்த சாட்சியாளர் எவருமில்லை. பேராசிரியர் மனோ சபாரத்தினம், டி. சிவலிங்கம் எவரும் இல்லை. அடுத்த 20 வருடங்களில் நான் இறந்து விடுவேன். அதற்கு பிறகு யார் சாட்சி?
கேள்வி – அவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என நீங்கள் எண்ணுகிறீர்களா?.
பதில் – சிலர் வந்து ஒருவர் அந்த இடத்தில் இருக்கின்றார். இன்னுமொருவர் வேறு இடத்தில் இருக்கின்றார் என்று கூறுகின்றனர். ஆனால் என்னிடம் உறுதியான தகவல்கள் இல்லை.
கேள்வி – எந்தளவுக்கு இந்த சம்பவங்கள் உங்களை பாதித்தது?.
பதில் – நான் மாத்திரமல்ல, யுத்தத்தை கடந்தது சென்ற எவருக்கும் அந்த அதிர்ச்சி இருக்கும். இரவு நேரங்களில் முகாம் குறித்த ஞாபன கனவு எனக்கு ஏற்பட்டால், நான் நித்திரையில் இருந்து எழுந்து விடுவேன்.
கேள்வி – பிரச்சினை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்காது பின்நோக்கி சென்றீர்கள்?.
2004 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நான் இந்த விடயங்களை முன்வைத்தேன்.
சம்பவம் நடந்த நாளில் முகாமுக்கு வந்த அனைத்து இராணுவ அதிகாரிகளின் பெயர்களை நான் முன்வைத்தேன். சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு முகாமுக்கு வந்த இராணுவ மேஜர் ஜெனரலும் அதில் அடங்குவார்.
காணாமல் போனோரின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய 2014 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு முன் நான் சென்றிருந்த போது, தாம் அது பற்றி அறிந்திருக்கவில்லை எனக் கூறியதால்,
நான் ஆச்சரியமடைந்தேன். எதற்கு இந்த ஆணைக்குழு?. குறைந்தது அவர்கள் முன்னறிவிப்பு மற்றும் தொடர்ச்சியை அறிந்திருக்க வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.
கேள்வி – நீங்கள் அரசாங்கத்திடம் என்ன கேட்கிறீர்கள்?
பதில் – உறவினர்கள் தாம் நேசிப்பவர்கள் திரும்பி வந்து விடுவார்கள் என்று தற்போதும் பூஜை செய்து வருகின்றனர்.
அவர்கள் இன்னும் பல நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். குறைந்து, கொண்டு செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் என்றாவது இந்த மக்களிடம் கூறுங்கள்.
உண்மை கடும் வேதனையாக இருந்தாலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது மனதை தேற்றிக்கொள்ள முடியும். அரசாங்கத்தினால் என்ன செய்து விட முடியும்?.
இழப்பீடு கொடுக்க முடியுமா?. இழப்பீடுகளை வைத்து கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்?
இது காணாமல் போனவர்களுக்கு மாத்திரமல்ல. மனிநேயம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் உண்மை ஆகியவற்றும் முக்கியமானது.
http://www.dailymirror.lk/90267/reconciliation-cannot-take-place-when-truth-is-suppressed
EVEN USA and un has not boldly taking steps to find the truth and find the killers who are so cunning that the entire world is kept at bay.for sevreal years.