Malcolm Gladwell என்பவர் எழுதிய The Tipping Point: How Little Things Can Make a Big Difference என்ற நூல் கடந்த பத்தாண்டுகளில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாக இடம்பிடித்தது. மாறுதலை ஏற்படுத்துவதற்கான புள்ளிகளை தரவுகளுடன் ஆராய்கிறது இந்த நூல். எதையெல்லாம் இந்த நூலில் தேடிக்கொள்ளலாம் என்பதற்கு அப்பால் மாற்றங்கள் எவ்வாறு அவதானிக்கப்படுகின்றன என்றும், பண முதலைகளும் ஒடுக்கும் அரசுகளும் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்றும் நூல் நெடுக அவதானிக்கலாம்.
ஒரு பொருளாதார அடியாளின் மனச்சாட்சி என்ற நூலை எழுதிய ஜோன் பேர்கின்ஸ் இதைக் கூறுகிறார். பெரும் யுத்தங்களையும் மனித அழிவுகளையும் படுகொலைகளையும் மேற்கொள்வதற்கு முன்பதாக மிக நுண்ணிய மாற்றங்களைக் கூட அமரிக்க ஏகாதிபத்தியம் உன்னிப்பாக அவதனிக்கிறது என்கிறார்.
சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் 1970 ஆம் ஆண்டுகளில் உருவான ஜே.வி.பி இன் எழுச்சியை இளைஞர்களில் எழுச்சியாகவே ஏகாதிபத்திய அரசுகள் கருதின. இந்த எழுச்சி தெற்காசியாவில் பல்வேறு எழுச்சிகள் உருவாக உளவியல் உற்சாகத்தை வழங்காலாம் என அமரிக்கா போன்ற நாடுகள் கருதின. இது உழைக்கும் மக்களின் எழுச்சி அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தாலும் இந்த மாற்றம் தெற்காசியாவின் ஏனைய பிரதேசங்களில் புதிய மாற்றங்களையும் எழுச்சிகளையும் உருவாக்கலாம் என்றே அவர்கள் கருதினார்கள்.
1971 ஆண்டு மார்ச் மாதம் அளவில் பதினைந்தாயிரம் உயிர்களைப் பலிகொண்டு தோற்கடிக்கப்பட்ட இந்த எழுச்சியின் பின்னர் இரண்டு பிரதான நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டலாம்.
முதலில் அமரிக்க அரசின் நேரடி உதவியுடன் (US AID)ஆரம்பிக்கப்பட்ட மார்கா (Marga Institute) என்ற ஆய்வு நிறுவனமும் இந்த நிறுவனத்தின் பண முதலீட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சர்வோதயா என்ற தன்னார்வ நிறுவனமும் கவனத்தை ஈர்க்கின்றன. மார்கா நிறுவனம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டது. பல இடது சாரி அமைப்பிலிருந்த புத்திசீவிகளை உள்வாங்கியது. கோட்பிரீ குணதிலக (Dr. Godfrey Gunatilleke ) என்ற இடதுசாரிக் கருத்துக்களையும் அவ்வபோது ஏகாதிபத்திய எதிர்ப்பு முழங்களையும் முன்வைக்கும் குறிப்பிடத்தக்க புதிசீவி ஒருவரே இந்த நிறுவனத்தைத் தலைமை தாங்கினார்.
90களின் பின்னர் தேசிய இனப்பிரச்சனை குறித்த பல ஆங்கில நூல்களை மார்கா வெளியிட்டது. உ.சேரன் உட்பட பலரின் ஆய்வு நூல்கள் வெளிவந்தன. படித்த இளைஞர்கள் மத்தியில் அரச எதிர்ப்பு உணர்வை மட்டுப்படுத்துவதில் இந்த நிறுவனம் பங்கு வகித்தாலும், தள ஆய்வுகளை அமரிக்க உளவு நிறுவனங்களுக்கு வழங்குவதிலும் மார்காவின் பங்கை மறுக்க முடியாது.
இரண்டாவது முக்கியமான நிகழ்வு 1970களின் ஆரம்பப்பகுதிகளில் பாணதுறை ஆரியதம்ம தேரோ என்ற பௌத்த துறவியினால் உருவாக்கப்பட்ட போதி பூஜாவும், பௌத்த சுலோகங்களும், அவை சார்ந்த தியானங்களுமாகும்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் முளைவிட்ட போதி பூஜாவும் தியானங்களும் பின்னதாக பெரும் பணச்செலவில் இலங்கை முழுவதும் வியாபிக்கின்றன. பாடல்கள், இசைத் தட்டுக்கள், துறவியின் புதிய தியான முறைகள் என்று மத்தியதரவர்க்க இளைஞர்கள் மத்தியில் புதிய அலையை ஏற்படுத்திகிறது. தியானம் செய்யும் குழுக்களும், அவற்றிற்கு இடையேயான தொடர்புகளும், நாடு முழுவதும் பரவுகின்றன.
இளைஞர்களின் சமூகக் கோபத்தைத் தணித்து அவர்களை ‘நல்வழிப்படுத்தியமைக்காக’ இலங்கை அரசு பாணந்துற தேரோவைப் பாராட்டுகின்றது. அவர் மர்மமாக மரணித்துப் போகும் வரைக்கும் சிங்கள பௌத்த இளைஞர்கள் மத்தியில் கதாநாயகனாகக் கருதப்படுகின்றார்.
இவ்வாறான அனைத்து முயற்சிகளையும் மீறி. ஜே.வி.பி மீண்டெழுந்த போதும் பௌத்த துறவிகளை உள்வாங்காமால் அவர்களால் ஒரு அங்குலம் கூட நகரமுடியாமைக்கு பாணதுற தேரோவும் ஒரு காரணம் எனக் கருதப்படுகின்றது.
இன்றுவரைக்கும் பௌத்த இளைஞர்கள் மத்தியில் செல்வாகுச் செலுத்தும் இவரின் தியான முறைகளும் போதி பூஜாவும் சிங்கள பௌத்த பாசிசத்திற்கு உறுதுணையாகத் திகழ்கிறது.
2
முள்ளிவாய்கால் மனிதப் படுகொலைகள் நடந்து நான்காவது ஆண்டை நோக்கிக் காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது. போராட்டம் என்ற பெயரில் மக்களின் பணத்தைச் சூறையாடிய பலர் அதனை இலங்கை அரசின் துணையோடு ‘சட்டரீபூர்வமான’ பணமாக்க இலங்கையை நோக்கிப் படையெடுக்கின்றனர். சர்வதேசக் கிரிமிலும் இலங்கை அரச உளவாளியுமான கே.பி என்ற குமரன் பத்மனாதன் இவர்களின் நுளைவாசல். புலம்பெயர் நாடுகளில் இவர்களை சுற்றி பெரும் மாபியாப் பாணியிலான வியாபாரக் கும்பல் ஒன்று உருவாகியுள்ளது. பலர் புதிய அமைப்புக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள், ஜனநாகம் பேசுகிறார்கள். மக்கள், மனிதாபிமானம் என்று அவர்களுக்குத் தொடர்பற்ற சில சொற்களை மந்திரம் போன்று உச்சாடனம் செய்கிறார்கள்.
இந்தச் சலசலப்புக்களுக்கு மத்தியில் சந்தடியின்றி இன்னொன்றும் நிறைவேறுகிறது. கனடாவிலிருந்து இலங்கைக்குச் சென்று தியானம் கற்பிப்பதற்காக மீராபாரதி என்பவர் முகாமிட்டுள்ளார். இவர் இளைஞர்களுக்கும் குறிப்பாக முன்னை நாள் போராளிகளுக்கும் தியானம் கற்பிக்கிறார்.
மீராபாரதி பாணதுற ஆரியதம்ம தேரோவின் தமிழ்ப் பதிப்பாக நினைவிற்கு வருகிறார். தேரோவின் காவிக்குப் பதிலாக தாடியும் பேஸ்புக்கும் இணைந்த புதிய கலவையாக மீராபாரதி உலகத்தைச் சுற்றி இலங்கையில் முகாமிட்டுள்ளார். ரஜனீஷ் என்ற பாலியல் சாமியாரின் நீண்டகால சீடரான இவர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று தியானம் கற்பிக்கிறார். முன்னை நாள் போராளிகளை அவர்களது உறவினர்களே சந்திப்பதற்கு அஞ்சும் ஒரு சூழலில் மீரா பாரதி நடுவிலே குதித்து இளைஞர்களை ‘நல் வழிப்படுத்துகிறார்’.
பாணதுற தேரோவைப் போன்று இளைஞர்களின் போர்க்குணத்தைத் தணித்து அவர்களை ‘அமைதிப்படுத்தி’ கோழைகளாக்கும் பணியில் மீராபாரதி வெற்றிபெறூவாரோ என்பதெல்லாம் பல புறக் காரணிகளில் தங்கியுள்ளது எனினும் மீரா பாரதி கவனிக்கப்பட வேண்டியவர்.
இவரது தியான யாத்திரை குறித்துக்கொள்ளப்பட வேண்டும்.
Tipping point என்பதை அமரிக்கா மட்டுமல்ல அதனை அறிந்து வைத்திருக்கும் அனுபவம் மிக்க, அறிவியல் சமூகம் ஒன்றும் அவதானிக்கும் திறனைப் பெற்றிருக்கிறது என்பதை மீராபாரதி போன்றவர்கள் உணர்ந்துகொள்ள நீண்டகாலம் செல்லாது.
Please write about “Bilderberg Group”.
May 29, 1954 this group officially started.
55 years later on May 29, 2009 world witness what happened to Tamils.
Now Tamils have no chose.
Our “arasial poratam” ends with SJV prolonged 40 years.
Our “ayutha poratam” ends with VP prolonged 40 years.
Next “porulathara poratam” will prolong next 40 years.
In 2049 Tamils have very good opportunity to achieve what they like.
For that our younger generation must know, understand and became members of “Bilderberg Group.
நட்புடன் சபாநாவலனுக்கு….
என்னைப் பற்றிய தங்கள் குறிப்புகளுக்கு நன்றிகள்….
உங்கள் மீதும் நீங்கள் சமூகத்தில் வைத்திருக்கும் அக்கறை மீதும் எனக்கு நிறையவே மதிப்பு இருந்தது… இப்பொழுது சிறிதளவாவது இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்…
உங்கள் குறிப்பு நான் இலன்டன் வந்தபோது என்னை சந்தித்தபின்…அல்லது ஆகக் குறைந்தது எனது நூலை வாசித்த பின் அதனடிப்படைகளில் எழுதியிருந்தால் மிகவும் மகிழ்திருப்பதுடன் உங்களை மேலும் மதித்திருப்பேன்…என்னை சந்தித்ததற்காகவோ அல்லது எனது நூலை வாசித்த்தற்காகவோ அல்ல… மாறாக தகவல்கள் மற்றும் கருத்துக்களினடிப்படையில் நீங்கள் எழுதிய குறிப்பு இருந்திருக்கும் என்பதால்…என் மீதான விமர்சனமாக இருந்தாலும் காத்திரமானதாக இருந்திருக்கும் என்பதால்…
ஆனால் நீங்கள் தங்களின் தொடர்ச்சியான ஒற்றைப்பரிணமான பார்வையில் மட்டுமல்ல தவறான தரவுகளுடன் எழுதியிருக்கின்றிர்கள்…. ஆம்… நீங்களும் இன்னுமொரு இராயகரனமாக மாறிக்கொண்டு வருவதை நினைத்து உண்மையிலையே கவலை கொள்கின்றேன்… இராயகரன் என்னைப்பற்றி எழுதிய குறிப்புகளுக்கு நான் எந்த விதமான எதிர்வினைகளும் செய்யவில்லை… ஏனெனில் அந்தளவிற்கு அது மதிக்கப்படக் கூடிய ஒரு பதிவல்ல… (இக் குறிப்பை பார்த்தவுடன் அவரது தன்முனைப்புக்கு விழுந்த அடியினால் மீண்டும் சில பதிவுகளை அவர் எழுதலாம்… ஆனால் அவற்றால் ஒரு பயனுமில்லை… மன்னிக்கவேண்டும் இராயகரன் உங்களைப் பற்றி இப்படி எழுதியதற்கு)…
ஆனால் உங்களுக்கு எதிர்வினை எழுதுவதற்கு காரணம் இன்னும் உங்களை இராயகரன் ;அளவிற்கு மதிப்பிடவில்லை… ஆனால் இவ்வாறுதான் தொடர்ச்சியாக எழுதப்போகின்றீர்கள் என்றால் நீங்களும் இராயகரனைப் போல புறக்கணிக்கப்பட வேண்டிய மனிதரே… அந்தடிப்படையில் இதுவே உங்களுக்கான எனது கடைசி குறிப்பாக இருக்கும்…
ஒன்றை மட்டும் மறக்கவேண்டாம்… மிக அண்மைக்காலத்தில் என்னை ஒரு புத்திஜிவி (நான் இப்படி நினைப்பதில்லை என்பது வேறுவிடயம்) என விழித்து தங்கள் இணையத்தளத்திற்கு எழுதும்படி கூறிய நீங்கள் இப்படி தலைகீழாக மாறியதற்கான காரணம் உங்களுக்கே வெளிச்சமானது….
இறுதியாக நான் என்ன செய்கின்றேன் …. எனது நோக்கம் என்ன… என்பது வெளிப்படையானது.. எனது பதிவுகளில் தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளேன்…. எனது தியான முயற்சிகள் நீங்கள் கூறுவதுபோல மதம் சார்ந்த்தல்ல… மாறக நம்மை மேலும் பரிணாமவளர்ச்சியை நோக்கி முன்நகர்த்துவது… பன்முகப் பார்வைகளுக்கான …சிந்தனைகளுக்கான அடிப்படையை உருவாக்குவது…
ஆம் உங்கைளப் போன்ற ஒற்றைப்பரிமாண பாவையாளர்களுக்கு இதைப் புரிந்துகொள்வது கடினமானதே…. கொஞ்சமாவது கட்டுண்ட மனதைத் திறந்து வெளியே வாருங்கள்…
மேலும் இலங்கையில் நான் என்ன செய்தேன் என்பதும்… (இதைப் பற்றி விரிவான கட்டுரையை விரைவில் எழுதுகின்றேன்) … மற்றும் எனது நூலிலும் இணைப் பதிவிலும் என்ன எழுதியிருக்கின்றேன் என்பது அதை வாசித்த நண்பர்களுக்கு புரியும்… ஆகவே உங்கள் குறிப்புக்கான பதிலை அவர்கள் தருவதே பொருத்தமானது….
ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்த்து…
நட்புடன் மீராபாரதி
விடுதலைப் போராட்டம்? தொடரும் அடக்குமுறைகள்? படுகொலைகள்? மற்றும் சிந்தனை முறைகள்? எதிர்காலம்? சில கேள்விகள்…
http://tinyurl.com/ctxwrf6
மீராபாரதிக்கு,
கட்டுரை உங்களுக்குத் தனிப்பட்ட அளவில் வேதனையைத் தந்திருந்தால் அதற்காக முதலில் வருந்துகிறேன். ஒரு மனிதனைத் தனிப்பட்ட அளவில் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. நானும் இனியொரு சார்ந்த பெரும்பான்மையானவர்களும் சரியானது என உறுதியாக நம்பும் அரசியல் குறித்தே இங்கு எழுதியிருக்கிறேன். இதனை ஒரு அரசியலாக அல்லாமல் உங்களக்கு எதிரான தாக்குதலாக குறுக்கி நோக்குவதே ஒற்றைப் பரிமாண சிந்தனை. சில நாட்களுக்கு முன்பதாகவே நேபாளத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்த விவாதங்களை நானும் வேறு தோழர்களும் ஏற்பாடு செய்திருந்தோம். இறுதியில் பின்னடைவின் பிரதான ஊக்க சக்தியாக தன்னார்வ நிறுவனங்களின் பங்கைப் பிரதானமானது என்ற முடிவிற்கு வந்தோம்.
இவற்றுள் ஆன்மீகம் அல்லது தியானம் போன்ற கூட்டு சமூகம் சாராத அமைப்புக்களும் கருத்துக்களும் அடங்குவதாக விவாதங்களில் பேசப்பட்டது.
இதன் பின்னர் தன்னார்வ நிறுவனங்களும் அவை ஏற்படுத்தும் அழிவுகள் குறித்தான தொடர் பிரச்சாரத்தையும் கூட்டு சமூகம் சாராத தனிமனி உய்வை ஏற்படுத்தும் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக தீர்மானித்தோம்.
அதன் அடிப்படையில் இரண்டு கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதியிருந்தேன். அவை பின்னதாக உள்ளூர் மொழிகளான வங்காளம், நேபாள் ஆகிட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
இவை நேபாளத்தின் உள்ளேயும் வெளியேயும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. யாரும் இவற்றைத் தனிப்பட்ட மனிதர்களுக்கு எதிரான தாக்குதலாக இதுவரை கருதவில்லை.
http://www.countercurrents.org/navalan170812.htm
http://thenextfront.com/?p=2477
http://thenextfront.com/?p=2515
http://thenextfront.com/?p=2525
இதை இங்கு குறிப்பிடுவது எனது இந்த அரசியல் கருத்து உங்களுக்கு எதிரான விமர்சனம் மட்டுமன்றி பொதுவான மிகவும் சீரியசான எனது அரசியல் கருத்து என்பதைக் குறிப்பிடுவதற்கும் இது மீராபாரதி என்ற தனிமனிதனைப் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்பதைக் கூறவுமே.
இலங்கையில் இன்று மிகத் தீவிரமான ஒடுக்குமுறை நிலவுகிறது. பாசிச அரசாட்சி மக்களைச் சூறையாடுகிறது. மிருகத்தனமான இந்தச் சுரணடலுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். இனியொரு சார்ந்த இலங்கைத் தோழர்கள் இதனைச் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பல தடவைகள் குறித்துக் காட்டியுள்ளார்கள். இந்தப் போராட்டங்களை ஊக்குவித்தலும், அவற்றைத் தலைமைதாங்கும் புரட்சிகர அரசியலை முன்வைத்தலும் இன்றைய இக்கட்டான சூழலில் அவசியமானது.
இதற்கு எதிரான பிரதான தடைகளைக் கடக்கவேண்டியது அவசியம். அதற்குரிய அரசியலின் குறைந்தபட்ச அடிப்படைகளை நாம் முன்வைக முனைகிறோம். அவ்வளவுதான். இது உங்களைப் புண்படுத்தும் தனிப்பட்ட தாக்குதலாக ஒற்றைப்பரிமாண சிந்தனைக்கு வெளியே வாருங்கள்.
விடையங்களைத் தெரிந்துவைத்திருக்கும் புத்திசீவிகளை அன்றி புரட்சிகரப் புத்திசீவிகளை சமூகம் – சர்வதேச சமூகம் முன்னெப்போதையும் விட இன்று எதிர்பார்க்கிறது.
சிறுவயதிலிருந்து அறிமுகமான நீங்கள் உட்பட பலரை இந்தப் போராட்டத்தில் இழந்துபோக நேரிடும் என்பதெல்லாம் தெரிந்தவைதான்.
மீண்டும் நான் முன்வைக்கும் அரசியல் உங்களைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். அந்த அரசியலைத் தொடர எனக்கிருக்கும் உரிமையை மறுக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு..
நாவலன்
முள்ளிவாய்க்காலின் பின்பான காலம் – யுத்தத்தினை விட மோசமான அழிவுகளை – இன அழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என முன்னர் எழுதியிருந்தேன. மேலும் மேலும் இதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வண்ணமே உள்ளன.
மேசமான ஒரு அடக்குமுறை;குள் வாழவேண்டியிருக்கிறது. கட்டுக்கதைகளாக உலவும் கதைகளை எல்லாம் உண்மை என நம்பினால் நிலைமை இன்னமும் மேசமே. அது முழுமக்கள் தொடர்பான பிரச்சினை. சிங்கள் மக்கள் தொடர்பான பிரச்சினையாகவும் விரிகிறது.
இலகுவாக பின்வரமாறு கூறலாம். மாற்ற அரசியலிற்கான தேவை அதிகிரக்கிறது. ஆனால் மாற்று அரசியல்.. அதனை முன்னெடுக்கக் கூடிய சக்திகள் என விரிவாக ஆராணயப் புகுந்தால் எந்த நம்பிக்கைகளும் இந்த கூன்றாண்டு காலத்தில் ஏற்படுத்தப்படவில்லை.
இனியொரு அல்லது ஒரு புதிய குழு .. மாற்று அரசியலுக்கான உரையாடலை ஆரம்பித்து வைக்கலாம்.
நட்புடன்
The problems faced by humanity are multidimensional. Analysis and understanding focused on political dimensions alone are not capable of addressing the multitude of problems of humanity.
There has been a historical failure on the part of Marxists in understanding the strength of feelings and aspirations of minority ethnic communities. Partly this is due to the weakness of their tools of analysis and partly they were not capable of understanding themselves. They denied their own identities to achieve the idealised goals their doctrines set for them. They achieved neither despite their honourable ideals. They were not able to engage with the people because they thought that people could live by material means alone.
Meerabharathi’s search should be understood as a search for self examination. People who may have taken part in his worships can still engage in their political struggles. He is campaigning for an honest self realisation through reflection. An activist or leader who is guided by the understanding that comes with self reflection will be better able to lead a people whose problems are multi dimensional. A leader who leads without knowing who he is will expose his folly at cost to himself and his people.
hi your vew abt meera parathi is not true .There are lot of things we are suffering &we lost as in SL we realising easy to say lot of things from out of SL
தேடக’ உறவுகளுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பே.
****
அட்ரா சக்கை
என்ன நெருஞ்சி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுரீர். மீராபாரதிக்கும் தேடகத்துக்கும் என்ன சம்பந்தம்.
இந்த கட்டுரைக்கும் தேடகத்துக்கும் என்ன சம்பந்தம். இனியொரு ஆசிரியர் குழுவினர் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்களை ஏன் அனுமதிக்கிறார்களோ தெரியாது.
நல்ல பெயர்கள், நெருஞ்சியும், பிடுங்கியும்.
வாசகர் உங்களை இனங்கண்டுஈ ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் விரைவில் வரும். சற்றே அடக்கி வாசிப்பது நல்லது.
உடனடியாக பார்த்தால் தன்னார்வ நிறுவனங்கள் மக்களுக்கு நன்மையளிப்பது போல மாயத் தோற்றம் காட்டும். நீண்ட காலப் போக்கில் பார்த்தால் அவை ஏற்படுத்தி விட்டுப் போகும் அழிவுகள் மீள முடியாத அவலங்களே.
அடக்குபவனையும்,சுரண்டுபவனையும் ஆண்டவனென்று விட்டுட்டு நொந்து நூலாகி இருப்பவனிடந்தான் சாமிகளெல்லாம் சாந்தமும்,சம்மனமும் போதிக்கிறார்கள்.
Tipping Point. Very tantalizing to the ears.
Why so sir ?
அவசர அவசரமாக சபாநாவலன் அவர்களினால் எழுதப்பட்டிருக்கிற ‘போர்க்குணத்தைத் தணித்து சாந்தமாக்குகின்ற முயற்சிகளின் பின்னணிகளில் உள்ள பொய்மைகள்’ பற்றி அவர் ஓடவிட்டுள்ள கருத்துகோர்வைகளில் மட்டுமல்ல அவர் சுட்டியுள்ள பெயர்களிலும் எனக்கு உடன் பாடல்ல. இதில் விசித்திரம் என்னவெனில் கட்டுரையோடும் கருத்தோடும் ஒத்துப்போகாது கருத்தெதுவும் இன்றி ஒதுங்கியிருக்கிற என்னை //நெருஞ்சியும், பிடுங்கியும்.நல்ல பெயர்கள்
வாசகர் உங்களை இனங்கண்டு ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் விரைவில் வரும். சற்றே அடக்கி வாசிப்பது நல்லது//என்று ரமணன் அவர்கள் வலிந்து வம்பிற்கிழுத்துள்ளார். இனியொருவில் நெடுங்காலமாக தொடர்பறுந்து இருக்கிற என்னை மறுபடி இழுத்து வந்திருக்கிற ரமணனுக்கு நன்றி. தேடக **
நெருஞ்சி பிடுங்கி,
தனி நபர்கள் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் போது உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள்
Mr. Sharva the Eastern Province people are slowly getting into the national stream..
All citizens of the country are always in the national stream whether they like it or not. That is my humble opinon sir.