மைத்திரி – ரனில் வருகைக்குப் பின்னர் இலங்கைப் பேரினவாத அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணையை முழுமையாக ஏற்றுச் செயற்படும் அடிமை அரசாக மாறியுள்ளது என்பதன் குறியீடாக ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாடு அமைந்திருந்தது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உலக நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டீன் லாகார்ட் போன்ற முக்கிய புள்ளிகள் மைத்திரிபால சிரிசேனவிற்கு அதி முக்கியத்துவம் வழங்கினர். அவரது இருக்கையை நோக்கிச் சென்று வரவேற்றனர். மைத்திரிபால சிரிசேனவின் அரசியல் நடவடிக்கைகளை பராக் ஒபாமா பாராட்டியுள்ளார். அமெரிக்க அரசு இலங்கைக்கான தனது உதவித்தொகையைப் பத்து மடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதையும் இரத்தம் வடியும் பூமியாக மாற்றிய அமரிக்க ஏகாதிபத்தியமும் அதன் துணை நாடுகளும் ஆசியா பிவோட் என்ற தமது புதிய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தைக் குறிவைத்துள்ளன. இதன் மையப்புள்ளியாக இலங்கையை அவை மாற்றிவருகின்றன. இலங்கை அரசையும், அதற்கு எதிரானதாகக் போலித் தோற்றம் தரும் புலம்பெயர் குழுக்கள் மற்றும் இலங்கையிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் போன்ற அனைத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசே கையாண்டு வருகிறது.
இலங்கை அரசை இயக்கும் அமெரிக்க அரசே இலங்கை அரசிற்கு எதிரான தமிழ்த் தேசியக் குழுக்களையும் இயக்கிவருகின்றது. இதனால் இலங்கை அரசிற்கு எதிரான அரசியல் போலிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.இத் தரப்புக்கள் அனைத்தும் இணைந்து சுய நிர்ணைய உரிமையக்கான கோரிக்கையை மட்டுமல்ல சிங்கள உழைக்கும் மக்களின் அடிப்படைஉரிமைகளையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இன்றைய எமது தேவை, புதிய முற்போக்கு ஜனநாயக அரசியல் மக்கள் சார்ந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்,
AS HE IS AN EXPERT IN SETTING CHINA AGAINST USA DEVILS ARE GIVEN MORE RESPECT.
You mean the devil is better than the evil?