ராஜபக்ச அரசின் போர்க்குற்றங்களை ‘ஜனநாயகமயப்படுத்தும்’ இலங்கை பேரினவாத அரசு அரசியல் கைதிகளை விசாரணையின்றி சிறைப்படுத்தி வைத்திருப்பதை இன்றும் நியாயம் எனக் கூறுகிறது. அந்த நியாயத்தின் அடிப்படையில் 31 அரசியல் கைதிகளை பலத்த நிபந்தனையின் அடிப்படையில் தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.
ஒரு நாட்டின் அரசு, அது நல்லாட்சி என்று பெயர்வைத்துக்கொள்ளட்டும், வேண்டுமானால் மீட்பர்கள் ஆட்சி செய்வதாகப் பீற்றிக்கொள்ளட்டும், விசாரணைகள் எதுவுமின்றி தமது சொந்த மக்களை அடைத்துவைத்திருப்பதை நியாயம் என்று கூறினால் அது அரசு என்ற தகைமையை இழந்துவிடுகிறது.
கைதிகளில் பெரும்பாலானவர்கள் வெறும் சந்தேகத்தின் பேரிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல கைதிகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கே முரணான வகையில் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் சந்தேகத்தின் பேரில் ஒருவரை 18 மாதங்கள் வரை விசாரணையின்றிச் சிறைவைக்க அனுமதிக்கிறது. சில அரசியல் கைதிகள் 1997 ஆம் ஆண்டிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மைத்திரி – ரனில் அமெரிக்க அடியாள் அரசு ‘நல்லாட்சி’ என்ற பெயரில் நடத்தும் நாடகத்திலும் இச் சட்டவிரோத நடவடிக்கை தொடர்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 31 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்படபோதே அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் என்ற அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் கொழும்பு அல்லது வவுனியா பொலிஸ் நிலையங்களில் அவர் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரிவிட்டுள்ளதாக எமது செய்திளார் தெரிவித்தார்.
இலங்கைச் சட்டங்களுக்கே முரணான வகையில் சிறைப்பிடித்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருவதற்கும், வழக்குத் தாக்கல் செய்வதற்கும், சட்டம் படித்தவர்களின் குழாம் எனப் புழகாந்கிதமடையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு குறைந்தபட்ட வழிமுறைகள் கூட இல்லையா என்ன?
‘ஒரு தேசம் இரு நாடு’ கஜேந்திரகுமார் குழுமம் மழைக்காலத் தவளை போல தேர்தல் காலங்களில் மட்டும் கூச்சலிடுவது அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதி செய்யாது.
மாவீரர் தின வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நவம்பர் மாதத்தில் புலம்பெயர் பினாமித் தேசியவாதிகள் அரசியல் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விடமாட்டார்கள்.
இலங்கை அரசின் சிறைகளில் அடைத்த்வைக்கப்பட்டுள்ள சரணடந்த புலிகளின் போராளிகளின் பெயர் விபரங்கள் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று பிணை வழங்கப்பட்ட 31 கைதிகள் தேவையேற்படும் போது மீண்டும் கைது செய்யப்பட்டு விபரங்களை மறைத்து சிறையில் கூட கொன்று போடப்படலாம்.
இலங்கை அரசிற்கு எதிரான உலகப் பொது அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட வேண்டிய கடமை இன்று சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனதும் கைகளைச் சென்றடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகளில் சபையிலிருந்கு உலகம் முழுமைக்கும் புதிதாக மனிதாபிமானம் கற்பிக்கும் அரசு தனது முதல் நாள் ஆட்சியிலிருந்து நடத்திவரும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாத நடவடிக்கைகளை உலகமக்கள் மத்தியில் கொண்டு சென்று இலங்கைப் பேரினவாத அரசை உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தத் தவறினால் அது மக்களை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச்செல்லும்.
எல்லோரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யச்சொல்லி ஓலமிடுகிறார்கள்;இந்த முன்னாள் புலிகள் ஆதரவாளர்களின் விடுதலைக்கு பின்னர் என்ன வாழ்வாதார திட்டம் எல்லா தேசியர்களும் வைத்திருக்கிறார்கள்?
ஒன்றுமில்லை;சிறையில் இருந்தாலாவது பாணும் பருப்பும் கிடைக்கும்.
பின்னர் தமிழினி மாதிரி லெப்கேணல் கேணல் கொடுத்து சிங்களவரை இன்னும் புலி வாழ்வதாக உசுப்பேற்றிவிடுவார்கள்;
2009க்கு பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் நடக்கும் பல்வேறு குற்றச்செயல்களில் பின்னால் விடுவிக்கப்பட்ட புனர்வாழ்வுபெற்றவர்கள் என்ற பெயரில் உள்ள புலிகள் என்பதை பலர் அறியவுமில்லை எழுதவுமில்லை;
இதற்கு உண்மையான காரணம் வாழ்வாதரம் இல்லாததால் எழுந்த குற்றச்செயல்களே;ஓர் ஒழுக்கமான கட்டுப்பாட்டுடன் இருந்த இயக்கத்தவர்களின் செயல்களே இவை என்பதை புலத்தார் அறிந்திருக்கிறார்களா?
இதேபோல் தெற்கில் பல குற்றச்செயல்களுக்கு உடந்தையாக சிறிலங்கா படையினர்?
மாகாணசபை இயங்கிற கேவலத்தை பார்க்கையில் இவர்களிடம் தமிழீழம் கொடுத்துப்பார்த்தால் எப்படியிருக்கும்?
ஊர்ப்பெட்டிசக்காரர்களும் வெள்ளைவேட்டிக்கள்ளரும் தான் இப்போது தமிழ் தேசிய அரசியல் செய்கிறார்கள்,
பாவம் பிரபாகரனின் ஆவிப்படை
பிரவீன் , அரசியல் கைதிகளும் சரி அவரகளது உறவினர்களும் சரி , அவர்களை விடுதலை செய்தால் அவர்களது வாழ்வாதரத்துக்கு எம்மிடம் ஒன்றுமில்லை எனவே சிறையிலேயே வைத்து பாணும் பருப்பும் கொடுங்கள் என்று சொல்லவில்லையே . அவர்களே சொல்லாத ஒன்றை அவர்கள் சார்பில் நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . அவர்களது ஓசி வக்கீலாக உங்களை ஆஜராக சொல்லி யாரும் கேட் கவுமில்லை.
தெற்கில் பல குற்றசெயல்களுக்கு உடந்தையாக படையினர் இருந்தனர் என அவ்வப்போதாவது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன , ஆனால் வடகிழக்கில் நடைபெறும் குற்ற செயல்களுக்கு புனர் வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள் என எந்த ஊடகங்கலும் செய்தி வெளியாகவில்லை . அரசின் , புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஊடகங்களிலும் கூட இப்படியான செய்தி வெளியாகததின் மர்மம்தான் என்ன ?
வட கிழக்கில் நடை பெறும் குற்ற செயல்களுக்கு புனர் வாழ்வு பெற்றவர்கள்தான் பொறுப்பு என இலங்கை கட்டுப்பாட்டிலுள்ள ஊடங்களே தெரிவிக்காத விடயத்தை புலனாய்ந்து இங்கு தெரிவிக்கும் நீங்கள் , இந்த விடயத்தை ப்பற்றி இலங்கை அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் இது வரை வெளியிடாமல் இருக்கும் மர்மத்தையும் புலனாய்ந்து தெரிவியுங்களேன்
வெட்கக் கேடான கவலைக்குரிய விடயம்..கைதிகள் விடுதலை பற்றியும் பிணை பற்றியும் பேசப்படும்போது சட்டத்தரணிகளைக் கொண்ட எமது அரசியல் கட்சிகள் தகுந்த ஒரு முகாமைத்துவத்தைக் கொண்டிருக் காதமையாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டுமே பெரிய சட்ட வல்லுனர்களையும் விரிவுரையாளர்களையும் கொண்ட அணி.
சமஷ்டி பற்றியும் 13 ஆம் திருத்த,ம் பற்றியும் உள்ளக வெளியாக விசாரணைகள் பற்றியும் விளாவாரியாக விளக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கைதிகள் பிணை விடயம் தெரியாமல் போனது ஏன் ?
பிணையில் கைதிகள் விடப்படுகையில் அவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதவர்கள் இதுவரையில் இது தொடர்பான கட்டமைப்புக்களை ஏற்படுத்தாதது – இரு அணிகளுமே இன்னும் மக்கள் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவோ அல்லது ஒரு இளையவர் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவோ தெரியவில்லை.
நீண்ட காலம் உள்ளேயிருந்து வெளியாகிவரும் கைதிகளின் எதிர் காலம் தொடர்பில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத நிலையில் … (இது சாதாரண கைதிகளின் விடயம் அல்ல- அரசியற் கைதிகள் என்பதைக் கருத்திற்கொள்க..)
பாராளுமன்ற உறுப்பினர்களோ ,மாகாண சபை உறுப்பினர்களோ இது பற்றி ஏதாவது சிந்தனைகளை, திட்டங்களை முன்வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
“எங்களுக்கு எப்பவோ தெரியும் இந்தக் கூத்து எல்லாம் சரி வராது” என்பது இன்று தேவையான பதில் அல்ல.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விடுதலை ஆகி வெளி வரும் கைதிகள் மீண்டும் …?(கைது செய்யப்பட்டாலும் அதற்குப் பின்னர் தான் நாம் ஆலோசனை செய்வோம். அல்லது அதுபற்றிய திட்டமிடுகையும் நம்மிடம் இல்லை) நன்றி
பிரவின் , அரசியல் கைதிகள் தமமை விசாரி அல்லது விடுதலை செய் என்றுதான் கேட் கிறார்களேயன்றி கூட்டமைப்போ அல்லதி தமிழ் தேசிய முன்னணியோ தம்மை விடுவிக்க கோருவதனால் எம்மை விடுவியுங்கள் என்று கோரவில்லை.
இந்த கட்சிகள் தமது வாழ்வாதரத்துக்கு ஏதாவது செய்தால்தான் நாம் வெளியே வருவோம் என கூறவில்லை .
அரம்பத்திலிருந்தே மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள் .
அதுவும் இரு தமிழ் தேசியகட்சிகளையும் என்னமோ ஒரு நாட்டினது அரசுக்கு ஒப்பானதுபோல் கருதி உளறிக்கொட்டியிருக்கும் உமது அரசியல்புரிதல் அடேங்கப்பா !
அரசியல் கைதி என்கிறீர்கள் லாலா நீங்கள் ஆழ்ந்து அரசியல் படித்துவிட்டு வந்து இங்கு உங்கள் கருத்துக்களை கொட்டுங்கள்;
அரசியல் கைதிகள் விடுதலையான பின்னரான அவர்களின் வாழ்வாதரத்துக்கான தனிப்பட்ட லாலாவின் ஒரு திட்டத்தை முன்வையுங்கள்?
அரிசிக்குள்ளும் அரசியல் உண்டு பாருங்கோ லாலா?
பிரவீன் , கட்டுரையின் தலைப்பையே நீங்கள் சரியாக படிக்காது கருத்து தெரிவித்து வருகிறீர்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.
கட்டுரையின் தலைப்பே அரசியல் கைதிகள் என்றுதான் தெரிவிக்கறது . உங்களது கண்களுக்கு மட்டும் சாதாரண கைதிகளாக தெரிந்திருக்கிறது.
விடுதலையாகும் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்துக்கு தனிப்பட்ட லாலாவிடமும் , கட்சிகளிடமும் திட்டமேதுமில்லை . எனவே அவர்களை சிறைக்குள் வைத்து பாணும் பருப்பும் வழங்குவோம் என கருணை பொங்க கூறியுள்ளீர்கள் .
எந்த அரசியல் கைதியாவது அல்லது அவர்களை விடுதலை செய்ய சொல்லி போராடும் அவர்களது உறவிவினர்களாவது , லாலாவிடமும் , அரசியல் கட்சிகலிடமும் அவர்களது வாழ்வாதாரத்துக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள் அப்படி ஏதுமில்லாவிட்டால் சிறையிலேயே வைத்து பாணும் பருப்பும் கொடுங்கள் என்று சொல்லவில்லையே ?
சிறை கைதிகள் யாரும் அப்பாவிகள் அல்ல. குற்றம் செய்தவர்கள். குற்றத்திற்கான காரணங்கள் வேறுபடலாம். ஆணால் குற்றம் குற்றமே!
அரசியல் கைதிகள் பல வருடங்களாக விசாரணை எதுவுமின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் . குற்றவளிகள் என தீர்ப்பு வராதவரை அவர்கள் சந்தேகநபர்களே . விசாரி அல்லது விடுதலை செய் எனக்கோரித்தான் அவர்களும் அவர்களது உறவினர்களும் போராடி வருகிறார்கள் .
I am sorry, you are talking to some dim wit from the East unfortunately 🙁
லாலா, சாதாரண சட்டத்தின் கீழ் குற்றம் செய்தால், நீங்கள் சொல்லுவது பொருந்தும். பயங்கரவாத தடை சட்டமுறை அப்படியல்ல. பயங்கரவாத தடை சட்டம் இயற்றிய நோக்கமே அதுதான். வித்தியாசத்தை விளன்கிகொள்ளுங்கள்.
To ex militants, all the professionals are ‘dim wits’. That is why they executed professionals like Neelan, Kathirgamar, Amir, Yogeswaran, Duraiyappah, ahhh it is a long list. Good that due to PTA law, some of them are confined to Facebook only now and regretting about their past.
பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட வரலாறு இருக்கிறதென்பதை நீங்கள் விளங்கி கொள்ளுங்கள் .
பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டால் உடனே அவர்கள் அப்பாவிகள் அல்ல குற்றம் செய்தவர்கள் என ஆகி விடுவார்களா ? புது விதமான விளக்கமாக இருக்கிறது ?
Remember you are debating with a dim wit himself you know.