Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அயோக்கியர்களின் இறுதி ஆயுதமாகும் ‘தமிழ்த் தேசியம்’

இனியொரு... by இனியொரு...
10/18/2015
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

Nadigar-Sangamதமிழ் நாட்டு கலை வியாபாரக் கூத்தாடிகளின் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கூத்துக்கள் மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பற்ற கனவுலகத்தின் குத்துவெட்டுக்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கலையை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றியதில் கோப்ரட் சினிமாவிற்குப் பெரும் பங்குண்டு. அதிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை சினிமாவோடு கட்டிப் போடும் அளவிற்கு இந்திய சினிமாக் கூத்தாடிகள் செல்வாக்குச் செலுத்துகின்றனர். தமிழ் நாட்டு மக்களது வாழ்க்கையோடும், எமது வாழ்க்கையோடும் கிஞ்சித்தும் தொடர்பற்ற சினிமாக் கூத்தாடிகளின் குத்துவெட்டு ‘தமிழ்த் தேசியத்திற்குள்’ நுளைந்த போதே இப்பதிவை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.

அடிப்படையில் இன்றுள்ள தென்னிந்த நடிகர் சங்கம் ஊழல் செய்ததாக நீதிமன்றம் பரிந்துரைத்தைத் பயன்படுத்தி புதிய குழு தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. இங்கு புதிய குழு நியாயமான மனிதர்களைக் கொண்டதா இல்லையா என்பது எமக்குத் தேவையற்ற விவாதம்.

இங்கு விவாதப் பொருள் பாரதிராஜா, சீமான், கௌதமன் போன்ற தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளின் தலையீடு மட்டுமே. அதாவது பதவியிலிருக்கும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சரத்குமார், ராதாரவி போன்றோர் ஊழல் செய்தார்களா என்பதெல்லாம் பிரச்சனையில்லை, அவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று இப் பிழைப்புவாதிகள் கூறுகின்றனர்.

கௌதமன், பாரதிராஜா, சீமான் போன்றவர்கள் ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் ஈழ மக்களின் ஜனநாயக முகத்தில் கரி பூசியவர்கள், ஈழத் தமிழர்க்ளின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை சினிமாக் கூத்தாக மாற்ற முற்பட்டவர்கள். தமிழ்த் தேசியத்தைப் பயன்படுத்தி புலம்பெயர் நாடுகளில் தமது பிழைப்பை உறுதி செய்துகொண்டவர்கள்.

சமூகத்தைச் சீரழிக்கும் சினிமாப் பிழைப்பில் தோல்வியடைந்த பலரின் அடுத்த குறி தமிழ்த் தேசியமாகிவிடுகிறது. புலம்பெயர் நாடுகளில் அருவருக்கும் அரசியல் நடத்தும் ஐரோப்பிய நிறவாதக் கட்சிகளுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் இனவாதத்தை உமிழும் இவர்கள் ஈழப் போராட்டத்தை இனவாதமாக்கிச் சிதைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

மொழி என்பது தேசிய இனத்தின் இயல்புகளில் ஒன்றே தவிர அதுவே தேசிய இனத்தின் முழுமை அல்ல. அயர்லாந்தில் ஆங்கிலம் பேசும் மக்கள் இங்கிலாந்தின் ஆங்கிலம் பேசும் அரச அதிகாரத்திலிருந்து விடுதலை பெறப் போராடுகிறார்கள். அதே போல ஈழத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்காக ஈழத்தைச் சார்ந்த தேசிய இனம் போராடுவது நியாயமானது, அதற்கு தமிழ் நாட்டிலுள்ளவர்கள் ஆதரவளிப்பதும் நியாயமானது. ஆனால் அவை இரண்டையுமே இணைத்து தமிழ்த் தேசியம் என்று பொதுவான வரைமுறைக்குள் அடக்கி அயோக்கியர்களை முன்னிலைப்படுத்துகிறார்களே, அது ஈழப் போராட்டத்தின் பின்னடைவு.

தென்னிந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளை தமிழ்த் தேசியம் பாதுகாப்பதைப் போலவே, தமிழ்த் தேசியம் என்ற தலையங்கத்தில் புலம்பெயர் நாடுகளில் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கும் தமிழ்த் தேசியம் பயன்படுகிறது.

இங்கு தமிழ்த் தேசியம் மட்டுமல்ல, தேசிய விடுதலைக்கான போராட்டம் கூட, சரியாகத் திட்டமிடப்படாவிட்டால் ஆதிக்க சக்திகளின் நலன்களுக்காகவே பயன்படும் என்பதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

ஆக, தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தேசிய இனங்கள் மத்தியிலுள்ள ஆதிக்க சக்திகளுக்கும் எதிரானதே என்பதை இச சம்பவங்கள் எல்லாம் நமக்குக் கற்றுத்தருகின்றன.

ஒரு தேசிய இனத்தின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை அறிந்துகொள்வதற்குப் பதிலாக தமிழர்கள் என்ற தலைப்பில் எதிரிகளையும் இணைத்துக்கொள்கிறார்களே, அங்கு தான் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்வியே ஆரம்பமாகிறது.

தமிழ்த் தேசியம் என்பதும், தேசியம் என்பதும் மக்கள் சார்ந்த கோட்பாடாகத் திட்டமிடப்படாவிட்டால் அது அயோக்கியர்களின் புகலிடமாகிவிடும் என்பது நடிகர் சங்கத் தேர்தலில் மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் அழிப்பிலும் நிறுவப்பட்டது.

-வாகீசன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தேசியவாதக் கட்சியும், பாசிசத்திற்கு எதிரான அய்க்கியம் அமைப்பும் எதிர் ஆர்ப்பாட்டங்கள்

தேசியவாதக் கட்சியும், பாசிசத்திற்கு எதிரான அய்க்கியம் அமைப்பும் எதிர் ஆர்ப்பாட்டங்கள்

Comments 4

  1. Mahindan Veera says:
    10 years ago

    பாரதிராஜா சீமான் கெளதமன் இவங்களை குறை கூற நீ யார். ?

  2. singaramsirippou says:
    10 years ago

    சரியா சொன்னீங்க காம்ரேட்

  3. sumerian says:
    10 years ago

    பாரதிராஜா, சீமான், கெளதமன் போன்றோரிற்கு 1.சரத்குமார் அணியின் கோடிக்கணக்கான ஊழலோ அல்லது2. ராதாரவி நடிகைகளை படுக்கக்கூப்பிட்டேன் அதிலென்ன தவறு என்ற பெண்ணடிமைத்தன பேச்சு, 3.ராதிகாவின் (ரெட்டி என்று கூறி )சாதிவெறியினை தூண்டிய பேச்சு என்பன கண்ணுக்குத்தெரியவில்லையா?
    பாரதிராஜா, சீமான் அறிமுகப்படுத்திய நடிக, நடிகைகளில் எத்தனைவீதம் தமிழர்கள்?
    சரியான சந்தர்ப்பவாத ஊழல்பேர்வழிகள்.

  4. Arun Vincent says:
    10 years ago

    You all are cinema fanatics. Please grow up.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...