இன்னும் ஐந்து வருடங்களுக்கு தம்மை ஆள்வதற்கு இன்னோரன்ன காரணங்களால் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட வாக்குகளின் பின்னர் நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் தவழ்ந்து சென்று அவரின் பாதங்களை தொட்டு வணங்கினர். இந்த வெற்றியின் பின்புலத்தில் வை.கோபாலசாமி குழுவின் பங்கு புதைந்திருப்பதை பலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஈழப் பிரச்சனையை தமது அரசியல் வியாபாரத்திற்ககப் பயன்படுத்திவந்த சீமான், அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் படு தோல்வியடைந்தனர்.
குறிப்பாக சமூகவலைத் தளங்களில் செல்வாக்குப்பெற்றிருந்த சீமான் தனது தொகுதியான கடலூரில் படு தோல்வியடைந்தார். முதலமைச்சர் வேட்பாளர்களில் தான் மட்டுமே தமிழன் என்பதால் தனக்கு வாக்களிக்குமாறு கோரிவந்த சீமான் தனது தொகுதியில் 12,497 வாக்குகள் மட்டுமே வாங்கி கட்டுப்பணத்தை இழந்து ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
எம்.சி.சம்பத் (அ.தி.மு.க) 70922 வாக்குகளும், இள.புகழேந்தி (தி.மு.க) 46509 வாக்குகளும், சந்திரசேகர் (த.மா.கா) 20608 வாக்குகளும், தாமரைக்கண்ணன் (பா.ம.க) 16905 வாக்குகளும், சீமான் (நாம் தமிழர் கட்சி) 12497 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணியிலும் அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொள்வதாக பகிரங்கமாக தொலைக்காட்சி ஒன்றில் ஆவேசமாகச் சவால்விட்ட தமிழக அரசியல் கோமாளி சீமான் கட்சியைக் கலைப்பாரா என்பது குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பிழைப்புவாதிகளில் பலர் சீமானின் கட்சிக்கு ஒரு இடமாவது கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பணத்திரட்டலில் ஈடுபட்டிருந்தனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரச்சாரத்தின் பின்னர் சீமான் தமிழ்த் தேசிய வியாபாரிகளின் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பதாக நடைபெற்ற போட்டி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ரீ.சீ.சீ இற்கு ஆதரவாக சீமான் உரை ஒன்றை அனுப்பிவைத்திருந்தார்.
ஈழத்தமிழர்களின் கண்ணீரையும் அவலத்தையும் முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் சீமான் போன்றவர்களின் அரசியல் தோல்வி ஆரோக்கியமான முன்னுதாரணம்.
Nice lesson for people like Seeman. The results are a blow to reactionary Tamil nationalists.
Hahaha , Don’t know what he gonna do next . He must do what he said in live telecast
கம்யூனிஸ்ட் கட்சி என்ன சாதித்தது?
பாவம், தமிழகத்திற்கு 5 தலைநகர் கட்டலாம்னு இருந்ததாரு. இப்ப என்ன செய்வாரு? வீட்டுக்குள்ள 5 கழிப்பறை கட்டி அவசரத்துக்கு ஒன்னு, மிக அவசரத்துக்கு ஒன்னு, அமைதியா போறதுக்கு ஒன்னு, இப்பிடி சில புரட்சி திட்டங்கள் போடலாம். !
People are so happy for a tamilian lost in tamilnadu..nalla irungada
I cannot understand as to why he cannot do a self assessment. Is he such a big fool?
Well, it is easy to say now. There are Psychiatrists who get caught exposing themselves. If only they knew the consequences
சீமானிடம் சில தவருகள் காணப்படுகின்றது.சுய விமர்சனம் செய்து அந்த தவருகள் கலையபடுமாக இருந்தால் நாளை தமிழர்கள் போற்றும் தலைவனாக உருவாக சீமானிற்கு சந்தர்பம் உல்லது
சீமான வச்சு ஒரே கீழ்த்தரமா செய்திகள் போடுறிங்க, தலைவரோட போய் நின்னுட்டு வந்த, வைகோ பத்தியும் கொஞ்சம் கிழிக்கலாமே. அவரும் தான் ஈழம் பற்றி கதச்சாரு அது வியாபாரம் இல்லையா, ஒரு தமிழன் முன்னுக்கு வர விட மாட்டிங்களே.
கண்டிப்பாக சீமானின் விசிறிகள் பார்க்க வேண்டிய காணொலி
உங்களை போல மாட்டு மூளை தனக்கும் உண்டா என கேள்வி கேட்கும் எண்ணம் சீமானுக்கு இன்னும் வரவில்லை என்பதையா சொல்ல வருகிறீர்கள்?
அவன் ஒரு பொடிப் பயல் வெடிக்கிறான் கிடக்கட்டும். நீங்கள் பேடி பயல், மன்னிக்கவும் பெடி பயல் நொடிக்கிறியள் அவ்வளவுதான். சீமான் தனது நாட்டில் தனது அரசியல் செய்கிறார், மற்றவனின் வயிற்று உளைவு உங்களுக்கு ஏன் குத்துகிறது. உக்கட சோத்தை திண்டு உங்கட பனை வெளிக்கு போங்கோ. சீமான் கட்டுறது கழிவு கூடமாயினும் அவருக்கும் அவர் மக்களுக்குமே உங்களுக்கு அல்ல.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வியய காந்தின் பின்னால் விசர் நாய் போல் அலைந்து திரிந்ததை விடவா சீமான் கெட்டுப் போனார்?
ஈழத்து தெமிலன்கள் சிலர் பச்சை மிளகாயை மல வாசலில் சொருவி கொண்டு மூலம் தள்ளி திரிய, தமிழ் நாட்டு தமிழன் பச்சை மிளகாயை வாயில் கடித்து கொண்டு கொதிக்கிறான் அவ்வளவுதான்.
சீமானை பற்றி கதைக்கும் அரசியல் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும் அதை விட மேலாக என்னதான் புரியும்.?
S.G Ragavan
என்ன இது புாியவில்லை?
அவா்கள் அவா்கள் நாட்டில் அரசியல் செய்வதற்கு பின்பு எதற்கு ஈழம் என்ற மிளகாயை தோ்தல் காலங்களில் மட்டும் கடிக்கின்றாா்கள்?? ஐயா பொியோா்களே ராயிவ் காந்தியின் கொலையின் பின்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இலங்கைத்தமிழரையிட்டு எந்த அக்கறையும் கிடையாது ஆக அதைவைத்து அரசியல் செய்வதோ அதனால் வெற்றியோ அந்த வெற்றியால் தமிழருக்கு விடுதலையோ கிடைக்கப்போவதில்லை.
இனியொரு அடிக்கடி கூறும் விடயம் அங்கு வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஒரு வழியை அமைத்துக்கொடுத்துவிட்டு பின்பு ஈழ மிளகாயை கடிக்கச்சொல்லுங்கள் நாங்களும் நம்ப முற்படுகிறோம்.
Kumar, எனது எதிர்வினை Arun Vincent இக்கு எழுதப் பட்டது.
இருக்க, சீமான் கோமாளியானால் தமிழகத்தில் போட்டியிட்ட மற்ற கட்சிகள்? குறிப்பாக கம்முனிஸ்டுகள் யார் என்பதில் ஏன் கள்ள மௌனம்?
சீமானை விமர்சிப்பதானால் எமக்கு என்ன லாபம்? சீமானின் அரசியலை விட ஈழத்து அரசியல் பாதாளத்தில் அல்லவா உள்ளது.
தமிழக அகதிகள் இரட்டை குடியுரிமை பெற பலர் பிரேரிக்கின்றனர். இது இலங்கையின் தமிழர் குடிப் பரம்பலை திட்டமிட்டு குறைக்கும் வேலை அல்லவா?
சீமானின் அதீத உணர்ச்சி வசப் பட்ட அரசியல் தமிழகத்துக்கும் , ஈழத்துக்கும் நன்மை தரும் விடயமாக அமையப் போவதில்லை. அதனை அவரே திருத்திக் கொள்ளுதல் வேண்டும்.
ஈழத்தமிழர் கோமாளிகளாகவும் ஏமாளிகளாகவும் உள்ளபோது சீமானை கோமாளியாக்கி நாமும் ………………………… ஆகப் போகின்றோம் அவ்வளவு தான்.
ராகவன் சொல்வதில் உண்மை இருக்கிறது .5 வருடங்களுக்கு முன் கட்சி தொடங்கிய சீமானைப்பார்த்து கொக்கரிப்பவர்கள் , கெக்கெ பிக்கே என்று சிரிப்பவர்கள் , சர்வதேச ,நூற்றாண்டு பழமையான கம்யூனுஸ்டுகளின் கேவலங்களை விமர்சிக்காது முழு சோத்தை மறைப்பதற்கு சோறில்லாது வீடு முழுக்க ஒடித்திரிகிறார்கள் .யார் என்ன சொன்னாலும் இந்த தளம் மார்க்சீய , லெனினிய சார்புத்தளம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் . தமது கொள்கை சார்ந்த கட்சியின் கொள்கை சார்ந்த வக்கற்றதனத்தை விமர்சிக்க துப்பில்லாதவர்கள் 5 வருடங்களுக்கு முன் கட்சி தொடங்கிய சீமானை அவர் தமிழ் தேசியவாதி என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் நாஜி என்றும் இனவெறியன் என்றும் தூற்றுகிறார்கள் .
சிமான் தேர்தல் காலத்தில் ஈழ மிளகாயை கடிக்கவில்லை . கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே ஈழ பிரச்சனையை பேசி வருகிறார் என்பது பொதுவாக ஊடகஙளை பார்த்து வரும் எவருக்கும் புரிந்த உண்மை . முதலில் தமிழ்நாட்டு ஈழ அகதிகள் பிரச்சனை முடித்து விட்டு ஈழம் பற்றி பேசட்டுமென்று ஒரு அவசரக்குடுக்கை அசைன்மன்டும் கொடுத்து காலக்கெடுவும் விதிக்கிறார் .
ஈழ அகதிகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இடத்தில் சீமான் இல்லை . அவர்களுக்காக இப்போது போராடும்நிலையில்தான் உள்ளார்.அகதிகளின் விடயம் மாநில அரசுக்குடபட்ட ஒரு விடயம் கூட இல்லை . அது மத்திய அரசு கவனிக்க வேண்டிய ஒரு விவகாரம்.
தமிழ்நாட்டு ஈழ அகதிகள் விடயத்தை தீர்த்து விட்டுத்தான் ஈழ அரசியல் பற்றி பேச வேண்டுமன சொலபவரைப்பார்த்து . ஈழத்தில் இருக்கும் மக்கள் புலத்தில் இருந்து கொண்டு இணையத்தில் வாய் சவடால் அடிக்கும் உங்களைபார்த்து புலத்தில் பல நாடுகளில் சிறைக்குள் வாடும் தமிழ் அகதிகள் பிரச்சனையை தீர்த்து விட்டு எங்கள் பிரச்சனை பற்றி பேசுங்கள் என்று சொன்னால் முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பீர்கள் .
சீமான் தனது தொகுதியில் தோல்வியடைந்தார் என்று கொக்கரிக்கும் நீங்கள் , கம்யூனிஸ்டுகள் தனித்துநிக்க பயந்து கூட்டணி அமைத்தது மட்டுமல்லாமல் , ஏங்கல்ஸ் , மார்க்ஸ் , லெனினுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத விஜயாகாந்தை தலைவராக ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ வங்குரோத்துதனத்தை உங்களுக்கு யார் இடித்துரைப்பது . சீமான் கடலூரில் தனித்து போட்டியிட்டார் , ஆனால் கம்யூனிஸ்டு தலைவர்கள் கூட்டணி அமைத்தும் தோல்வி பயத்தில் எங்கும் போட்டியிடாமல் ஒடி ஒளிந்து கொண்டார்கள் . இந்த கேவலங்களை மறைப்பதற்குத்தான் சீமானை பிடித்துக்கொண்டு தொங்குக்கிறீர்கள் .முதலில் உங்கள் முதுகில் உள்ள இடது சாரி , கம்யூனிஸ வங்குரோத்துதங்களை பினாயில் ஊற்றி கழுவி விட்டு மற்றவர்களை விமர்சியுங்கள்.
தமிழ் நாட்டின் 70 வருட சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக வாக்கு வங்கியே இல்லாத பல சாதிகளின் பிரதிநிதித்துவம் சீமான் கட்சியால் கொடுக்க பட்டது. தெரிந்தோ தெரியாமலோ, கிரிக்கெட் , சினிமா என்று இருந்த பல இளைஞ்சர்கள் அரசியல் பற்றி பெசுகிறர்ர்கள். 4.5 லட்சம் மக்கள் காசு வாங்காமல் சீமான் கட்சிக்கு வாக்களித்திருகிரார்கள். அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் என்று முதல் தடவை இவர்கள் சொல்கிறார்கள். இயற்கை வேளாண்மை, தற்சார்பு பொருளாதாரம், பல்தேசிய கம்பனிகளுக்கு எதிரான பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். இவர்களை கோமாளிகள் என்று தமிழ் நாட்டில் உள்ள பல் தேசிய கம்பனி சார்ந்த பொருளாதார ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் நிறையவே காரணம் உள்ளது. ஆனால், இனியொரு போன்றவர்கள் என்ன நடக்கிறது என்று தெரிந்து செய்கிறார்களா இல்லை, சீமான் பிரபாகரனை முன் நிறுத்துவதால் இந்த கடுப்பா? ஒன்று நிச்சயம், லெனினோ, மக்சோ இருந்திருந்தால் கூட இவர்களை கேட்டிருப்பார், நீங்கள் யாருக்கும் நண்பன் இல்லை, ஆனால், நீங்கள் யாருக்குதான் எதிரி இல்லை.