Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரித்தானியாவில் தமிழர்கள் மத்தியில் பணம் திரட்டும் தமிழ் ஐ.எஸ்.ஐ.எஸ்

இனியொரு... by இனியொரு...
05/07/2015
in இன்றைய செய்திகள்
0 0
16
Home இன்றைய செய்திகள்

seemanஉலகம் முழுவதும் இனவாதமும் நிறவாதமும் பாசிசக் கருத்துக்களும் மக்களைக் கூறுபோட்டு அழிக்கும் நிலையில் ஈழப் பிரச்சனையை முன்வைத்து தென்னிந்தியாவில் பிழைப்பு நடத்தும் இனவாதி சீமானின் குழுவினர் பிரித்தானியாவில் கிளை ஒன்றை ஆரம்பித்து பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஈழத்தில் மக்களின் கண்ணிரையும் அவலங்களையும் தமது வியாபாரமாக்கிக்கொள்பவர்களில் பிரதானமானவர் சீமான். சினிமாவில் தோல்வியடைந்த சீமான் பிழைப்பிற்கு ஈழமக்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் பயன்படுத்திக்கொள்கிறார்.

வீரத் தமிழர் முன்னணி என்ற பெயரில் சீமானின் குழுவினர் பிரித்தானியாவில் பணம் திரட்ட ஆரம்பித்துள்ளனர். தென்னிந்தியாவில் போஸ்டர் பிரச்சாரம் செய்வதற்காக பெருந்தொகைப் பணம் தேவைப்படுவதாகவும், தமிழகத்தில் வாக்குப் பொறுக்கி ஆட்சியைப் பிடிப்பதாகவும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தீவிர இனவாதத்தைப் பரப்பும் முயற்சியில் சீமான் குழு ஈடுபட்டுள்ளது.

ஈழம் பல்தேசிய நிறுவனங்களதும், ஏகபோக அரசுகளதும் சூறையாடலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. வன்னி இனப்படுகொலையின் பின்னர் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கும் நோக்கில் ராஜபக்ச அரசு அமைத்த அத்தனை திட்டங்களையும் தொடரும் சிரிசேன அரசு, ஏகாதிபத்தியங்களின் தயவையும் பெற்றுள்ளது. தொடரும் இனவழிப்பையும், பல்தேசிய நிறுவனங்களின் சூறையாடலையும், தெற்காசியப் பிராந்தியம் இராணுவ மயமாக்கப்படுவதையும் மக்கள் எதிர்ப்பின்றி நடத்துவதற்கு தேசிய வெறியூட்டும் சீமான் போன்றவர்கள் தேவைப்படுகின்றனர்.

லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேளையில் தமிழர்கள் என்பதால் லைக்காவை ஆதரிக்கிறோம் என்று சீமான் வெளிப்படையாகக் கூறினார்.

ஈழத்தில் நடப்பது போராட்டமல்ல பயங்கரவாதம் என்று கூறிய கல்விக் கொள்ளைக்காரன் பச்சைமுத்துவை சீமான் ஏழைகளின் காவலன் எனக் கூறினார்.

தமிழகத்தில் மணல் கொள்ளையடிக்கும் வைகுண்டராசன் சீமானின் நண்பர்.

lycamobile_seemanபல்தேசிய நிறுவனங்களின் தயவில் வாழும் சீமானின் அயோக்கியத்தனத்திற்கு ஈழமக்களின் அவலம் அவலாகக் கிடைத்துள்ளது. ஈழ மக்கள் மத்தியில் மக்கள் சார்ந்த அரசியல் தலைமை வெற்றிடமாகக் கிடப்பதால் சீமான் போன்ற உணர்ச்சிக் கொள்ளையர்கள் அதனை நிரப்ப முயற்சிக்கின்றனர். அதுவே அவர்களின் வயிற்றுப் பிழைப்பாகிவிட்டது.

சீமான் போன்ற ஒருவர் தமிழர்களின் பிரதி நிதியென்று உலக மக்களிடம் கூறுவது தமிழினத்தின் அவமானமும் அருவருப்பும் என்பதை சீமானின் அப்பாவி விசிறிகள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே மிருகங்கள் போல நடத்தப்படும் ஈழ அகதிகளைக் கூட கண்டுகொள்ளாத சீமான் புலம்பெயர் நாடுகளில் பணம் திரட்ட ஆரம்பித்திருப்பது பகல் கொள்ளை.

இலங்கை அரசிற்கு எதிராகவும், அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் இப்போது தான் முழைவிட ஆரம்பித்துள்ள நிலையில் அவற்றை சீமானின் அருவருப்பான இனவாதம் அழிக்க முற்படுகிறது.

தமிழ் நாட்டின் கரையோரங்களை அழிக்கும் மணல் கொள்ளைக்காரர்களும், கல்விடை அழிக்கும் பச்சைமுத்துக்களும், ராஜபக்சவின் நண்பர்களும் சீமானின் ஆதரவாளர்கள் என்றால் சீமான் குழுவின் நோக்கம் சந்தேகத்திற்குரியதே.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு இஸ்லாமியர்களின் நட்பு சக்தியல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ உருவாக்கியது என்பது ஆதாரபூர்வமானது. ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு இணையான கருத்துக்களை முன்வைகும் சீமான் தமிழர்களின் நண்பன் அல்ல; எதிரி!

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி , அவுஸ்திரியா போன்ற நாடுகளிலுள்ள வெளி நாட்டவர்களுக்கு எதிரான நிறவாத அமைப்புக்களை விடக் கேவலமான இனவாதக் கருத்துக்களை முன்வைக்கும் சீமான் குழுவினரின் வருகை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு இணையான பயங்கரவாதக் கருத்துக்களை முன்வைக்கும் சீமான் குழுவினர்,

ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களை ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்து அன்னியப்படுத்தும் அயோக்கியத்தனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரித்தானியாவில் முளைவிட முனையும் இந்த நச்சுக் கும்பல் முளையிலேயே கிள்ளியெறப்பட வேண்டும்.

ஈழப் போராட்டத்தை பயங்கரவாதம் எனக் கூறும் பாரிவேந்தர் பச்சைமுத்து:

பாரிவேந்தர் பச்சைமுத்துவை கொடைவள்ளல் எனப் புகழும் சீமான்:

பிரித்தானியத் தேர்தலில் பாசிஸ்ட்டுக்களைப் போன்றே உலகின் ஏனைய பகுதிகளிலும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலிகள் இயக்கத்தின் பணச் சேர்ப்பிக்குப் பொறுப்பாக இருந்தவர் ஏனையோரைக் காட்டிக்கொடுத்தார்

புலிகள் இயக்கத்தின் பணச் சேர்ப்பிக்குப் பொறுப்பாக இருந்தவர் ஏனையோரைக் காட்டிக்கொடுத்தார்

Comments 16

  1. Niranjan says:
    11 years ago

    நீங்கள் கூறுவது 100% உண்மையா ?

  2. Sumesh Tamilan says:
    11 years ago

    ஏண்டா டேய் ? எப்படி ரூம் போட்டு யோசிச்சு கதை எழுதுவீங்களாடா ? லைக்கா சிம் வித்தா வெளிநாட்டுல தமிழன் ஓடிப்போயி வாங்குவான், அவன் அப்பாவி! அதே தமிழ்நாட்டுல லைக்காவை கண்டுக்காம விட்டா சீமான் துரோகியாடா! தமிழர்களே இந்த இணையத்தளம் டக்ளஸ் ஆட்களில் ஒருவன் நடாத்தும் இணையம், தமிழர்கள் மத்தியில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஒற்றுமையையும் குலைக்கவே இது போன்ற வேடதாரி இணையங்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றன. நாம் எச்சரிக்கையாக இருப்போம் ! நன்றி சுமேசு தமிழன்

    • siva sathiy says:
      11 years ago

      உன்மை அண்ணா வயித்தெரிச்சல்ல கெடக்குறாங்க

  3. Niranjan says:
    11 years ago

    எவண்டா இவன்.

  4. Rajeepan says:
    11 years ago

    தமிழ் நாட்டில் தமிழ்தேசியம் பேசினால் இனவாதம் என்றால் இலங்கையிள் தமிழ்தேசியம் பேசினால் பக்கவாதமா

  5. Nakkeeran says:
    11 years ago

    நிதி திரட்ட எல்லோருக்கும் உரிமையுண்டு. அதைத் தடுப்பது பாசீசம்.சீமான் நிதி திரட்டினால் ஏன் கொடுக்கிறீர்கள்? சிறிசேனாவுக்கும் இராஜபச்சாவுக்கும் வேற்றுமை இல்லையா? இல்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் கருத்துக் குருடர்கள். நீங்கள் ஏகாதிபத்தியம் என்று சாடும் அமெரிக்காவின் முயற்சியால்தான் சிறீலங்காவில் நடந்த போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் அது தொடர்பான தீர்மானம் ஐநாமஉ பேரவையில் நிறைவேறியுள்ளது.

  6. gajan says:
    11 years ago

    எதுடா இனவாதம்? ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே அதே இனத்தை பிரதிநித்துவப்படுத்துவது / ஆளுவது என்பது அதன் அடிப்படை உரிமை.. இது எந்த வகையில் இனவாதமாகும்? இவ்வளவு பேசும் நீங்கள்(இடதுசாரிகள்) ஈழத்தில் கடந்த அறுபது ஆண்டு காலமாக நடந்தது இன அழிப்பு தான், இதற்கான ஒரே தீர்வு தனித் தமிழீழம் தான் என்பதை இனியும் ஒப்புக்கொள்ள மறுப்பது / பின்னடிப்பது ஏன்? ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது இடதுசாரிகள் கியூபாவும் சீனாவும் தானே?

  7. elzilan says:
    11 years ago

    அண்ணான் சீமான் முட்டை உடையும் என்று சொல்லவதுக்கும் கழுத்து நரம்பு வெளியில வரவர தான் சொல்லுவார். சீமன் தமிழர்களை ஒன்றிணைக்கிறது என்றால் பச்சமுத்துவையும், லைக்காவையும் வைகுண்டராசனையும் காளிமுத்துவையுமா ஒன்றிணைக்கிறார். வெட்ரா தெலுங்கனை என்று கூச்சலில் சீமான் வைகுண்டராசனின் வேட்டிக்குப் பின்னால் ஒளிக்கிறார். பரதேசிகளா.. உங்கட யாவாரத்த தமிழ் நாட்ல நிறுத்துங்கடா ஈழத்தை வெச்சு பிசினஸ் பண்ணாதங்கடா!

  8. elzilan says:
    11 years ago

    தமிழ் நாட்டில இருக்கிற ஈழத் தமிழர் அகதிகளுக்காகப் குரல்கொடுத்திட்டு பிறகு துட்டுக்கு வாங்கடா:

  9. Kumar says:
    11 years ago

    சினிமா பாணியில் வசனங்களை எழுதும் இந்த மூடா்கள் ஒன்றை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் சீமானுக்கு நீங்கள் நிதியை கொடுக்கிறீங்களோ அல்லது உங்கள் கோவணத்தை கொடுக்கிறீா்களோ அது உங்கள் பிரச்சனை ஆனால் இலங்கைத்தமிழா்களின் விடயத்திலுந்து நீங்களும் உங்கள் சினிமா கோமாளிகளும் கொஞ்சம் விலகி இருப்பது நல்லது, முடிந்தால் உங்கள் தலைவரை தோ்தலில் நின்று முதலமைச்சரா முதலில் வரச்சொல்லுங்கள் பின்பு அவரைக்கொண்டு தமிழ் ஈழத்தை நாம் அடைய முயற்சிக்கலாம்.

  10. Dharan says:
    11 years ago

    சினிமாவில் தோல்வியடைந்த டைரக்டர் எல்லாம் ஈழ சினிமாக் காட்ட புறப்பட்டு சம்பாதித்துக் கொள்கிறர்கள், விஜய் என்ற சினிமா கோமாளி தமிழ் காங்கிரசின் அடிவருடி. சீமான் தம்பி விஜை தமிழன் என்கிறார். தம்பி விஜையின் ரசிகர் மன்றத்தை வைத்து முதலமைச்சராக வரலாம் என்று இந்த டைரக்டர் கோமாளி கனவு காண்கிறது. தமிழில் திட்டுவதற்கு கூட அழகன வார்த்தைகள் உண்டு. கோமாளி சீமான் வாயைத் திறந்தால், நாயே, பேயே, தேவடியாப் பயலே…. இந்த பொறுக்கியை எல்லாம் தமிழ் தலைவன் என்றால் தமிழை யார் மதிப்பார்கள்.?
    இன்னும் ஐந்து வருடங்களில் ஈழத்தை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவார்கள். அதுவரைக்கும் அங்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசாமல் நாயே, தேவடியாபய.. ஒரு அப்பனுக்கு பொறந்தவனா என்று பேசி காலத்தைக் கடத்த சீமான் போன்ற ஏஜண்டுகள் இலங்கை அரசுக்கு தேவை. சரியான நேரத்தில் இனம் கண்டு கோமாளி சீமானை அம்பலப்படுத்திய இனியொரு நண்பர்களுக்கு நன்றி… உங்கள் பணி தொடரட்டும்….
    லைக்கா, மகிந்த, டக்ளஸ், சீமான், போன்றவர்களுக்கு எதிராக உங்கள் எழுத்துக்கள் காவல் அரணாக இருந்தது போல இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

  11. mannan says:
    11 years ago

    தியேட்டரில் படம் பார்க்க பணமில்லாதவர்கள்
    ஈழ போராட்டத்திற்கு பணம் சேர்த்தால் தமிழ்நாட்டில்
    சினிமா படம் தயாரிக்கும் செல்வந்தராகலாமென்பது
    சீமான் கண்ட உண்மை.இதனை மீண்டுமொருமுறை
    செய்யத் துணிவதில் என்ன தவறு .

  12. கடல்குமரன் says:
    11 years ago

    புலம்பெயர் மக்களால் எவ்வளவுதூரம் எமது ஆயுதப்போராட்டம் வளர்க்கப்பட்டதோ அதேபோன்று அரசியல் போராட்டத்தையும் அண்ணன் சீமான் தலைமையில் தமிழ் நாட்டில் வளர்ப்பதற்காக விரும்பும் தமிழர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.எமது தேசியத்தலைவர் எமது விடுதலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிடமே விட்டுசென்றுள்ளார் இனத்திற்காக போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு இதில் சீமான் விதிவிலக்கல்ல உங்களால் முடிந்தால் நீங்களும் கட்சி தொடங்கலாம்.ஈழத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பொழுது இங்கு புலத்தில் இருந்த அமைப்புகளால் இப்பொழுது ஒருங்கிணைந்து போராட்டங்களை செய்யமுடிவதில்லை கரணம் நேர்த்தியான கட்டமைப்பு இங்கில்லை.எதிரி எமது ஆயுதபலத்தை மட்டுமே உடைத்தான் இங்குள்ளவர்களோ ஒவோருவரையும் துரோகியாக விமர்சித்து எம்மை நாமே உடைத்தோம் .எவ்வளவோ கோடான கோடி பணங்களும் சொத்துக்களும் இருந்தும் உங்களால் இன்று ஒன்றும் செய்யமுடியவில்லை, காரணம் உறுதியான கட்டமைப்பு இல்லாததே,2009 கடைசி இருதிசமரின் போது கடற்புலிகளின் தளபதி சூசை தொலைபேசி உடாக சில பணிகளை சீமனிடமே சொல்கிறார்.இங்கே தொண்டை கிழிய நாம் தான் விடுதலைபுலிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பென கூறும் அமைப்புகளோ புலத்தில் மக்கள் எல்லோரும் போராட்டத்தில் இருக்க,ஈழத்தில் உறவுகளும் உன்னதபோரளிகளும் செத்துமடிந்துகொண்டிருக்கும் வேளையிலும் கடைசிக்கட்ட பண வேட்டையில் இருந்தன,இதை நாம் அனைவரும் அறிவோம்.இங்குள்ள சிலர் எமது மாவீரர்களின் இரத்தம் தோய்ந்த பணத்தில் தமது குடும்பத்தையும் தம்மையும் காப்பதிலேயே
    இருக்கிறார்கள்.சீமான் எனும் தனிமனிதப்போரளி எம் இனம் வீழ்ந்த நாள் தொடக்கம் தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளை எதிர்த்து தமிழீழ போராட்டம் எண்றால் என்ன என தெருதெருவாக பிரசாரம் செய்து இன்று வரை ஈழ அரசியல் புரட்சிக்காக போராடி வரும் போராளி.அவரை ஆதரிப்பதோ புறம் தள்ளுவதோ புலத்தில் உள்ள அறிவுசார்ந்த மக்களுக்கு தெரியும்.இங்குள்ள பிரச்சனை என்னவெனில் சீமான் இன்குவந்தால் மக்கள் அவர்பின்னால் போய்விடுவார்கள் என்ற பயமே தவிர ஈழத்தில் உள்ள மக்களில் உள்ள அக்கரையில் இல்லை என்பதை அறிவுசார்ந்த எமது தேசியத்தின் பிள்ளைகள் புரிந்துகொள்ளவேண்டும்.எமது தலைவர் சொல்ல்வது போல் சொற்கள் கற்கள் அல்ல எம்மை காயபடுதுவதட்கு இவைகள் எம்மை கடந்து போய்விடும்.வீண் கருத்து முரண்பாடுகளை விட்டு ஏன் விமர்சிக்கிறார்கள் என்று உங்களையே நீங்கள் ஏன் ஏன் என்று கேளுங்கள் விடைகள் கிடைத்துவிடும்.

  13. பத்தைகுமாரன் says:
    11 years ago

    கடல்குமாரா,
    வேறு ஒன்றையும் நாங்கள் கேட்கவில்லை! அண்ணன் சீமான் தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்காகப் போராடி அவர்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்து சாதாரண மனிதர்களாக வாழ வைக்க்கட்டும். ஈழம் பிடித்துத் தருவதாக நரம்பு புடைக்க கெட்ட வார்த்தைகளால் தண்ணியடித்துவிட்டு உணர்ச்சிவசப்படுத்தும் சீமான் இந்த சின்ன வேலையைச் செய்துவிட்டு வரட்டும் நாங்கள் ஆதரவு தருகிறோம். முப்பது வருடங்களுக்கு மேலாக மந்தைகள் போல தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் முகம்களுக்குச் சென்று பாருங்கள் பிறகு வாருங்கள். ‘இந்த அகதி நாய்களுக்கு என்ன வாழ்க்கை வேண்டிக்கிடக்கிற்து’ என்று செந்தமிழன் சீமான் நினைத்தாரோ?

    • shan says:
      11 years ago

      உனக்கு அறிவிருந்தா முதலில் யோசி. சீமான் செய்வான் .ஒன்றை நீ முதலில் தெரிந்துகொள் கடைசியாக சூசை அண்ணா ஒரு வரியில் உணர்த்திவிட்டு போனார். சீமானிடம் சொல்லு அவரை நம்பி விட்டுட்டு போரம் எண்டு. முதலில் தமிழன் ஆட்சிக்கு வரணும் அப்போதான் எதையும் செய்ய முடியும்

  14. Kannapiran says:
    11 years ago

    கடல்குமரா சீமானின் பொறுக்கி தனத்தைப் பார்:

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...