கோப்ரட் மயமான புலம்பெயர் தமிழ் உணர்வு சாம்பாரகி விஜய் தொலைக்காட்சி வழியாக வழிந்தோடுகிறது. சாம்பாரை அள்ளிப் பருகிய பக்தர் கூட்டம் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் ஊடாக வாந்தியெடுக்கின்றனர். ரூபட் மெடொக் என்ற மேற்கு நாட்டு ஊடக மாபியாவின் இலாபத்திற்காக நடத்தப்படும் ஸ்ரார் தொலைக்காட்சி வலையமைப்பின் ஓர் அங்கமான விஜய் தொலைக்காட்சி நடத்திய சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் இராண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்டதற்காக ஜெசிக்காவை புலம் பெயர் தேசியத் தலைவியாக்கிவிட்டார்கள் தமிழ் உணர்வுக் கோமாளிகள்.
குறுநில மன்னர்கள் சிம்மாசனத்திலிருந்து ஆணையிடுவது போல சீ.ஐ.ஏ இன் பேஸ் புக்கில் அரசாட்சி நடத்தும் உணர்வாளகளில் ஊதிப்பெருத்த ஒன்று தூங்கிக் கிடந்த தமிழ் இனத்தை ஜெசிக்கா தட்டியெழுப்பிவிட்டார் என்கிறது. ‘தேசியத் தலைவருக்குப் பிறகு’ ஜெசிக்கா சுய நலமில்லாமல் மக்களுக்காகப் பாடுபடுகிறார் என்றது மற்றொரு உணர்ச்சிப் பிழம்பு.
பிரபாகரன் வாழ்ந்த போது புலிகளால் தடைசெய்யப்பட்ட திரைப்படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. 2002 ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் புலிகள் அதிகாரத்திலிருந்த பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்தது. அத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஒலிக்க அக்காலப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. திரைப்படத்தில் இடம்பெற்ற ‘விடைகொடு எங்கள் நாடே’ என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாடி வெற்றிபெற்றதே ஜெசிக்கா என்ற குழந்தையின் ‘தேசிய’ உணர்விற்குக் காரணம் என்கிறார்கள்.
அதிலும் பிரபாகரானல் தடைசெய்யப்பட்ட பாடலைப் பாடிய ஜெசிக்காவை தேசியவாதியாக்கிய பிரபாகரனின் விசில்களின் உணர்வு சாம்பாரல்லாமல் வேறென்ன?
பொதுவாக ஒரு பாடகரின் பாடும் முறை மற்றும் குரல் வளம் ரசிகர்களுக்கு விருப்புடையதாக இருந்தால் அவரையும் அவரின் பாடலைச் சுற்றியும் ஒரு கூட்டம் தோன்றிவிடும். அந்தப் பாடல் பாலியல் வக்கிரங்களுன் வன்முறையும் நிறைந்த பாடல்களானாலும் கூட்டம் சேர்ப்பதற்குத் தடையில்ல்லை. இது தான் கலை வியாபாரிகளின் தந்திரம். பாடலின் உள்ளடக்கம் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இலாபம் திரட்டுவதற்காக அவர்கள் படுத்துகினும் போத்திகிவார்கள், போத்திகினும் படுத்துகிவார்கள்.
கலை என்பது மக்களுக்கானதா அல்லது கலை என்பது கலைக்கானதா என்ற விவாதங்கள் நடைபெற்ற காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் கலை என்பது வியாபாரத்திற்கானது என்றாகிவிட்டது.
சர்ச்சைகளை உருவாக்கி, விவாதங்களைத் தோற்றுவித்து அப்பாவி மக்களை சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க விடாமல் தொலைக்காட்சிக்கு முன்னால் இருத்தி வைத்திருக்கும் தந்திரம் விஜை தொலைக்காட்சியினுடையது.
இத்தந்திரத்திற்குப் அப்பாவிகள் ஒரு புறம் பலியாக மறுபுறம் தேசியப் பிழைப்புவாதிகள் அதனைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மக்களை உணர்ச்சி வயப்படுத்துவதற்கு சுப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் கீழ்த்தரமான தந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். போட்டியாளர்களின் நோயாளிகளான உறவினர்களை மேடையில் காட்சிப் பொருளாக்கிக் கண்ணீர் வடிப்பார்கள். அங்கவீனமானவர்களை விற்பனை செய்து ரூபட் மெடக்கிற்குப் இலாபம் சேர்ப்பார்கள்.
அந்த வரிசையில் ஈழத் தமிழர்களின் அவலங்களையும் வியாபாரமாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிளை விரித்துள்ள விஜய் தொலைக்காட்சி என்ற பண்பாட்டுச் சிதைப்புக் கருவி புலம்பெயர் தமிழர்களின் சந்தாக்களைப் பெற்று ரூபெட் மெடொக்கை மேலும் பணக்காரன் ஆக்குவதற்கு ஈழத் தமிழர்களின் அவலமும் பயன்படுகிறது.
இசை ஆர்வமுள்ள குழந்தை ஜெசிக்காவிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க இயலாது. தனது திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார். அவ்வளவு தான்.
அதற்குப் பின்னணி இசை கொடுத்த தேசியக் கோமாளிகளே இங்கு குற்றவாளிகள். அவர்கள் தான் ஊடக மாபியா ருபட் மெடொக்கின் மறைமுக அடிமைகள்.
ஈழத் தமிழர்களின் தனித்துவமான கலை கலாச்சாரம் பண்பாட்டு வடிவங்களை அழித்துத் துவைத்து சல்லடை போட்டு சிதைப்பதில் விஜய் தொலைக்காட்சி மட்டுமல்ல ஏனைய தென்னிந்தியக் குப்பைகளும் பங்காறுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் உயரிய புரட்சிகரக் கலை வடிவங்கள் மக்களுக்கானவயே. ரூபெர் மெடொக்கிற்கானவை அல்ல.
சுப்பர் சிங்கரில் ஜெசிக்கா வெற்றி – தோற்றது யார்? : வியாசன்
“புலிகளால் தடைசெய்யப்பட்ட பாடல் ஜெசிக்கவைத் தேசியவாதியாக்கியது”
வியாசன் அவர்களின் இந்த தலைப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையான நோக்கம் தெளிவாகப் புரியவில்லை
ஆனால் வியாசனாலும் இந்த தமிழ் மூடனாலும் செய்ய முடியாத …. கோடியில் ஒருவர் செய்யக்கூடிய ஒரு செயலை ஜெசிக்காவின் குடும்பம் செய்திருக்கின்றது .ஒரு கிலோ தங்கத்தை தானமாகக் கொடுத்ததுதான் அந்தச் செயல் இதன் பெறுமதி கிட்டத்தட்ட 50,000$ இருக்கும் . “இனிஒரு” தனது வாசகர்களிடம் பணத்தை யாசித்து இதைச் சேர்த்து ஜெசிக்காவின் குடும்பதிற்கு கொடுக்க முன்வருமா. இந்த நற்செயலை உயர்திரு வியாசன் முன்னெடுக்கலாம்
வியாசன் ஏதாவது ஆக்கபூர்வமாச் செய்ய முன்வருவாரா????? நான் குறைந்தது 50$ இதற்குத் தர முடியும்
நற் செயல்களை வாழ்த்த நாம் முயலுவோம். இனிஒருவும் வியாசனும் முயலட்டும்
(பின் குறிப்பு : நான் ஜெசிக்காவிற்கு சூப்பர் சிங்கரில் வாக்களிக்கவில்லை )
enna oru muttaal thanamana judgment ? ungalukkuellam manathil eeram illaiya
ஐயாவணக்கம் ஈழத்தில்நடந்த இனப்படுகொலைகிட்டந்தட்ட தமிழ்நாட்டில்மறந்துவிட்டார்கள்இந்நிலையில் செசிகாவின்பாட்டு என்போன்றரைஅழவைத்துவிட்டது
வணக்கம்.உறவுகளே ஜெச்சிக்கா ஒரு குழந்தை அவரை ஊக்குவிப்பதே நாம் செய்யும் நல்ல நற்செயல் சிறு குழந்தையின் பாடலுடன் எமது தலைவரையும் தமிழ் தேசியத்தையும் முடிசுப்போடும் வேலையை விட்டுட்டு நீ,நாட்டுக்கு என்பதைப்பற்றி சற்று சிந்தித்ப்பார் நல்லதை மட்டும் செய்யப்பளகுங்கள் அனைத்து விடயங்களும் நேர்த்தியாக நடக்கும் இந்தியாவின் உளவுத்துறையின் கதையெல்லாம் உங்களுக்கு தேவையற்ற விடயம் உதவி செய்யா விட்டாலும் பார்வையாளராக இருப்பது நல்லது என்று நினைக்கிறேன் நண்பரே.நன்றி வணக்கம்
தமிழ் மூடன் மற்றும் நிலவன்,
இங்கு நான் கூறும் கருத்துக்கள் ஜெசிக்கா என்ற குழந்தைக்கோ அல்லது அவரது திறமைக்கோ எதிரானவை அல்ல. கட்டுரையில் எங்கும் அதைப்பற்றிக் குறிப்பிடவில்லை. இங்கு ஜெசிக்காவையும் பயன்படுத்தி தேசியப் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் ரூபட் மெடொக் என்ற ஊடக மாபியாவைத் தமிழ் தேசியத்திற்குள் இழுத்து வருபவர்களுக்கும் எதிரானதே. ரூபட் மெடொக் போன்ற மாபியாக்களிடமிருந்து எமது பண்பாட்டைப் பாதுகாப்பதும் தமிழ்க் கலையை வளர்ப்பதும் இன்று அவசியமானது, ஜெசிக்காவிற்கு எதிராக எழுதுவதும் பேசுவதும் சரியல்ல. அது அவரை வைத்து வியாபாரம் நடத்துவதற்கு ஈடானது கட்டுரையைச் சரியாக வாசியுங்கள் கருத்துக்களைத் திரித்துக் கூறவேண்டாம்.
தவிர, தன்னார்வ நிறுவனங்கள் பாணியில் ஈழத்தில் உள்ளவர்களுக்குப் பிச்சை போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அவர்களது வாழ்க்கையில் தலையிட்டு அவர்களை அழிப்பதை விடுங்கள், தங்கள் பாட்டிலேயே அவர்கள் தமது பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்வார்கள். இலங்கை அரசிற்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்திற்குத் துணை சென்றால் மட்டுமே போதுமானது.
வியாசன் போன்று இன்னும் சிலா் இந்த இனத்தில் இருப்பதையிட்டு நான் ஆறுதலடைகிறேன்.
ரொரன்ரோ சா்வதேச விமான நிலையம் கனடாவாழ் கோமாளிகளின் மேளதாளங்களால் அதிா்ந்துபோனதால் சா்வதேச பயணிகள் அச்சத்துடன் ஒதுங்கியதாக செய்தி.
பாவம் அந்த சிறுமி.
திரு.வியாசன் அவர்களே.
புலிகளால் தடை செய்யப்பட்ட பாட.ல் என்று வக்காளத்து வாங்குவதற்கு நீங்கள் யார். நடந்த செயலின் நல்லது,கெட்டதுகளை மட்டும் பார்தால் போதும் ,vijay tv மீது உங்கள் கோபம் நியாயமானது என்றால் ,அவர்களுக்கு
எதிராக பொது நல வழக்கு தாக்கல் செயவும்,அதை விடுத்து உள்ளங்காலுக்கும் உச்சுத்தலைக்கும் முடிசுப்போட வேண்டாம்.ஏதோ வெளிநாட்டில் உள்ள ஈழத்மிழர்களை முட்டாள்களாகவும் நீங்கள் மட்டும் தான்
சரியான சிந்தனைவாதி என்பது போலவும் உங்களின் செய்தி அமைந்துள்ளது.
ஜெசிக்கா அந்தப்பாடலை பாட முன்னமே ,பல்லாயிரக்கான ஈழத்தமிழர்கள் வாக்களித்து இருந்ததை உங்களுக்கு அறிய முடியவில்லையா? ஜெசிக்காவிற்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் ,அது தொப்புள் கொடி உறவு என்பதற்காக என்பதை உங்களுக்கு இடித்துரைக்க விரும்புகின்றேன்.
இந்த சமுதாயத்திற்காக தமது உயிர்களை இழந்தவர்களை விடவா ஜெச்சிக்காவின் ஒரு கிலோ தங்கம் உயர்வானது ? ஒரு இசை போட்டியில் நீங்கள் வாக்களிக்க தொப்புள் கொடி உறவு என்பது தான் தகுதியா.? சங்கீத அறிவு குரல்வளம் திறமை என்பன வேண்டாமா? பலரது கருத்தின்படி ஜெச்சிக்காவை விட போட்டியில் இருந்த ஏனைய குழந்தைகள் திறமை வாய்ந்தனவாக இருந்தனர். புலம்பெயர் தமிழர்களின் இன வெறி அடிப்படையிலான வாக்குகள் ஜெச்சிக்காவை முன் தள்ளியது.இது ஒரு வெட்ககேடான நிலைமை.
இதுதான் உண்மை
போட்டியின் விதிமுறை அதுதான். அதற்காக மாவீர்ர்களை எந்த வித்த்திலும் குறைவாக மதிப்பிடவில்லை.நீங்கள் கூருமளவிற்கு திறமை இல்லாதவர் ஜெசிக்கா அல்ல,ஒன்றில் உங்களது இசையை இரசிக்கும் ,தன்மையில் உள்ள குறை,அல்லது புலம் பெயர் தமிழர் மீதான இன வெறி அடிப்படையிலான மனோபாவம்.
நான் முழுமையாக நிகழ்ச்சிகளைப் பார்க்கவிலை ஆயினும் கட்டுரைக்காகப் பார்த்திருக்கிறேன். இசை என்ற அளவில் ஜெசிக்கா முதலிடத்திற்குத் தகுதியானவரே. நேர்த்தியான இசை நயமும், இனிமையான குரலும் ஜெசிக்காவின் சொத்துக்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல. ஜெசிக்கவை வைத்துக்கொண்டு கோமாளிக் கூத்தாடிய தேசியக் குஞ்சுகளும், தனது சந்தாக்களைப் பெருக்கிக்கொண்ட விஜய் ரிவி உம், ரூபெட் மெடொக் என்ற மாபியாவுமே. இவர்களின் புலம்பெயர் நுளைவு நிறுத்தப்பட வேண்டும். இனிமேலும் இது வேண்டாம். இரண்டாவதாக பிச்சை போடும் மனோ நிலையை ஏற்படுத்திய ஒரு கிலோ தங்கம்! அதனை அவர்கள் விரும்பியவர்களுக்குக் கொடுக்கலாம் ஆனால் இலங்கை அரசு இனக்கொலை செய்ய இங்கிருந்து அவர்களுகுப் பிச்சை போட்டாலே போதும் என்ற மனோ நிலையை ஏற்படுத்தும் போக்கே தவறானது.
கருத்துக்கள் சரி பிழை கூறும் அறிவு இல்லாதவன் நான்…
ஆனால் யுத்தத்தை அனுபவித்தவன்… திறமைகளை காட்டி புகழ் பரிசு பெறுங்கள்…ஈழத்தமிழர்களை காட்டி பிச்சை எடுக்காதீர்கள்….
ஜெசிக்கா இரண்டு பாடல்களை கலந்து கட்டி பாடினார். பார்வையாளர்களை உணர்ச்சி பிழம்பாக தூண்டிவிட்டார். எதை பாடினால் தனக்கு வாக்குகள் குவியும் என்பது அவருக்கு தெரியும். சினிமாக்காரர்கள் பாலியல் வக்கிரங்களை எவ்வாறு தூண்டி விட்டு பெட்டியை நிரப்புகிரார்களோ அவ்வாறே ஈழ உணர்வை காட்டி வாக்குகளை பெற்றார். நான் கவனித்த வரையில் எவரும் ஜெசிக்காவின் திறமை குரல்வளம் பற்றி ஒரு கருத்தும் சொல்லவில்லை. தொப்புள் கொடி என்ற காரணத்திற்காகவே ஒவ்வொரு வாக்கும் கிடைத்ததாக இங்கும் குறிப்பிடுகிறார்கள் . குறுக்கு வழியில் தனது வெற்றியை அவர் அடைந்தார். எதையும் உணர்சிகளின் அடிப்படையில் புரிந்து கொண்டு செயற்படும் இந்த சமுகம் இவற்றின் பின்னாலுள்ள அரசியலை விளங்க நீண்ட காலம் எடுக்கும்.
##தொப்புள் கொடி என்ற காரணத்திற்காகவே ஒவ்வொரு வாக்கும் கிடைத்ததாக இங்கும் குறிப்பிடுகிறார்கள் ##
ஜெசிக்கா ஈழத்தமிழர்க்கு தொப்புள் கொடி உறவா ?
புதுசா இருக்கு .
அவருக்கு ஈழத்தமிழர்கள் மட்டும் வாக்களித்து அவர் இரண்டாமிடத்துக்கு வரவில்லை . ஏனைய தமிழர்களும் வாக்களித்துதான் பரிசை வென்றார் .
## இவற்றின் பின்னாலுள்ள அரசியலை விளங்க நீண்ட காலம் எடுக்கும். ##
உங்க வயித்தெரிச்சலை புரிந்து கொள்வதற்கு நீண்ட காலமெல்லாம் தேவையில்லை
திறமைக்குத்தான் அங்கு பரிசு கிடைத்தது . உமது கருத்து பரிசு வென்றவரை கொச்சை படுத்துவதுபோல் இருக்கிறது .
சங்கீத அறிவற்ற , கலைஞானமற்ற ஜென்மங்களிடமிருந்துதான் இது போன்ற கருத்துக்கள் வரும் .
அந்தநிகழ்ச்சியில் 53 பாடலகள் பாடிய ஜெசிக்கா ஈழம் சம்பந்தமாக ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடினார்.
அந்த பாடலையும் பாடியிருக்கா விட்டால் ஈழத்தை சேர்ந்தவர் அந்தநாட்டின் அவலத்தை பற்றி ஏதும் கூறாமல் , பாடாமல் , இலங் கையில் அப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் காட்டி விட்டு வந்து விட்டார் என உங்களைப்போன்ற குற்றம் கண்டு பிடிப்பதயே தொழிலாக கொன்டவர்கள் கொக்கரித்திருக்க மாட்டீர்களா ?
ஏனென்றால் ஈழம் பற்றிய அவலம் இதற்கு முன்பு யாருக்கும் தொியாது பாருங்கள் ஆதலால் இந்த சிறுமி பாடியபடியால் இனி தமிழீழம்தான்.
லாலா சும்மா லோலா விடாதீங்க கண்ணு.
இலங்கையில் பிறந்த தமிழன் யாருமே இந்த ஜெசிக்கா என்ற சிறுமிமீது வெறுப்புக்கொள்ள நியாயமே கிடையாது ஆனால் எல்லோருடய ஆதங்கமும் தமிழா் அவலத்தை பயன்படுத்துவதும் பணக்கார முதலைகளின் தொலைக்காட்சி
என்ற மாயைக்குள் சிக்குண்டு சீரளிவதையும் பற்றியதேயாகும் இதை புாிந்துகொள்ளமுடியாத மனிதா்களா நீங்கள்.
போட்டி முழுதும் முழுதும் குப்பை பாடல்களை பாடுவார்கள். வாக்குகளுக்காக ஒரே ஒரு இன உணர்வு பாடலை பாடுவார்கள். அதை புரிந்து கொள்ள மேட்டுகுடித்தனமான ஸங்கீதரசனையும் ஸங்கீத அறிவும் வேறு தேவையாம். ஜெசிக்கா தந்திரமாக பர்வையாளரின் காதில் பூ சொருகி விட்டு போய்விட்டார்.
“இலங்கையில் பிறந்த தமிழன் யாருமே இந்த ஜெசிக்கா என்ற சிறுமிமீது வெறுப்புக்கொள்ள நியாயமே கிடையாது ஆனால் எல்லோருடய ஆதங்கமும் தமிழா் அவலத்தை பயன்படுத்துவதும் பணக்கார முதலைகளின் தொலைக்காட்சி
என்ற மாயைக்குள் சிக்குண்டு சீரளிவதையும் பற்றியதேயாகும் இதை புாிந்துகொள்ளமுடியாத மனிதா்களா நீங்கள். ” இரத்தின சுருக்கமான பதில்.
மொத்தத்தில் வியாசன் மற்றும் குமார் போன்ற கோமாளிகளின் கதையை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியான் வேலையே பார்க்கலாமே, முடிந்தால் இந்த கோமாளிகள் எல்லாம் சேர்ந்து உணர்ச்சிமயமான பாடல்களை மட்டும் பாடி அடுத்த சீசனில் பரிசு வென்று தரட்டும் அதை முல்லிவைக்காளில் பதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்துக்கொடுப்போம், இந்த ஞான சூனியங்களின் கருத்துப்படி திறமை தேவையில்லை மக்களை உணர்ச்சிவசப்படுத்தினால் போதும் தானே, இதுகள் கத்தரிக்காய் பற்றி கதைத்தால் விவேல்யப்பற்றி பதில்சொல்லுற கோமாளிகள். தயவுசெய்து இந்த கோமாளிகளின் கருத்துகளுக்கு பதில் சொவதை விட்டு இருக்குற வேலையே பாருங்கோ. இப்ப நான் எழுதினதுக்கும் என்ன என்ன எல்லாம் சொல்லி துள்ள போறாங்களோ, ஆனால் யாரும் தை பொருட்படுத்தாமல் உருப்படியா ஏதாவது செய்வம், டாடா பாய் பாய் கோமாலீஸ்……..
முன்னேற வேண்டும் நாகரீகம் அடைய வேண்டும் ஏமாற கூடாது என்பதற்காக பாடு பாடுபவர்களையும் கருத்து சொல்பவர்களையும் வாட்டி வதைப்பது சமூகத்தில் சகஜம்தான். உலகம் உருண்டை என்று சொன்னால் கல்லால் அடித்தவர்கள் அந்த காலம். துப்பாக்கியால் சுடுவதும் சொல்லால் அடிப்பதும் இந்த காலம்.
இனி ஒரு ” இணையத்தளம் ஜெசிக்கா விஜய் சுப்பர் சிங்கரில் பாடிய பாடல் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தது என்று ஜனநாயகக் கண்ணீர் விடுகிறது.
எப்போது இவர்கள் புலிகளின் தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர் என்பது எந்தத் தமிழருக்கும் புரியாத விடயம். ஏனெனில் நாட்டில் எவருமே அறிந்திராத விடயத்தைக் கூறுவதென்றால் இவர்கள் கனவு கண்டிருக்க வேண்டும் அல்லது புலிகளின் இரகசிய தணிக்கைக் குழு அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
http://www.battinaadham.com/2015/03/blog-post_650.html