1970 களில் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த கி.பி.அரவிந்தன் இன்று காலமானார். பிரான்சில் வசித்துவந்த கி.பி.அரவிந்தன் ஈரோஸ் இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவர். ஈரோஸ் இயகத்தின் ஆரம்பம் முதல் அதன் தலைவர்களில் ஒருவராகச் செயற்பட்ட கி.பி.அரவிந்தன் 90 ஆம் ஆண்டு இயக்கத்தின் செயற்பாடுகளில் நிறுத்தப்படும் வரை ஈழத்திலேயே வாழ்ந்தார்.
சுந்தர் என்ற பெயரில் ஈரோஸ் இயக்கத்தில் அறியப்பட்ட கி.பி.அரவிந்தன், கவிஞரும் இலக்கியவாதியுமாவார்.
பிரான்சிஸ் கிரிஸ்தோபர் என்ற இயற்பெயரைக் கொண்ட சுந்தர் ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில் தற்கொலை செய்துகொண்ட சிவகுமாரனுடன் இணைந்து அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
சுந்தரின் வரலாறு என்பது ஈழப் போராட்டத்தின் வரலாறு. இனியொருவினதும் வாசகர்களதும் அஞ்சலிகள்
அன்னாருக்கு எமது கண்ணீராஞ்சலி
Heart felt condolace