ஜெனீவா தெருவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி எம்.ஏ.சுமந்திரன் கடக்க முற்ப்ட்ட போது புலம்பெயர் இளைஞர் ஒருவருக்கு மேலிட்ட உணர்சியின் உச்சத்தில் சுமந்திரனைத் திட்டித் தீர்த்த காட்சி பேஸ்புக்கிலும், இணையங்களிலும் வெளியாகியிருந்தன. கஜேந்திரகுமாரின் தேர்தல் கூத்துக்களின் பின்னர் வெளியாகியிருந்த தேசிய கேலிக்கூத்து இது. ஐரோப்பியத் தெருக்களில் நாய்களுக்குக் கிடைக்கும் சுந்தந்திரம் அகதிகளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும், திட்டுவதற்கு சுதந்திரம் உண்டு என்பதை அந்த இளைஞன் நிறுவிவிட்டார்.
இளைஞனின் உணர்ச்சி உச்சமடைந்ததற்குக் காரணம் சுமந்திரன் வணக்கம் சொல்லவில்லை என்பது மட்டும் தான். அடப்பாவமே ! இதுவரைக்கும் துரோகியென்று துரத்தப்பட்ட சுமந்திரனிடமிருந்து வணக்கத்தை இளஞன் ஏன் எதிர்பார்த்தார், பிரச்சாரத்திற்கு என்றே திட்டமிட்டே காணொளி எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் எல்லாம் தொக்கு நிக்க, அதனைப் பிரச்சாரப் படுத்திய தேசியத் தேசியக் குஞ்சுகளையும் பொரியல்களையும் என்னென்பது?
இவை எல்லாவற்றைற்கும் மேல், தான் இலங்கையில் மாடுமேய்த்துவிட்டு ஐரோப்பாவிற்கு வரவில்லை என உணர்ச்சிகளை உள்ளே விட்டுத் தாக்குதல் நடத்திய அந்த இளைஞன் விவசாயிகளை தமிழீழத்திலிருந்து துரத்தியடித்துள்ளார். சுமந்திரன் மட்டும் தான் மேட்டுக்குடி என்று எண்ணியவர்களுக்கு இது செருப்படி!
இதற்கும் மேல் இளைஞனின் வீடியோவைத் தயாரித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து தேசியப் பெருமையோடு வழங்கிய தேசிய விசில்களை எப்படி அழைப்பது. தமிழீழம் என்ன இவர்களின் தாத்தாவிட்டு தாழ்வாரத்திலா கிடக்கிறது, விவசாயிகளை வார்த்தைகளால் இனச் சுத்திகரிப்புச் செய்வதற்கு?
தமிழ் விவசாயிகளை கொச்சைப்படுத்தி, தமிழீழழத்திலிருந்து நீக்கி பிரசாரம் செய்த பேஸ்புக் பிதாமகன்களும் இணையங்களும் இலங்கை அரசின் நிதியில் இயங்குவதாக எந்தத் தகவலும் வந்துசேரவில்லை.
இவர்களின் தனி நபர் கலர்ப்படம் சுமந்திரன் மீதான அனுதாபங்களை அதிகரித்துள்ளது. ஆக, இவர்கள் சுமந்திரனால் முடுக்கிவிடப்பட்டவர்களோ?
கணொளி – நன்றி : பதிவு
மாடுமேய்த்தவனுக்கு அறிவு இருக்கும் இவர்கள் மாடுமேய்த்துவிட்டு ஐரோப்பாவிற்கு வரவில்லை. மக்களை மேய்ந்துவிட்டு வந்தவர்கள்.
தொழிலை இழிவுபடுத்தும் இந்த மேட்டுக்குடி கூட்டம், உழைக்கும் மக்களின் பெருமையை புரியாது பேசுகிறார். தாங்கள் என்ன cowboy கோலத்தில் இருந்து கொண்டு, மாடுமேய்கின்றவர்களை தரக்குறைவாக எண்ணுவது இவருடைய தற்பெருமையை புடமிட்டு காட்டுகின்றது. தொழிலை இழிவுபடுத்தும் யார்க்கும், வணங்காததையிட்டு கவலை இல்லை. சுமந்திரன் மற்றும் யாராவது வணங்கிக் கொண்டு திரியவேண்டும் என்ற நியாயம்தான் என்ன என்று வணக்கத்துக்குரியவர் விளக்கி சொதப்புவாரா?
சரியான கருத்து.
சுமந்திரனுடன் நான் உடன்படாத பல விடயங்கள் உள்ளன. அதற்காக சுமந்திரனின் தொழில் காண்போரை வணங்கித் திரிவதே என்பது மற்றவர்களை மதிக்காத தன்மை.
அது சரி சுமந்திரனும் இனியோருவும் எந்த நேர்கோட்டில் இணைகின்றன??
சுமந்திரனை இயக்குபவர்கள் இனியோருவையும்……!!!
இருக்கிறதில இருந்து பறக்கிறதுவரை எலாத்தையும் விமர்சிக்கும் இனியொரு என்னவோ சுமந்திரனை மட்டும் செல்லமாக கிள்ளி விளையாடுகிறது!!!!
சுமந்திரனை மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று, மாடு மேய்க்காத, மனிதனை மேய்த்த தமிழ் தேசிய குஞ்சு சொல்லியுள்ளார். உண்மைதானே! இதில் என்ன குற்றம் கண்டீர்கள்? சொல் பிழையா? பொருள் பிழையா? மாடு மேய்க்க லாயக்கு என்ற வார்த்தை தமிழ் அகராதியிலேயே இல்லையா? என்ன புதினம் போங்கள் நீங்கள்…. அது சரி கோட்டுச் சூடு போட்ட சுமந்திரன் கேள்வி கேட்கும் தமிழர்களை எருமை மாடுகளை பார்ப்பது போல் பார்கிறாராம். போதாக்குறைக்கு அவரே சொல்கிறாராம் கேள்வி கேட்போரைப் பார்த்து வாத்து மடையன்கள் என்று? இது உண்மையா? ……….. வினை விதைச்சா அதைத்தான் அறுக்கணும் சாமி!