சுமந்திரன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சனையின் பெயரால் ஏகாதிபத்திய நாடுகளை இலங்கைக்கு அழைத்துவரும் முயற்சியை இனி ஆரம்பித்துவிடும். இலங்கையில் புலம்பெயர்ந்தோர் விழாவைக் கொண்டாடுவதற்கான முனைப்புக்களை ரனில் அரசு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் அமோக வெற்றியின் பின் புலம்பெயர் விழா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசு, புலம்பெயர் அமைப்புக்கள் போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்படும்.
எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் கொழும்பில் ஆரம்பமாகும் புலம்பெயர் விழாவை அமெரிக்க அரசின் நேரடி அடியாட்களாகச் செயற்படும் சுமந்திரன், மங்கள சமரவீர போன்றோருடன் உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்தரும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன. தோல்வியடைந்த சமதானத் தூதரான எரிக் சுல்கையிம், தென்னாபிரிக்க அரசின் பிரதிநிதிகள், ஜேர்மனிய அரச நிறுவனங்கள் என்ற நீண்ட பட்டியல் இவ்விழாவின் ஆதரவுத் தளத்தில் காணப்படுகின்றன.
ஈழப் போராட்டத்தின் எஞ்சியுள்ள பகுதிகளையும் அழிக்கும் இந்த முயற்சி தொடர்பான புலம் பெயர் அமைப்புக்கள் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை
வடக்குக் கிழக்கு தமிழர் அதிகாரவர்க்கம், புலம்பெயர் அதிகார வர்க்கம் மற்றும் சிங்கள அதிகார வர்க்கத்தை இணைக்கும் இந்த முயற்சியின் பின்புலம் மக்களை உரிமைக்கான குரலை நசுக்குவதேயாகும்.
சுமந்திரன் போன்ற ஏகபோக அடியாட்படைகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல உலகில் எந்தப் பகுதியில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் எழுந்தாலும் ஒடுக்குவதற்குத் தலைப்படுவார்கள்.
வெலிவேரியாவில் சுத்தமான குடி நீருக்காகப் போராடிய நிராயுதபாணியன சிங்கள மக்கள் மீது மகிந்த அரச படைகள் துப்பாக்கிப் பிரையோகம் மேற்கொண்டன. அதற்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் ஏற்பட்ட போது ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் பேசி அதனைத் தீர்த்துவைப்பதாக சுமந்திரன் கூறிப் போராட்டங்களை ஒடுக்கினார்.
கஜேந்திரகுமாருக்கு ஆதரவு வழங்கிய புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்கள் மாவீரர் தினத்தை ஒழுங்கமைப்பதில் படு பிசியாகிவிட்டன. பணத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மாவீரர் தின வியாபாரம் கஜேந்திரகுமாரின் தோல்விகுப் பின்னான வருவாய்க்கான முயற்சி.
I simply do not understand what this article is trying to say.