பிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட சூஸே(SUEZ) என்ற நிறுவனம் நீர் வழங்கல், நீர்ச் சுத்திகரிப்பு, கழிவகற்றல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பியுள்ள பல் தேசிய நிறுவனமாகும். பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த நிறுவனம் மக்களின் வாழ்வாதாரத்தை வியாபாரமாக்குவது மட்டுமல்ல சுற்றுச் சூழலை அழித்துப் பணமீட்டுவதிலும் முதன்மை வகிக்கிறது.
உலகவங்கியின் உதவியுடனும் மிரட்டல்களுடனும் இயற்கையின் கொடையான குடி நீரைத் தனியார் மயப்படுத்தும் திட்டத்தில் இன்று முன்னணியில் திகழும் நிறுவனம் சூஸே. இந்த நிறுவனத்தின் கிளை பிரித்தானியாவில் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தியதற்காக £500 000 தண்டப்பணமாக அரசிற்குச் செலுத்தியுள்ளது.
உலகில் 2.7 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடி நீர் கிடைப்பது அரிதாகியுள்ளது. 40 வீதமான மக்கள் போதிய கழிவிட வசதிகளற்று வாழ்கின்றனர். இந்த நிலையில் சூஸே போன்ற நிறுவனங்களின் சொத்துடைமையாக நீர் மாறி வருகின்றது. பிரித்தானியா போன்ற நாடுகளையே சூறையாடிவிட்டு சிறிய தொகைப் பணத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாயின் இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறான நிறுவனங்கள் நுளைந்தால் நிலமையைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது.
சூஸே இன் கிளைகளில் ஒன்று பிரித்தானியாவின் ஒரு பிரதேசத்தையே நாசப்படுத்தியதற்கான ஆதாரங்கள் பிரித்தானிய அரச இணையத்தில் வெளியாகியுள்ளது.(ஆதாரம்: கீழே)
இந்த சூஸே நிறுவனத்தின் கொள்ளைக்கும் நீரை மாசுபடுத்தி அதனைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கும் தமிழ் நாடு திறந்துவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடிப் படுகொலைகளை நடத்திய மோடி-எடப்பாடி அரசின் மற்றொரு நாசகாரச் செயல் சூஸே நிறுவனத்திற்கு ஒரு பிரதேசத்தைத் தாரை வார்த்துக்கொடுத்த நடவடிக்கை.
3150 கோடி ரூபா செலவில் கோயம்புத்தூர் நகராட்சிப்பகுதிக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை எடப்பாடி அரசு சூஸே இற்கு வழங்கியுள்ளது. தமது நிலத்தின் அடியிலிருக்கும் நீரை பிரஞ்சு நிறுவனத்திடம் விலைகொடுத்து வாங்கும் அவலத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உலகின் 70 வீதமான தனியார் மயப்படுத்தப்பட்ட நீர் சூஸே மற்றும் விவண்டி என்ற இரண்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகீன்றது. இப்போது இந்தியாவின் நீர்ச் சந்தை சூஸே இற்கு இலாபமீட்டும் வியாபாரமாகிவிட்டது.
உலகின் 70 வீதமான தனியார் மயப்படுத்தப்பட்ட நீர் சூஸே மற்றும் விவண்டி என்ற இரண்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகீன்றது. இப்போது இந்தியாவின் நீர்ச் சந்தை சூஸே இற்கு இலாபமீட்டும் வியாபாரமாகிவிட்டது.
பொலிவியா ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளூடாக லத்தீன் அமெரிக்காவில் நுளைந்த சூஸே நிறுவனத்திற்கு அந்த நாட்டு மக்கள் செலுத்தும் பணம் ஒரு வருடங்களுக்கு உள்ளாகவே 88.3 வீதம் அதிகரித்துவிட்டதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன,
எடப்பாடி மோடி அரசுகள் இணைந்து நடத்தும் நீர்க்கொள்ளைக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் தனி மனிதர்கள் கூடக் கைது செய்யப்படும் பாசிச ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெறும் நிலையில், நீர்க் கொள்ளைக்கு எதிரான உலக மக்களின் கூட்டிணைவு அவசியமானதாகும்.
https://www.gov.uk/government/news/suez-to-pay-505000-for-pollution-at-cornwalls-largest-landfill