Tuesday, May 13, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஒரு உளவாளியின் கதை

இனியொரு... by இனியொரு...
09/21/2017
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

george-orwellஉலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கு ஜனநாயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல.

தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க அடிவருடி எவ்வாறு நச்சுக்கருத்துக்களை விதைத்தாரோ உலக கம்யூனிச முகாம்ற்கு எதிரான எழுத்துக்களின் அரிச்சுவடியை ஆரம்பித்தவர் ஜோர்ஜ் ஓர்வல்.

ஜோர்ஜ் ஓர்வல் குறித்து பிரித்தானிய பொலிசாருக்கும் பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ 5 இற்கும் இடையே ஒரு போராட்டமே நடந்திருக்கிறது. ஓர்வல் அதீ தீவிர புரட்சிகர கம்யூனிஸ்டாக தன்னைக் உலகிற்கு வெளிக்காட்டிக் கொண்டதே இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. பிரித்தானிய போலிஸ் இவர் கம்யூனிஸ்ட் என்று பிந்தொடர்ந்தது.பிரித்தானிய உளவு நிறுவனம் இவரைப் பாதுகாத்தது.

பிரித்தானியா அதிகாரத்திற்கு சேவை செய்வதற்காக தன்னைப் போலிஸ்படையில் இணைத்துக்கொண்ட ஓர்வெல், பர்மாவிற்கு அனுப்பப்படுகிறார். அங்கே போலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார்.

1927 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்குத் திரும்பிய ஓர்வெல், அங்கு எழுத்தாளராகும் முடிவிற்கு வருகிறார். அங்கு வேறு தொழிகள் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார். தனது வறுமை எவ்வாறு தன்னை தின்றது என்று தனது நூலில் அவரே பின்னதாகக் குறிப்பிடுகிறார்.

முன்னதாக மார்க்சியக் குழு ஒன்றுடன் இணைந்து இஸ்பானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஜோர்ஜ் ஓவல் கலந்துகொண்டு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமுற்றிருந்தார். இதனால் எம்.ஐ 5 இவரைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தது. இவரது வறுமையைப் பயன்படுத்திகொண்ட பிரித்தானிய உளவு நிறுவனம் இவரை உள்வாங்கிக்கொண்டது.
1942 ஆம் ஆண்டு ஓர்வல் பிபிசி இன் இந்திய சேவையில் ஊடகவியலாளராகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பிரித்தானியப் போலிஸ் படையில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஈவிங் என்ற உயர் அதிகாரி ஒர்வெலின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கொள்கிறார். ஓர்வெல் இந்திய கம்யூனிஸ்டுக்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் பார்வையை கொண்டிருப்பதாகவும் ஒரு அறிக்கையை எம் ஐ 5 இற்குச் சமர்பிக்கிறார்.

அந்த அறிக்கை குறித்து ஓர்வெல் மீது எம்.ஐ 5 எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எம்.ஐ 5 உளவு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான ஒகில்வி என்பவர் அந்த அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அவர் பொலீஸ் அதிகாரிக்கு எந்தப்பதிலும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு பிரித்தானிய ஆவணக் காப்பகத்தின் பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்ட வேளையில் தான் ஓர்வல் யார் என்பது தெரியவருகிறது.

1949 ஆம் ஆண்டு ஓர்வெல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று தான் கருதுபவர்களின் பட்டியல் ஒன்றை பிரித்தானிய உளவுத்துறையான எம் ஐ 5 இற்கு வழங்கியது வெளியான ஆவணங்களில் காணப்பட்ட தகவல்களில் ஒன்று. அந்த வேளையில் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஸ்டாலின்ஸ்டுக்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டர்கள்.

இதற்கு ஒருவருடம் முன்னதாக ஓர்வெலின் மனைவிற்கு பிரித்தானிய உணவுத்துறை அமைச்சில் முக்கிய பதவி வழங்கப்ப்பட்டது.

ஜோர்ஜ் ஓர்வெலின் நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகம் குறித்த தவறான அபிப்பிராயங்களை திட்டமிட்டுப் பரப்பி சமூகத்தை எவ்வாறு நச்சூட்டியது என கைலாசபதி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

ஜோர்ஜ் ஓர்வல் தொடர்ந்தும் தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவும் இடதுசாரியாகவுமே உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதெ வேளை காட்டிக்கொடுப்பாளனாக உளவு நிறுவனத்திற்கு வேலைபார்த்திருக்கிறர். கம்யூனிசத்திற்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்குவதில் உளவு நிறுவனத்தின் அடியாளாகத் தொழிற்பட்டிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள்அதிகரவர்க்கத்தின் மரணக் கிடங்கில் புதைந்து கிடக்கின்றன.. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றது,

முப்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற நமது போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உளவாளிகள் என்ற தெரியவருவதற்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை. இன்னும் பல தசாப்தங்களின் பின்னர் ஆவணப்படுத்தப்படக்கூடிய நிலையிலிருந்த ஆலோசகர்களும் உளவாளிகளில் என்ற தகவல் வெளியாகும் போது வடக்க்குக் கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் பேரினவாத அரசால் சிறுபான்மையாக்கப்பட்டிருப்பார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கனவும் காலமும் :     விஜி

கனவும் காலமும் :     விஜி

Comments 1

  1. Nono says:
    12 years ago

    தமிழகத்தில் இருந்து எழுத்துச் சேவை செய்யும் ஆட்களில் எத்தனைபேர் இத்தகைய உளவாளிகள்? கடந்த காலத்தின் ஈழத்தின் குரல்களிலும் எதிர்ப்புக்குரல்களிலும் எத்தனைபேர் உள்வாளிகள்?
    இப்போதும் எத்தனை உளவாளிகள்?
    இறந்துபோன கடந்துபோன ஆட்களைப்பற்றியும் பேசவேுண்டும். அத்தோடு தற்போது உயிரோடு இருந்து இரண்டாம்படை வேலைசெய்யும் ஆட்களையும் கண்டுபிடித்து எழுதவேண்டும். வாழ்த்துக்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...