கடந்த பல தசாப்தாமாகச் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்குட்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது அரசியல் பிரச்சனையுள் மிக நேர்த்தியாகாக் குழிப்பறிப்புகளைச் செய்யும் அரசியற் தந்திரத்தை இவர்கள் செப்பனவே செய்து வந்திருக்கின்றனர்.தேவதாசன், ஞனம் போன்றவர்களும்,நிர்மலா -இராகவன் , கீரன் குழுக்களுமாக இலங்கை அரசைச் சார்ந்து மக்களை அண்மித்தபோதெல்லாம் இலங்கைப் பாசிச மகிந்தா அரசை சனநாயக அரசாகவே பேசியும் -எழுதியும் வந்தனர்.
தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும் மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த “நாம் அனைவரும் இலங்கையர்கள்” தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி “பாசிசப் புலிகளை”அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.
2009 ஆம் ஆண்டுமட்டில் இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.
கிழக்கு மாகாணத்தைப் பிளந்தெடுத்து , அதைச் சிங்கள -இந்திய அரசுகளுக்குடந்தையாக மாற்றும் தந்திரத்துள் இவர்கள் முன்வைத்த “யாழ் மேலாதிக்கம்-மையவாதம்;யாழ்ப்பாணியம் -வேளாளியம் ” போன்ற அரசியற் கருத்தாக்களின் பின்னே நிகழ்த்தப்பட்ட பிளவுவாத அரசியலின் வினையென்ன?
கிழக்கு மாகணத்தைப் பிளந்த கையோடு திருவாளர்கள் ஞானமும் , தேவதாசனம் கிழக்கு மாகாணத்துள் பிரவேசித்துப் பிள்ளையானை அணுகிச் சென்று செய்த அரசியல்பின் “ஆய்வுகளை முன்வைப்பது”கோமாளித்தனமாகுமாகுமா ?
இந்திய -இலங்கை அரசுகளது கயமைத்தனமான பிளவுவாத அரசியலுக்குப் பக்கப் பலமாகவிருந்து, அரசியல் செய்யும் இத்தகையவர்களைக் குறித்து நாம் என்ன புரிதலோடிருக்கின்றோம்?
இவர்கள் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை மறுத்து மகிந்தாவின் தலைமைக்காக மக்களைப் பிளந்தார்களோ அதேயளவு மூர்கத்தோடுதாம் தமிழ்பேசும் மக்களைப் பிரதேச -சாதிய ரீதியாகப் பிளந்து இந்திய -இலங்கையின் அரசியற் சூழ்ச்சிக்கேற்பக் கருத்தாடினார்கள்.
இவர்களின் பின்னே மிகக் கெடுதியான அரசியல் சக்திகள் ஒழிந்திருந்தபடி இவர்களை வைத்து நகர்த்திய -நகர்த்தும் அரசியலானது புலத்தில் அநியாயத்துக் கு “மாற்றுக் கருத்தாளர்களையே” கருத்தியல் ரீதியாகவும்,செயற்பாட்டு ரீதியாவும் இலங்கைப் பாசிசத்தை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளினர்.
இதன் பின்னால் இருக்கும் அரசியலை தள்ளி வைத்துவிட்டு, முகத்துக்கஞ்சி அவர்களை நியாயப்படத்தவே முடியாது.இவர்கள் தெளிவான அரசியல் இலக்குடையவர்கள்.அதையவர்கள் இதுவரை சாதித்தே வருகின்றனர்.இந்த அரசியல் ,பெரும்பான்மைச் சிங்கள இனவாத அரசியலுக்கும் ;இந்தியப் பிராந்திய அரசியல் நலனுக்கும் உடந்தையான இந்த லொபிக் குழுவானது , முள்ளிவாய்க்கால்வரை போலிக்கு இடதுசாரியவாதம் பேசிய இரயாகரனைக்கூடத் தமது கரச்சேவைக்கேற்ப உள்வாங்கியதென்றால் இதுவரையான இரயாகரன் , இடதுசாரிய முகமூடி தரித்த இலங்கை அரச லொபிகளது முகாமைச் சேர்ந்தவரென்பது இப்போது அப்பட்டமானவுண்மையாகி வருகிறது.இல்லையேல் , இத்தகைய இலங்கை அரச லொபிகளை அணைக்கக் காரணமென்ன ? ; அவர்கதானே இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை! ;மகிந்தா சமாதானத்தைக் கொணர்ந்தவர் ;சனநாயத்தை மீட்டவர்;தமிழர்கள் தேசிய விடுதலை என்ற கோசத்தைவிட்டும் ;தமிழ்ர்கள் என்பதைமறுத்து இலங்கையர்கள் என்று, உணரவேண்டுமென்று மகிந்தாவின் பேரின வாதத்தின் மொத்தக் குரலாக மக்களை மொட்டையடிக்கும் இன்றைய தருணத்தில் இரயா உங்களுக்கும் என்ன வேண்டும்?
இலக்கியச் சந்திப்பு” க்குச் சொந்தங்கொண்டாடும் ஜீவமுரளி, நிர்மலா,இராகவன்,ஞானம்,தேவதாசன், போன்றோரது நயவஞ்சக வலைவிரிப்பு நல்லவுதாரணமாகிறது.குழுக்கட்டல் எந்த வகையிலும் பாரிய மாற்றத்தைத் தரப்போவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இத்தகைய தலித்துவ வேடாதாரிகள்-நபர்கள்-குழுக்கள் எப்போது ‘நல்ல’ மனிதர்களாக,முற்போக்காளர்களாக மாறினார்கள்?
இப்போதைய அவர்தம் முன்னெடுப்புகளின் அவர்தம் அரசியல் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.இவர்கள் செய்த காரியத்தால் ஞானம்போன்ற பணத்துக்கு அலையும் வேடதாரிகள் ,கொலைக்காரன் கருணாவோடிணைந்தும்,பிள்ளையானுக்கு ஆலோசகராக மாறியும் தமிழர்களது பாரம்பரிய பூமியை அந்நிய நலன்கள் துண்டாடுவதற்கிசைவாகக் கருத்தியற் பரப்புரையைச் செய்து பிரதேசவாதத்தைக் கிளறி மக்களைக் கூறு போட்டுக்காட்டிக் கொடுத்தார்கள்.இதன் தொடராக மாகாண சபைகள் குறித்தும் அதன் இருப்பு-வளர்வு குறித்தும் வகுப்பெடுப்பதில் ” 42 வது இலக்கியச் சந்திப்பு”, இந்திய லொபிகளது அரங்காக மாறிக்கொண்டது.இந்த, இலக்கியச் சந்திப்புக் குறித்துப் பேசுவதைவிட மாகாணசபை எனும் இந்திய நலனுக்குட்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் அதன் போக்கை ஏன் ஞானம் போன்றோர் நியாயப்படுத்துகின்றனரெனப் பார்ப்பதுதாம் அவசியமானது.
வடக்குக் கிழக்கு மாகாணங்களும் அதன் வளர்ச்சிக்கும்,செயற்றிறனுக்கும் ,முன்னேற்றத்துக்குமென வகுப்பெடுக்கப்படும் கருத்துக்கள் இலங்கை இனங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டைக்குறித்து ஒரு மொன்னைத் தனமாக விளக்க முற்படுகிறது.
இலங்கைப் பேரினவாத அரசியலது கையாலாகாத்தனம் இலங்கைச் சிறுபான்மை இனங்களை மொட்டையடித்த வரலாறு இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-மற்றும், பொருளாதார நலன்சார்ந்த முரண்மிக்க அரசியல் உரிமைவழி கட்டப்பட்டதெனினும் இனத்துவ அடையாள அரசியலானது அன்றைய காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முழுமொத்த மக்களையும் காலனித்துவத்தின் பின் விளைவுகள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்காகக் கட்டப்பட்டது.இதைச் செய்த பிரித்தானியக் காலனித்துவாதிகள் நமக்குள் இன்றும் தமது சிந்தனைவழி நம்மை கூறுபோடுவதில் நவ காலனித்துவத் தொடராக வெளிப்படுகின்றனர்.ஆனால், அவர்களது முகங்கள் நமது முகத்தோடு மேலெழுவதைக் குறித்துப் பேசியாக வேண்டும்.சந்தர்ப்பம் வரும்போது இது குறித்து விரிவாகப் பேசப்படவேண்டும்.ஏனெனில், ‘வடக்கு ஆதிக்கம்-யாழ்பாணியம்’ எனும் உளவியற் கருத்தாக்களது அரசியலானது அன்றைய காலனித்துவத்தின் வார்ப்புக்குள் உருவாக்கப்பட்ட அரசியலென்பதைக் குறித்து நீண்டவுரையாடலைச் செழுமையான மொழிவழியாகக் குறித்தாக வேண்டும்.
ஸ்ரீமா-சாஸ்த்திரி, பண்டா-செல்வா, டட்லி-செல்வா, ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தங்களுக்குள் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தமே.இதுதாம் “தமிழர்களது உரிமையைத் தமிழர்களை வைத்தே துவசம் செய்ததன் முன்னோடி” ஒப்பந்தம்.
இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்துப்பேசும் ஞானம் அரசியல் அநாதையாக இந்தியப் பிராந்திய நலனை எமக்குள் திணிப்பதில் கருத்தற்றவொரு கோழைத்தன அரசியலைப் பேசுகிறார்.
ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு அரசியல் மாணவனுக்கு இந்தப் பிரச்சனையின்(மலையக மக்களுக்கான குடியுரிமை நீக்கம்)முக்கிய கூறு பார்ப்பனியம் போற்றும் இந்தியத் தேசத்தினது சதியென்பதையும்,அதற்கான காரணம் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தனது கைகளுக்குள் வைத்திருந்து தமிழரை கருவறுக்கவுமான பிராந்தியப் புவிகோளரசியலின் பிரதிபலிப்பு-அபிலாசை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இலங்கையின் இடதுசாரிகளின் [குறிப்பாக JVP ]வரலாற்றில், அவர்கள் செய்த மாபெரும் துரோகம் மலையமக்களை ‘இந்தியாவின் விஸ்தரிப்புக்கு உழைக்கும் கைக் கூலிகள்’என்று காட்டிக் கொடுத்தது.
அன்றைக்கே மார்க்சியப் பார்வையற்ற இந்த இடதுசாரிகள் சிங்களப் பூர்ஷ்சுவாக்களின் கைகளைப் பலப்படுத்தியதன் விளைவு இன்றைக்கும் சிங்களப் பாசிசத்தைக் காப்பதற்குத் துணைபோனபடி.1949இல் கொண்டுவரப்பட்ட பிராஜவுரிமைச்சட்டம் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் முழு நிறைவுகண்டது.
இவ்வொப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்கு நடந்தேறிய அரசியல் கூட்டுக்கள்,டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்,கூட்டரசாங்கத்தில் பங்குகொண்ட தமிழ் அரசியல் வாதிகளின் பதவி ஆசைகள்,அவர்களுக்கு இந்தியா ஆசைகாட்டிய முறைமைகள் யாவுந்தாம் காரணமாகிறது.இதையெல்லாம் மறைத்தபடி எவனொருவனால் மாகாணசபை குறித்து விவாதிக்க முடியும்?அதன் தோல்விக்குப் புலிகள்மட்டுமே காரணமென்றும், மாகாணசபைகளது அபிவிருத்திக்கும் அதன் வாயிலாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துள் பங்குறுவதாலும் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும், இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் அதன் தெரிவில்-பங்கு பெறுதலில் உரிமைகள் பெறும் வாய்பு அதிகமெனவும் எந்தவொரு மூடனாலும் ஞானம்போல் விவரிக்க முடியாது.
இதிலிருந்த நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இத்தைகய வலையில் பொருட் குவிப்புக்காக ஞானம் போன்ற இளைஞர்கள் பலியாகியதுதாம் நம் காலத்துத் துர்ப்பாக்கிய நிலை!இதுதாம் இந்தியப் பார்ப்பனியத்தின் வெற்றி.அதன்ஆதிக்கமானது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தோடு பின்னப்பட்டது.இதை இந்தியா திணித்த மாகாணசபை மற்றும் அதன் அடித்தளமான ஒப்பந்தங்கள் வரை நாம் அறிய முடியும்.
வடக்கையும்,கிழக்கையும் பிரித்த அமெரிக்க விருப்புக்குட்பட்ட தெரிவில் அண்மித்திருந்த இந்திய-இலங்கை அரசுகள் வடக்கையும்,கிழக்கையும் உணர்வு ரீதியாகவும்,சட்டரீதியாகவும் பிரிக்க முற்பட்டபோது அதைக் கிழக்குக்கு வசந்தமென வகுப்பெடுத்தும்,கிழக்கில் வடமாகாணத்து மக்கள்மீதான கலவரத்தைத் தூண்டியும்,வடக்கின் ஆதிக்கத்துக்கெதிரான நடவடிக்கை இதுவெனவும் பரப்புரை செய்த ஞானம் போன்றவர்கள் இப்போது புதிய கதை விடுகிறார்கள்.
வடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கைப் பேரினவாதத்தால் நசுக்கப்படும் ஒரு இனம் தனது ஐதீக உரிமையைக்கூட விட்டுவிட வேண்டுமென்கிறார் ஞானம்.மிகப் பெரும் அரசியல் பிழைப்பு வாதியாக மாறிய ஞானம், மிக ஆபத்தான அராஜகக் குழுவின் பிரச்சாரப் பீரங்கியாகவிருந்து நடந்து முடிந்த “42 வது இலக்கியச் சந்திப்பில் ” இதையே தொடர்கிறார்.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்தியப் பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!இதற்காக நமக்குள் சாதியப் பிளவுகளையும்,பிரதேச வாதத்தையும் கூர்மைப்படுத்திச் செயற்கைய மக்களைப் பிளந்து அவர்களது உரிமைகளுக்கு வேட்டு வைப்பதிலிருந்து தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக்குழுக்களும், கழகங்களும்,தனி மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான வடக்குக் கிழக்குப் பாரம்பரிய நிலப்பரப்பையும் அதன்வழியான சுயநிர்ணய வாதத்தையும் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.
இதற்கு இந்த தலித்துவக் காரர்களும்,இலக்கியப் பசப்பாளர்களும்,எக்ஸ்சில் ஞானம்போன்ற அதி சதிகார இயக்க அராஜகவாதக்கூட்டணியும் என்று, எல்லோருமே பொறுப்பாளர்கள்.இவர்களை வரலாறு என்றைக்குமே மன்னிக்காது!ஒருபக்கம் புலிப்பாசிசமும் மறுபக்கம், இந்த அந்நிய நலனது கூஜாத் தூக்கிகளுமாக இலங்கைப் பாசிச அரசின் காலடியில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை வீழ வைத்து அடிமையாக்கினர்.
இவர்கள் பேசும் தலித்துவம்கூடப் பிழைப்புவாதம் என்பதற்கு இவர்கள்பேசும் மாகாணசபையை உருவாக்கத் துணை புரிந்த இந்தியாவின் தலித்துகளின் நிலைமையே சாட்யானது!இங்கு திருமாவளவன் வகையறாக்களது அரசியலது விருத்தியே இலங்கையிலும் ஒரு மொன்னைத் தனமான தலித்துவக் குழுக்கள் இந்தியப் பிராந்திய நலனின் பொருட்டு உருவாக்கப்பட்டார்கள்.
இன்றைய இந்தியாவில் 237 மில்லியன்கள் மக்கள் நடுத்தெருவில் காலம் தள்ள-தீண்டத்தகாதவர்களாக இருத்திவைக்கப்பட்டுச் சுரண்டப்படும்போதும்,அந்த மக்களைக் காவு கொள்ளும் அரசியலானது அரசியல்வாதிகளைக் கோடிஸ்வரர்களாக்கியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகிறது? ஏனிந்த மக்களுக்கு வாழ்வாதாரவுரிமை இந்தியாவில் கிடையாது? இந்தியக் குடியுரிமை இருந்துவிட்டால் சகலதும் சரியாகிவிடுமா?அல்லது, கூட்டாக’ஜன கண மண்ணாங்கட்டி…’பாடினால் இந்தியர்களாகிவிட முடியுமா?
மனிதர்களைக் கூறுபோட்டுக் கொல்லும் ஒரு சாதி அரசியலுக்கும்,அந்த அரசியலால் எழுந்த சட்ட நிர்ணயங்களுக்கும் இவற்றால் பாதுகாக்கப்படும் இந்திய பொருளாதாரத்துக்கும் எந்த மக்கள் நலனும் கிடையாது.
இதை இலங்கை அரசியலுக்குள்ளும் பொருத்திப் பார்க்குமிடத்தில் ‘துரோகம்’குறித்த குழப்பம் நீங்கி,மக்கள் நலனோடு முன்னெடுக்கும் அரசியல்-அமைப்புகள் விருத்தியாகும் அவசியம் புலப்படும்.
இதைவிட்டு யாழ்ப்பாணத்தான் துரோகமென்ற மொன்னைத்தனமான விவாதம் உருப்புடியாக எதையுஞ் செய்யாது.மாறாக,இன்னும் காழப்புணர்வைக் கொட்டி இந்திய இலங்கை அரசுகளுக்குச் சேவை செய்வதில் உச்சம் பெறும்.
வடக்கு ஆதிக்கம் என்பதன் சமூக உளவியலுக்குள் கட்டி வளர்க்கப்படும் இந்திய-பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது இலங்கைப் பேரினவாதவொடுக்குமுறைக்கு மறைமுகமாகத் துணை போவதென்பதிலிருந்து இந்திய ஆளும் வர்க்க நலனை இலங்கையில் அடைய முனைவாதாகப் பார்க்கப்பட வேண்டும். அதுள், ஞானம் போன்றவர்களது ஏஜமானர்களான கருணா-பிள்ளையான் கம்பனியானது அவர்களது சட்டபூர்வ அடியாட்கள் மட்டுமல்ல மாறாக, இலங்கை மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் எதிர்ப் புரட்சிகரச் சக்திகளென்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/10152834869652168
எனக்கு இலக்கியச் சந்திப்பு மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் பற்றி அதிக அக்கறை இல்லை.
கட்டுரை தொடர்பாக சில கேள்விகள்:
கட்டுரையாளர் ஒருபுறத்தில் “நாம் இலங்கையர்” என்பது சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது என்கிறார். மறுபுறத்தில் இலங்கைக்கு உட்பட்ட 1987களிலேயே நிராகரிக்கப்பட்ட மாகாண சபையின் கிழக்கு இணைப்பை நியாயப்படுத்துகிறார். (அது கிழக்கு மாகாண மக்களிடம் எதுவித கேள்வியும் கேட்கப்படாமல் உருவாக்கப்பட்டது என்பதை மறந்து விடுகிறார்.)
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு கிழக்கில் வாக்கெடுப்பை (வடக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற எடுமானத்தின்கீழ்) நடத்துவதை புலன் பெயர்ந்த தமிழ் தேசியவாதிகள் எதிர்ப்பது ஏன்?
கிழக்கு மக்கள் தமக்கான அரசியல் அதிகாரத்தைக் கேட்பது பிரதேச வாதமாயின் தமிழர் என்ற அடிப்படையில் கேட்பது இனவாதமல்லாமல் வேறு என்ன?