தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று லண்டனில் ஊடகவியலாளர் ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அமரிக்கா சென்று திரும்பியுள்ள தேசியக் கூட்டமைப்பு கனடாவில் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் வட-கிழக்கு தமிழர்களுக்குச் சொந்தமானதில்லை அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
இதே வேளை கொழும்பு ரெலிகிராப் என்ற இணையச் செய்தித் தளம் சம்பந்தன் குறித்த தகவல் ஒன்றை விக்கிலீக்ஸ் தகவல்களிலிருந்து பெற்று வெளியிட்டுள்ளது.
அமரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய இரகசியத் தகவல் ஒன்றில் சம்பந்தனை “எனக்கு பணத்தை காட்டு” மனிதனாகக் -“show-me-the-money” man-
குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கேபிள் தெரிவித்துள்ளது.
தவிர, இனப்படுகொலையை ராஜபக்சவுடன் இணைந்து நடத்திய சரத் பொன்சேகா உடனான தேர்தல் ஒப்பந்ததின் முன்னதாக, மகிந்த ராஜபக்சவிடமிருந்தும் சரத் பொன்சேகாவிடமிருந்தும் ஆகக் கூடுதலான சலுகைகளைப் பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தன் என்ற அரசியல் வியாபாரி மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அரசியல் வியாபாரிகளை முப்பது வருடகாலப் போராட்டம் உருவாக்கியுள்ளது.
அடிமுட்டாள்தனமான செய்திக் கோர்ப்பு இதுதான்.
முட்டையில் மசிர் புடுங்குவது என்பதும் இதேதான்.