சாந்தி சச்சுதானந்தம் காலமானார். பெண்ணியவாதி, எழுத்தாளர், அரசியல் சமூக ஆய்வாளர் என பல்வேறு தளங்களில் செயலாற்றிய சாந்தி கொழும்பில் வசித்துவந்தார். ரொஸ்கிய வாதியாக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சாந்தி அன்னையர் முன்னணி, மாதர் மறுமலர்ச்சிப் பேரணி ஆகிய பெண்கள் அமைப்புக்களில் செயற்பட்டார்.
மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம்பெற்றார். 1958 ஆம் ஆண்டு பிறந்த சாந்தி சச்சிதானந்தம் பல்வேறு வழிகளில் இளைய சமூகத்துடன் இணைந்து செயற்பட்டார். விழுதுகள் மேம்பாட்டு மையம் என்ற தன்னார்வ நிறுவனத்தை உருவாக்கி அதனூடாக அண்மைக் காலங்களில் செயற்பட்டார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இவரது அலுவலகம் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
அண்மைக் காலமாக உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி சச்சிதானந்தம் இன்று 27/08/2015 காலமானார்.