பிரான்சில் அத் தேசம் தோன்றுவதற்கு சற்று முன்பதாக அங்கு பல் வெறு மொழிகள் பேசப்பட்டன 50 வீதமான மக்கள் பேசிய மொழியான லூ கோலுவா என்ற மொழியே பிரஞ்சு தேசத்தின் மொழியாகப் பரிணாமம் பெற்றது. ஒரு நூற்றாண்டுகளுகு உள்ளாகவே அனைத்து மக்களும் பிரஞ்சு மொழியைத் தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டனர்.
தவிர, பிரான்சில் மக்ரேபியன் நாடுகளின் எல்லைகளில் வாழ்ந்த அரேபியர்களைப் பிரஞ்சு தேசம் அணைத்துக்கொண்டது.
இன்று அவர்கள் பிரஞ்சு அடையாளத்துடன் கலந்துவிட்டனர். கிறீஸ்தவப் பெயர்களுடன் அவர்களில் பலர் சிலர் இன்றைய பிரஞ்சு தேசிய வாதக் கட்சி எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் பாசிசக் கட்சியான தேசிய முன்னணியின் உறுப்பினர்களாகக் கூட இருக்கலாம்.
இத்தாலியில் கூட இதே நிலை தான். தென் இத்தாலியில் தற்காலிகமாகக் குடியெறியிருத்த நாடோடி வட இந்தியர்கள் இன்று இத்தாலியர்களாகவே கருதப்படுகின்றனர். முசோலீனியைப் பின்பற்றுவதாகக் கூறும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான கட்சியில் அவர்களில் பலர் இன்று உறுப்பினர்களாகக் கூட இருக்கலாம்.
இஸ்பானியாவின், இன்று இஸ்பானியார்களாகக் கருதப்படும் பலர் மரோக்கர்களாக இருந்த வட ஆபிரிக்கர்கள்.
ஒரு தேசிய இனம் தோன்றி வளர்ச்சியடையும் போது அது பல இனங்கள், பல சந்தர்ப்பங்களில் மொழிகளின் கலப்பின் ஊடாகவே உருவாகும் என்பது வரலாறு.
ஒரு மொழி பேசினால் மட்டும் ஒரு தேசியமா என்ன? அப்படியானால் இன்று பிரிதானியாவிலிருந்து பிரிந்து போகக் கோரும் ஸ்கொட்லாந்தும், அதற்காகப் போராடும் அயர்லாந்தும் ஆங்கிலம் பேசும் நாடுகள் என்பது தெரியாதா? ஒரு மொழி பேசுவதால் மட்டும் ஒரு தேசமாகவோ ஒரு தேசியமாகவோ கருதுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதே அளவு முட்டாள் தனம் தான் இனத் தூய்மைவாதம் பேசுவது.
இனத் தூய்மை வாதம் பேசும் சீமனின் நாம் தமிழர் மதத் தூய்மைவாதம் பேசும் பாரதீய ஜனதா என்ற பார்ப்பனக் கட்சி எல்லாம் நமக்கு முன்னால் உலாவரும் கிரிமினல்கள். திரிபுராவில் பிரிவினை கோரிய இனத் தூய்மைவாதக் கட்சியுடன் மத வெறிக் கட்சியான பாரதீய ஜனதா கூட்டுச் சேர்ந்ததைப் போன்றே சீமானுடனும் அவர்கள் கூட்டு வைத்துக்கொள்ள நாளாகாது.
கழகங்கள் இல்லாத தமிழ் நாட்டை அமைப்போம் என்று சீமான் பாரதீய ஜனதாவோடு ஒரு புள்ளியில் இணைந்து கொள்வதிலிருந்தே தெரியவில்லையா, இணைவிற்கான ஆரம்பம் தோன்றிவிட்டது என்பது?
தி.மு.க என்பது சந்தர்ப்பவாத வாக்குக் கட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் அழிவிலிருந்து தான் ப.ஜ.க முளைவிட முடியும் என்ற வாதத்தை நிராகரிக்க முடியாது. அதையே ப.ஜ.க வும் தனது திட்டமாக முன்வைக்கிறது.
பாரதீய ஜனதாவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட போது ஹிட்லரதும் முசோலீனியினதும் வழியைப் பின்பற்றுவோம் என்றே கொள்கைத் திட்டத்தை வகுத்துக்கொண்டார்கள்.
சீமான் கட்சியின் உச்சி மாநாட்டிலும் ஹிட்லரின்படம் வைக்கப்பட்டிருந்ததை மறந்துவிடலாகாது. தி.மு.க வின் தேர்தல் வாக்குகளைத் பிரிப்பதற்கு எப்படி ரஜனியும் கமலும் பயன்படுத்தப்படுகிறார்களோ அப்படியே சீமானும் பயன்படுத்தப்படுகிறார் என்பதை பலர் சிந்திக்க வேண்டும். பெரியாரியக் கொள்கைகளுக்கும் சமூக நீதிக்கும் எதிரான சீமானின் தமிழ்த் தேசியம் புலம்பெயர் நாடுகளில் பணம் திரட்டுவதுவரை நீண்டிருக்கிறது என்பது தான் சீமானின் பாசிச ஆபத்துக் குறித்து மேலதிக கவனம் செலுத்த்ப்பட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
வீரத் தமிழர் முன்னணி என்ற பெயரில் தமிழீழம் பிடித்துத் தருவதாக சீமானின் கட்சிக் கிளைகள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் முளைவிட ஆரம்பித்துள்ளன. தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் அதன் இருப்பிற்கு எதிரான அத்தனை பிற்போக்குக் கருத்துக்களையும் கொண்டிருக்கும் சீமானின் புலம்பெயர் கிளைகளுக்கு சில தமிழ் வியாபாரிகளின் பணம் இறைக்கப்படுவதற்குப் பின்னால் உள்ள காரணங்களைத் தெளிவாக்கும் போது மட்டுமே அதன் பின்னால் கண்மூடித் தனமாகச் செல்லும் அப்பாவிகளை அழிவிலிருந்து விடுவிக்க முடியும்.
ஸகொட்லாந்திலும் அயர்லாந்திலும் ஆங்கிலம் பேசுகிறார்களாமே?
…………………..
கட்டுரையாளர் என்ன சொல்ல வாறார் ?
தமிழகத்தில் உள்ள இடது சாரி கட்சிகள்
, இயக்கங்கள் கூடத்தான் இரு கழக ஆட்சிகளும் அகற்றப்பட வேண்டும் என பல கால கட்டங்களில் பல தடவைகள் சொல்லி வந்திருக்கின்றன.
அதனால் அந்த இடது சாரி இயக்கங்களும் கட்சிகளும் பாஜகவுடன் ஒரு புள்ளியில் இணைகின்றன என சொல்லி விடலாமா?
கட்டுரையாளர் ஒரு முட்டாள்