பெரியார் அம்பேத்கார் படிப்புவட்டம் ஒழுங்கு செய்த கருத்தரங்கு கடந்தவாரம் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் லண்டனில் ஈஸ்ட்ஹாம் பகுதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நுளைந்த நாம் தமிழர்/ வீரத்தமிழர் ரவுடிக் கும்பல் கூட்டத்தைக் குழப்ப முற்பட்டு தோல்விகண்டது. இதனைத் தொடர்ந்து வேதாந்தவிற்கு எதிராக 26.05.18 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் சு.ப.வீரபாண்டியன் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி நாம் தமிழர் வன்முறைக் கும்பல் வேதாந்தா எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ப,ஜ,க மதவாதக் கும்பலை நுளைவதைத் தடுக்கும் முகமாக ஜனநாயக முற்போக்கு சக்திகள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர்க்க முடியாமல் ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று திராவிட முன்னேற்றக் கழகமும் ஏனைய ஜனனாயக சக்திகளும் ஒரணியிலும், ஆ.எஸ்.எஸ் (ப.ஜ.க) சீமான் கும்பல் மற்றொடு அணியிலும் செயற்படுகின்றன.
சீமானின் அணியிலிருக்கும் சிறிய வன்முறைக் கும்பல் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளில் திட்டுவதையும், பொய்யானதகவல்களை குறுஞ் செய்திகளாக வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாகுவதிலுமே குறியாக உள்ளனர்.
நாம் தமிழர்,ஆர்.எஸ்.எஸ்,தேசிய முன்னணி
நாம் தமிழர் சீமானைப் போன்றே பிரான்ஸ் பிரஞ்சுக் காரர்களுக்கே சொந்தம் எனவும் அங்கு வெள்ளையின பிரஞ்சுப் பூர்வீகக் குடிகளே ஆட்சி நடத்த வேண்டும் எனக் கூறி பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்ட வந்த கட்சிதான் தேசிய முன்னணி. ஈழத் தமிழர்கள் உட்பட பிரான்சில் வசிக்கும் வெளி நாட்டவர்களே பிரஞ்சுக்காரர்களின் வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறார்கள் என்றும் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறார்கள் என்றும் தனது பிழைப்புவாத அரசியலை நடத்திவந்த தேசிய முன்னணியை ஒரு சிறிய வன்முறை கும்பலே ஆதரித்துவந்தது. நாம் தமிழர் போன்றே சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்புவதும், பிரான்சில் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு எதிராக செய்திகளைப் பரப்புவதும், இவர்களின் தொழிலாக இருந்துவந்தது.
பொருளாதார நெருக்கடிகளால் விரக்தியடையும் போது தேசிய முன்னணி, நாம் தமிழர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா போன்றவற்றை மக்களின் ஒரு பகுதியினர் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முதலாளித்துவம் வழங்கிய குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஜனநாயக முற்போக்கு சக்திகள் தவிர்க்க முடியாமல் வலதுசாரிக் கட்சிகளை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
கடந்த பிரஞ்சு ஜனாதிபதித் தேதலில் தேசிய முன்னணி இரண்டாவது அதிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற போது வலதுசாரிப் போக்குடைய மக்ரோன் என்பவரை அவரது எதிரிகளான இடதுசாரிகளே ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அவ்வாறான ஒரு சூழலே இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணிக்கு இணையான போக்குடைய மத வெறியர்களான ப.ஜ.க விடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் காப்பாற்ற தவிர்க்க முடியாத சூழலில் தி.மு.க என்ற கட்சியுடன் ஓரணியில் இணைய வேண்டிய நிர்பந்தம் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க என்பது தவறுகளும், ஊழலும், சந்தர்ப்பவாதமும் நிறுவன மயப்பட்ட கட்சி என்பதை அறிந்துகொண்டே பலர் அதனோடு அணி சேர்ந்துகொள்ளும் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காலவதியாகிப்போன பாராளுமன்ற ஜனநாயகம்
பாராளுமன்ற ஜனநாயகம் காலாவதியாகி தோற்றுப் போய்விட்ட நிலையில், இன்று வாக்குகளை விட சமூகத்தை மாற்றும் புரட்சியே அவசியம் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். இப் புரட்சிக்கான ஜனநாயகக் கட்டமைப்புகக்ளைக் கூட அழிக்கும் ப.ஜ.க மத வெறி அரசை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான குறிப்பான அரசியல் சூழலை எதிர்கொள்ள வகுக்கப்படும் தந்திரோபாயங்களுக்கு எதிர் நிலையில் ப,ஜ,க போன்ற மதவாதிகளும், சீமான் போன்ற இனவாதிகளும் ஓரணியில் திரண்டுள்ளனர் என்பதே இன்றை ஆபத்தான சூழல்.
Civilized behaviour. Chuck Norris.