தூத்துக்குடி வேதாந்தா படுகொலைகளுக்கான திட்டம் கடந்த ஏப்பிரல் மாதத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த வைகாசி மாதம் வேதாந்தாவின் தரத்தை பங்குசந்தை நிறுவனங்களைத் நிர்ணையம் செய்யும் வங்கிகள் தரக்குறைப்புச் செய்திருந்தன. குறிப்பாக கோல்ட்மன் சக்ஸ் என்ற நிறுவனம் வேதாந்தாவின் தரத்தை 3.45 வீதமாகக் குறைத்திருந்தது.
வேதாந்தாவின் இத் தரக்குறைப்பிற்கு தூத்துக்குடியில் நடக்கும் போராட்டங்களையும் அதற்கு எதிரான வழக்குகளையுமே வங்கிகள் காரணமாக முன்வைத்தன.
அதனைத் தொடர்ந்து வேதாந்தா சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதலாவதாக ஏப்பிரல் மாதத்திலிருந்து வேதாந்தாவிற்கு எதிராகப் ஆரம்பம் முதலே போராடும் அரசியல் வாதிகளுக்கு எதிரான பிரச்சாரம் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டன. நாம் தமிழர் சீமானின் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும் PKS தலைமையில் ஸ்டெரலைட் இற்கு எதிராக ஆரம்பம் முதல், கடந்த 10 வருடங்களாகப் போராடும் ம.தி.மு.க தலைவர் வை.கோ இற்கு எதிரான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டன.
தமிழகத்தில் வேதாந்தாவிற்கும் ஸ்டெரலைட்டிற்கும் எதிரான வழக்குகளை வைகோ மட்டுமே நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெரலைட் டீலை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் என்ற சீமான் குழுவின் பதிவிற்குப் பின்னர் முதல் தடவையாக சீமானுக்கு எதிராகப் பேசிய வைகோ வேதாந்தாவிற்கு எதிரான தனது போராட்டம் சமரசங்களுக்கு அப்பால்பட்டது எனத் தெளிவுபடுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ்/பாரதீய ஜனதாவோடு இணைந்து திராவிடக் கருத்துக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அடிப்படைவாதி சீமானின் மோடி ஆதரவு மட்டுமல்ல வேதாந்தாவுடனான நேரடியான டீல் கூட இதற்குக் காரணமாக அமைந்திருக்காலாம் என்ற சந்தேகங்கள் எழுவதற்கும் இடமுண்டு.
மோடி அரசின் தமிழகப் பினாமியாக எடப்பாடி மட்டுமன்றி சீமானும் செயற்படலாம் என்ற சந்தேகங்களை மறுப்பதற்கில்லை.
லைக்கா நிறுவனம் ராஜபக்ச அரசுடன் இணைந்து செயற்பட்டமைக்கான ஆதாரங்களை இனியொரு உட்பட பல செய்திச் சேவைகள் வெளியிட்டிருந்தன. தவிர, நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு லண்டன் பயணம் செய்த போது வெம்ளி மேடையில் பெரும் பணச் செலவில் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கான செலவுகளின் ஒரு பகுதியை வேதாந்தா நிறுவனமும், அதன் பெரும்பகுதியை லைக்க நிறுவனமும் பொறுப்பெடுத்துக்கொண்டன. (ஆதாரம் கீழே)
லைக்கா நிறுவனம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்த சீமான், அதன் உரிமையாளர் சுபாஸ்கரனிடம் விளக்கம் கேட்டுவிட்டு அதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினாலும் பின்னர் தொடர்ந்தும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டார்.(ஆதாரம் கீழே)
இதே வகையிலேயே சீமானின் வேதாந்தா ஆதரவும் தொடர்கிறது. ஸ்டெரலைட் இற்கு எதிரான போராட்டம் கடந்தத 10 வருடங்களாகப் போராட்டம் நடத்தும் வைகோவை அந்த நிறுவனத்திற்குத் தேவைப்படும் நேரத்தில் தாக்குதல் நடத்தியது மட்டுமல்ல ஆளும் அ/தி.மு/க இற்கு ஆதரவாக தி.மு.க வே ஸ்டெரலைட் ஐ திறந்துவைத்தது என்ற பொய்ப் பிரச்சாரததையும் மேற்கொண்டார்.
தனது ஊழலையும், கொள்ளையையும் மறைப்பதற்காக மோடி அரசு இந்துத்துவாவைப் பயன்படுத்துவைதைப் போன்றே சீமான் இனவெறியைப் பயன்படுத்துகிறார் என்பது தெளிவாகிறது.
மனிதகுலத்திற்கு இவ்வாறான அடிப்படைவாதம் புதிதல்ல. ஐரோப்பிய நிறவாதிகளும் தேசியைவாதம் என்ற தலையங்கத்தில் ஈழத்தமிழர்கள் உட்பட அனைத்து வெளி நாட்டவர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று தமது சுரண்டலையும் கொள்ளையையும் மறைக்கின்றனர்.
கழுத்து நரம்பு புடைக்க வைகோவிற்கு எதிராகக் கூச்சலிட்ட சீமான் லைக்கா விவகாரத்திலும் ஸ்டெரலைட் விவகாரத்திலும் பேசக் கூச்சப்படுவது ஏன் என்ற சாமானிய மனிதனின் அறிவுக்கு எட்டிய விபரங்களைக்கூட அவரின் விசில்கள் பேசுவதில்லை,
இந்துத்துவா கொள்கைகளுடனும், பல்தேசிய நிறுவனங்களோடும் நெருங்கிய உறவைப் பேணும் சீமான் கும்பலல் தமிழக மக்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் சீமான் தொடர்பான ஆதாரபூர்வமான உண்மைகளை வெளிக்கொண்டுவருவதும் அவற்றை மக்கள் மத்தியில் சேர்ப்பிப்பதும் ஒவ்வொரு சமூகப்பற்றுள்ள மனிதரதும் கடமை.
மோடியின் செலவுகளைப் பொறுப்பெடுத்துக்கொண்ட லைக்கா:
லைக்கா உரிமையாளரிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறும் சீமான்:
https://www.youtube.com/watch?v=f1W9htq5V7g
ஜெயலலிதாவே ஸ்டெரலைட் ஆலையத் திறந்துவைத்தார்:
https://www.thenewsminute.com/article/history-sterlite-thoothukudi-story-betrayal-crony-regulators-78481
அனில் அக்ரவாலின் வேதாந்தாவை தரக்குறைப்பு செய்த வங்கிகள்:
https://www.hl.co.uk/shares/share-research/share-tips/stockbroker-tips/archive/goldman-sachs-downgrades-vedanta-as-protests-embroil-smelter