இலங்கை இராணுவப் பயங்கரவாதிகளில் முகியமானவரும், பல்வேறு கூட்டுப் படுகொலைகளைத் தலைமை தாங்கியவரும், வன்னிப் படுகொலையைத் தலைமை தாங்கியவருமான சரத் பொன்சேகா இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கூடக் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச போன்ற அரச பயங்கரவாதிகளுக்கு இணையான சரத் பொன்சேகாவிற்குபீல்ட் மார்ஷல் என்ற பட்டத்தை வழங்கி சமூகத்தில் உலாவரவிட்டுள்ளது இலங்கை அரசு.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கைது செய்யப்பட்டே கொல்லப்பட்டார் என ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருந்தது. சனல் 4 ஊடகவியலாளர் தடையவியல் விசாரணைகள் ஊடாக இது நிறுவப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் அதி உயர் இராணுவ அதிகாரியாக மதிப்பளிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதி சரத் பொன்சேகா ரூபவாகினி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் மட்டுமல்ல உலகில் எந்த இராணுவமும் இனப்படுகொலை நடத்திவிட்டு சமூகத்தில் சாமானிய மனிதர்களோடு உலா வரலராம் என்பதற்கு சரத் பொன்சேகா ஒரு முக்கிய உதாரணம்.
இதன் மறு பக்கத்தில் மரணங்களை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் தமிழ் பிழைப்புவாதத் தலைமைகள், பாலச்சந்திரன் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலைகள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதைத் தவிர்த்தே வந்துள்ளன.
இலங்கை அரசுடன் தேனிலவு கொண்டாடும், சுமந்திரன், மனோ கணேசன் போன்றவர்கள் பிரபாகரன், பாலச்சந்திரன் உட்பட பல்வேறு தலைவர்களின் கொலை தொடர்பான விபரங்களை இலங்கையின் “நல்லாட்சியை” நோக்கிக் கோரிக்கை விடுக்கவில்லை.
போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை, அவர்களின் இன்றைய நிலை, பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்களின் நிலை, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பான முழுமையான தகவல்களை இலங்கை அரசாங்கத்தை வெளியிடக் கோரும் தேவையை சரத் பொன்சேகா உணர்த்தியுள்ளார்.