Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சபரிமலை சுவாமி ஐயப்பா வழிபாடும் ஆணாதிக்க கோமாளித்தனங்களும் :வி.இ.குகநாதன்

இனியொரு... by இனியொரு...
02/08/2016
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

aiy picசபரிமலை ஐயப்பன் விழாக்காலத்திற்கு இம்முறையும் பெருமளவான பக்தர்கள் இந்தியா, இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் படையெடுத்திருந்தனர். ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர், உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் பயணம் மேற்கொள்ளப்படும் ஆலயங்களில் ‎சபரிமலையும் ஒன்றாகும். கடந்த வருடங்களுடன் ஒப்பீட்டுரீதியில் கடந்த மாதம் அதிகளவானோர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சபரிமலைக்குச் சென்றிருந்தனர். இவ்வாறான பின்புலங்களையுடைய இந்த ஆலயத்தில் சமூகத்தின் முக்கிய பகுதியான இளம்பெண்களிற்கு வழிபடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை மறுப்பானது ஒரு ஆணாதிக்க வெளிப்படேயாகும்.

பொதுவாகவே பால் சமத்துவத்திற்கும் மதச்சம்பிரதாயங்களிற்கும் வெகுதூரம். இந்து மதத்தினைப் பொறுத்தவரையில் உடன்கட்டையேறல், பின்னரான காலப்பகுதியில் விதவைகள் என்று கூறி மொட்டையடித்தல், பலதார மணம் (முன்னுதாரணமான கடவுள்களிற்கே பல மனைவிகள்) போன்ற பல பெண்ணடிமைத்தனங்களை கொண்டிருந்தன. கிறிஸ்தவ மதத்தில் பெண்ணடிமைத்தனமானது ஏவாள் இடுப்பு எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள் என்பதிலிருந்து ஆரம்பித்து பழைய ஏற்பாட்டில் பலவாறாக தொடர்கிறது. இஸ்லாத்தில் தலாக் விவகாரத்துமுறை, பர்கா முகத்திரை, குரானிலேயே மனைவிக்கு அடிப்பதனை நியாயப்படுத்தியமை என பலவாறாக காணப்படுகிறது. பொதுவாகவே மதங்களில் ஆணாதிக்கம் காணப்படுகிறது என்பதனைக்காட்டிலும் ஆணாதிக்கத்தினை நியாயப்படுத்தும் ஒரு ஊடகமாக மதங்கள் காணப்படுகின்றன என்பதே சாலப்பொருத்தமாகவிருக்கும். எது எவ்வாறாயினும் காலப்போக்கில் அறிவியல், நாகரீக வளர்ச்சியால் பல பிற்போக்குத்தனங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும் இன்றும் தொடரும் ஒரு அடக்குமுறையாகவே ஐயப்பன் ஆலயத்தடை காணப்படுகிறது.

இந்திய அரசியலமைச்சட்டப்படி பால்நிலைகருதி வழிபடத்தடைவிதிப்பது சட்டவிரோதமானது, ஆனால் கோயில் நிர்வாகமும் (திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் -TDB)ஆட்சியிலுள்ள போலி கம்யூனிஸ்ட்கட்சியும் இத்தடையினை தொடர்ந்துவருகின்றன. இத்தடைக்கு ஆலயநிர்வாகம் கூறும் காரணங்கள் காலத்திற்கு காலம் முரண்படுவதுடன் விநோதமாகவுமுள்ளன. முதலாவக கூறினார்கள் சபரிமலையிற்கான காட்டுப்பாதையில் நடந்துவரும்போது இளம்பெண்களிற்கு காட்டுவிலங்களினால் ஆபத்துவரும் என்று ஆனால் இன்று எல்லோரும் வாகனங்களில் காட்டுப்பாதையினை கடப்பதனால் அந்த காரணம் அடிபட்டுப்போனது. அடுத்ததாக பிரம்மச்சாரியான ஐயப்பனிற்கு இளம்பெண்களினை கண்டால் கோபம்வரும் கூறினார்கள். பக்தைகளை கண்டால் சாமிக்கு கருணையல்லவா வரவேண்டும்? ஏன் கோபம் வரவேண்டும்? இதற்கு வெளிப்படையாகப் பதில் கூறமாட்டார்கள். ஆனால் உட்கிடையான ஒரு காரணம் இவர்களிற்கு உண்டு. அதற்கு ஐயப்பனின் பிறப்புபற்றி அறிந்திருக்கவேண்டும். பத்மாசுரனை தந்திரமாக அழிப்பதற்காக விஸ்ணு மோகினி வடிவமெடுத்தபோது அந்த மோகினியின் அழகில் மயங்கி சிவன் மோகினியுடன் உறவுகொண்டதால் பிறந்தவரே ஐயப்பன். பொதுவாகவாகவே தந்தையின் குணம் மகனிற்கும் இருக்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கை(மூடநம்பிக்கை). எனவே ஐயப்பனும் தந்தையைப்போல இளம்பெண்ணின் அழகில் மயங்கினால் என்பதே இப் பேசாப்பொருள். 1990 களின் நடுப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் பல மாணவிகளுடன் பாலியல்துன்புறுத்தல்களில் ஈடுபட்டு புலிகளின் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார். அப்போது மாணவர்கள் கேலியாக அவ் விரிவுரையாளர் பற்றி பின்வருமாறு கூறுவார்கள். அவ்விரிவுரையாளரிற்கு முன் மரத்திற்கு சேலையினைப்போர்த்தி நிறுத்தினாலும் அவர் அதனை கட்டிப்பிடிப்பார் என்று. அந்த விரிவுரையாளரின் தரத்திலேயே நிர்வாகத்தினர் (TDB) ஐயப்பனையும் கருதுகிறார்களோ தெரியாது. எனவே இக்காரணமும் ஏற்புடையது மட்டுமல்லாமல் சாமியினை இழிவுபடுத்துவதும் ஆகும்.

sabariமற்றொரு காரணம் பெண்களின் மாதவிலக்கு என்பதாகும். மாதவிலக்கு என்பது பெண்களின் ஒரு உடலியல் சம்பந்தமான ஒரு இயற்கையான செயற்பாடாகும். இதனை ஒரு சாட்டாக வைத்து பெண்களை இழிவுபடுத்துவது ஆணாதிக்க சமுதாயத்தின் ஒரு முக்கிய அம்சமாகவுள்ளது. பெண்கள் பூப்படைந்தவுடன் கரிக்கட்டையால் கோடுபோட்டு ஒரு மூலையிலிருத்தியது பழைய பெண்ணடிமைத்தனம் என்றால் இப்போது அதனை ஒரு விழாவாக (பூப்புனித நீராட்டுவிழா) கொண்டாடுவது நவீனமுறை. அதுவும் புலம்பெயர் தமிழர்கள் அந்த விழாவினை ஒளிப்பதிவு (வீடுயோ)செய்து உலகம் முழுவதும் பரப்பிவருகிறார்கள். சரி பிழைகளிற்கு அப்பால் மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தாங்களாகவே எந்த கோயிலிற்கும் செல்வதில்லை. எனவே நிர்வாகத்தின் இந்த காரணமும் அடிபட்டுப்போகின்றது. இறுதியாக நிர்வாகத்தினர் ஒரு காரணத்தினை எட்டு மண்டல விரதம் என்று கண்டுபிடித்தார்கள். அதாவது இளம்பெண்கள் தொடர்ந்து எட்டு மண்டலங்களிற்கு விரதம் இருக்கமுடியாது ஏனெனில் இடையில் மாதவிலக்கு காலப்பகுதி வரும் என்பது. இதுவும் ஏற்புடையது அன்று . ஏனெனில் கௌரி விரதம் போன்ற ஏனைய விரதங்கள் அக்காலப்பகுதியிலும் பெண்களால் தொடரப்படுகின்றன. மற்றையது ஆண்களில் பலரே இப்போது ஒரு மண்டலவிரதம், ஒரு நேர விரதம் என்று சுருக்கிவிட்டார்கள்.

நிர்வாகத்தின் இந்த கோமாளித்தன காரணங்கள் யாவும் தோற்கடிக்கப்பட்டபின் இறுதியான துருப்புச்சீட்டாக பலவருட பழக்கவழக்கத்தினை மாற்றமுடியாது என்றார்கள். அவ்வாறாயின் உடன்கட்டையேறலும் பலவருட பழக்கம் தானே இன்று மாறவில்லையா.? இந்த நிர்வாகம் இந்த விடயத்தில் மட்டுமல்ல முன்னர் மகரயோதி விடயத்திலும் மூக்குடைபட்டது. அதாவது தாங்களாகவே களவாக பொன்னம்பல மேட்டில் தீபத்தினை ஏற்றிவிட்டு அதனை தேவர்கள் வானிலிருந்து ஏற்றிய தீபம் என பக்தர்களை ஏமாற்றி கூட்ட நெருசல்களில் பக்தர்களின் இறப்பிற்கு காரணமாயினர். பின்னர் ஊடகங்கள் இந்த மோசடியினை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பின்னரே நீதிமன்றத்தில் தாமே தீபம் ஏற்றுவதாக ஒப்புக்கொண்டார்கள். இவ்வாறான பல மோசடிகள் மூலமே நிர்வாகத்தினர் பல கோடி ரூபாக்களை காணிக்கையாகத் திரட்டுவருகின்றனர்.

முடிவாகக்கூறுமிடத்து நிர்வாகத்தின் பெண்கள் மீதான தடை என்பது எந்தவிதத்திலும் நியாயமற்றது என்பதுடன் சட்டவிரோதமானதுமாகும். எனவே இதனை எதிரத்து குரல் கொடுக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையுமாகும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலிருந்து செல்லும் பக்கர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மற்றும் மகள் மீதான இந்த சபரிமலை தீண்டாமைக்கு எதிராக குரல்கொடுக்கவேண்டும். நிர்வாகம் தொடர்ந்து கேட்க மறுத்தால் சபரிமலை பயணத்தினை புறக்கணிக்கவேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நாம் தவறுகளைத் தொடர்கிறோம், அழிவுகளை ஊக்கப்படுத்துகிறோம் : அன்பரசு

நாம் தவறுகளைத் தொடர்கிறோம், அழிவுகளை ஊக்கப்படுத்துகிறோம் : அன்பரசு

Comments 6

  1. sumerian says:
    10 years ago

    கோயில்களிற்கு சென்று மதங்களிற்குள் பெண்உரிமை பெறமுடியாது. மதமறுப்பே பெண்விடுதலையின் முதற்படி.

  2. Sami says:
    10 years ago

    ஐயப்ப சரணம், இதில் பல பிழைகள் உள்ளன.
    1. இந்து மதமானது பெண்களின் சமநிலையினை வலியுறுத்துகிறது.உதாரணம்- அர்த்தநாரீஸ்வர்.
    2. சிவனுக்கும், விஸ்ணுவிற்கும் பிறக்கும் குழந்தையே மகசி இனை அழிக்கும் திறன்படைத்தவர் என்பதே ஐயப்பன் பிறப்பிற்கு காரணம். ஐயப்பன் பிரமச்சாரி, எனவே இளம்பெண்களின் தரிசனம் கூடாது.
    3. மகரசோதி ஆரம்ப காலத்தில் தெய்வத்தின் செயலே. கலி முத்தியதால் அந்த வழக்கு மாறியது, அதனால் பக்தர்கள் ஏமாற்றமடைவதனை தடுப்பதற்கே போர்ட் இப்போது தீபம் ஏற்றுகின்றது. ஆரம்பகாலத்தில் மலையில் தீபம் ஏற்றியது யார்
    4. மில்லியன் கணக்கான பக்தர்களிற்கு அறிவில்லையா, இந்த கம்யூனிஸ்டுகளிற்கு மட்டுமா அறிவுண்டு. அதுதான் எம்பெருமான் சோவியத்யூனியனை பிளந்து உங்களின் கொட்டத்தினை அடக்கினாரே.
    5.ஐயப்பன் தரிசனம் ஆண்களிற்கு மட்டுமே உரித்தானது. உதாரணமாக ஆண்களின் பாடசாலையில் பெண்மாணவியினை அனுமதிக்கலாமா, பெண்களின் தரிசனத்திற்குமட்டும் என்றுகூட சில சிறுதெய்வவழிபாடுகள் உண்டு. அதற்கு ஆண்கள் அனுமதிகேட்டார்களா
    6.இவ்வாறான நாஸ்தீகம் அதிகரிப்பதால்தான் வெள்ளம், புயல் என்று உலகமே அழிகிறது.
    7. இறுதியாக இதனை இணையத்தில் போடமாட்டீர்கள் என்று தெரியும், ஆனாலும் எம்பெருமான் அறிவான். யான் அறிவோம் பரபரமே.

    • a voter says:
      10 years ago

      //ஐயப்பன் பிரமச்சாரி, எனவே இளம்பெண்களின் தரிசனம் கூடாது.//
      இளம்பெண்களைப் பார்த்தால் ஐயப்பன் மனம் மாறி விடுவாரா (அவ்வளவு பலவீனமான பிரம்மச்சரியமா? ஆஞ்சநேயர் கோவிலுக்குள் பெண்கள் செல்கிறார்களே?)
      அல்லது பெண்கள் எல்லாம் எங்கே ஒரு பிரம்மச்சாரி கிடைப்பான் கொத்திக் கொண்டு போகலாம் என்று காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

      உங்கள் மத நம்பிக்கைகளிற்கு நான் குறுக்கே வரவில்லை. ஆனால் ஒரு சாராரை (அது பெண்களாக இருக்கட்டும்; சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கட்டும்; கணவனுடன் வாழாதவர்களாக இருக்கட்டும்; பிள்ளைகளற்றவர்களாக இருக்கட்டும்; தோல் நிறத்தால் மாறுபட்டவர்களாக இருக்கட்டும்) எந்த வகையிலும் பாரபட்சமாக நடத்துவது சரியல்ல.
      மத வேறுபாடின்றி சகலரிலும் பால் ரீதியான பாகுபாடு உண்டு. சில இடங்களில் நேரடியாக இருக்கின்றது. சில இடங்களில் மறைமுகமாக இருக்கின்றது.

    • Kugan Nathan says:
      10 years ago

      சபரிமலை தொடர்பான சாமியின் கேள்விகளிற்கான பதில்கள் அதே வரிசையில்
      1. சமத்துவம் சொல்லிலோ,உருவத்திலோ இருந்து பயனில்லை, மாறாக நடைமுறையிலிருக்கவேண்டும்.
      2.ஐயப்பன் பிறப்பிற்கு காரணமான விஸ்ணுவின் மோகினி வடிவிற்கு காரணம் பத்மாசுரனே.
      3.ஆரம்பத்தில் மலை மேட்டில் பழங்குடி மக்கள் தமது விழாவிற்காக குறித்த காலநேரத்தில் ஏற்படுத்திய நெருப்பு வெளிச்சமே மகரசோதி எனக்கருதப்பட்டது. பின்னர் பழங்குடியினர் அங்கிருத்து திரத்தப்பட்டபின் நிர்வாகத்தின் ஏமாற்று வேலை தொடங்கிற்று. எக்காலத்திலும் தேவர்கள் ஏற்றும் தீபமல்ல.
      4.சோவியத்தை பிளந்தது எம்பிரான் என்றால் இந்துஸ்தானை பிளந்து பாகிஸ்தான், பங்களாதேசை உருவாக்கியது எப் பிரான்?
      5. ஆண்களை அனுமதிக்காத கோயில் என்று எதுவுமேயில்லை. வேண்டுமானால் ஆண்கள் போகவிரும்பாத சிறு கோயில்களிருக்கலாம். அது தலித்களின் கோயில்களிற்கு உயர்சாதியினர் போகாமை போன்றது.
      6.கோயிலிற்கு போக அனுமதிகேட்பது நாத்தீகமல்ல.
      7. இனியொரு பதிலினை செயலில் காட்டியுள்ளது.
      மற்றையது இந்தியநீதிமன்றத்தில் 5 பெண் வழக்கறிஞர்கள் சபரிமலை வழிபாட்டுக்கு அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
      பள்ளிவாசலில் அனுமதியி்லை என்றால் அதுவும் பிழைதான். ஒரு பிழை இன்னொரு பிழையினை நியாயப்படுத்தாது.

  3. tharmi says:
    10 years ago

    மகரஐோதி என்பது ஆயிரம் வருடங்களிற்கு மேலாக தோன்றியது. இதில் கடைசி 30 வருடங்களாகவே தேவாஸ்தானம் ஏற்றிவருகிறது. தேவாஸ்தானம் தோன்றியதே அண்மையில்தான். அவ்வாறாயின் ஆயிரம் வருடங்களிற்கு முன் யார் ஏற்றியது?. அது தெய்வச்செயலே.
    மற்றையது பெண்கள் பற்றியது, பெண்கள் யாராவது கேட்டார்களா அனுமதி . உங்களிற்கு ஏன் இந்த கவலை. மும்பையிலுள்ள தர்க்காவிற்கு பெண்களிற்கு அனுமதியில்லை என்பது தெரியுமா?

    • Ram says:
      10 years ago

      மும்பை தர்காவ விடுமையா, சிறீலங்காவுல பள்ளிவாசலுக்கு பொண்ணுங்க போக முடியாது. கொழும்பில மட்டும் போரா முசிலிம்கள் பொண்ணுங்கள விடுறாங்க. இந்த பசங்களுக்கு மத்தவங்க வெவகாரத்துல கம்பு ஓட்டுறது பொளப்பா போச்சு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...