பிரித்தானியாவில் ரோயல் பாங்க் ஓப் ஸ்கொல்டன் திவாலாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. பிரித்தானிய அரசு வங்கியை காப்பாற்றுவதற்காக பெருந்தொகையான பணத்தை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான பணம் வங்கிக்கு ஒதுக்கீடாக வழங்கப்படுமானால், பிரித்தானிய உழைக்கும் மக்களின் வரிப்பணம் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பவில் இன்றுள்ள வங்கிகள் தமது இருப்பைப் பேணிக்கொள்ள பெருந்தொகையான பணத்தை எதிர்பார்க்கின்றன. மக்களிடமிருந்தே வரிப்பணமாக இவ்வங்கிகளுக்கு வழங்கப்படும் பணம் அறவிடப்படும். வங்கிகள் குறைந்த வரி செலுத்தும் வழிகளைத் அறிந்து வைத்திருக்கும் பெரு நிறுவனங்களிடம் பணத்தை முதலீடு செய்யும். இறுதியில் இந்த நிறுவங்கள் மக்களின் பணத்தைத் திருடிக்கொள்கின்றன. இப்போது உடனடிப் பணம் தேவைப்படுவதாகக் கருதப்படும் பிரதான வங்கிகளுள்
பி.என்.பி, ஜேர்மனி கொம்மர் வங்கி, ஸ்பெயின் சன்டென்டர், யுனி கிரடிட் இத்தாலி ஆகியன சிலவாகும்.