2009 இறுதி யுத்தத்தால் அழிந்துபோன வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பாரதியார் சனசமூக நிலையத்திற்கு இன்றுவரை கட்டடம் இல்லை. யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் கடந்தும் பத்திரிகை படிக்க ஒருநூல் நிலையம் இங்கு இல்லை.
கட்டடம் அமைத்து தளபாடம் கொள்வனவு செய்ய ரூ 6 இலட்சம் மதிப்பிட்டுள்ளார்கள். கட்டடம் அமைத்தால் தாம் ஏனைய உதவிகளைச் செய்வதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. பார்வையிட்டுச் சென்ற எந்த ஒரு அரசியல் வாதியும் இதற்கு உதவ முன்வரவில்லை.
சிங்களப் பேரினவாதம் சிங்கள மக்கள் தகவல்கள் அறிந்துகொள்ளும் உரிமையை வரலாறு முழுவதும் மறுத்து வந்துள்ளது. அதே போல தமிழ்ப் பிழைப்புவாதிகளும் அந்த உரிமையை மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், வாசிப்பை பரந்துபட்ட மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் அவசியம் உணரப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களிற்கும், மாவீரர் நிகழ்வுகளிற்கும் புலம்பெயர் நாடுகளில் செலவிடப்படும் பணத்தின் ஒரு சிறிய பகுதியே நூல் நிலையத்தை அமைக்கப் போதுமானது. பில்லியன்களாகப் புலம்பெயர் நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை தலைவர் வந்தால் மட்டுமே தருவோம் என்கிறார்கள். நூல் நிலையத்திற்குப் பணம் வழங்கினால் புதிய தலைவர்கள் தோன்றுவார்கள்.
சனசமூக நிலையத்தின் கோரிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்பு :
தவச்செல்வம் – தலைவர் பாரதியார் சனசமூக நிலையம்- 0779196151
முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களிற்கும், மாவீரர் நிகழ்வுகளிற்கும் புலம்பெயர் நாடுகளில் செலவிடப்படும் பணத்தின் ஒரு சிறிய பகுதியே நூல் நிலையத்தை அமைக்கப் போதுமானது. பில்லியன்களாகப் புலம்பெயர் நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை தலைவர் வந்தால் மட்டுமே தருவோம் என்கிறார்கள். நூல் நிலையத்திற்குப் பணம் வழங்கினால் புதிய தலைவர்கள் தோன்றுவார்கள்!
இத்துடன் தங்களுடைய வங்கிக் கணக்கிலக்கத்தையும் இணைத்தால் உதவி செய்ய விரும்பும் நலன் விரும்பிகள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும். சிறு துளி பெருவெள்ளம் என்பது யான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை