கோத்தாபய மகிந்த ராஜபக்சவின் அரசியல் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் அமைச்சர்களில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பிரதமர் ரனில் ஆகியோரி பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. மைத்திரிபால சிரிசேன பிரித்தானியா பயணமாவதற்கு முன்பாக விஜயதாச ராஜபக்ச பிரித்தானியாவிற்கு அழைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோத்தாபய மற்றும் மகிந்த உடப்ட ராஜபக்ச குடும்பத்தினரை விசாரணை செய்யாமல் காலம்கடத்துவது தொடர்பாக ஊடகம் ஒன்று விஜயதாசவைக் கேள்வியெழுப்பியிருந்தது. அதற்குப் பதிலளித்த அவர், கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் அதனால் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தவிர, முன்னைய அரசின் அதிகாரிகளே இன்னும் நிவாகத்தை நடத்தி வருவதால் விசாரணைகள் கால தாமதமாகின்றன என்றார். தவிர கோத்தாபய தொடர்பான அச்சம் எதுவும் அரசிற்கு இல்லை என்றார்.
மகிந்த கோத்தாபய ஆகியோரைப் பாதுகாப்பதில் இலங்கை அரசு காட்டும் அக்கறை படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் மக்கள் குறித்து இலங்கை அரசு காட்டவில்லை என்பது தெளிவாகிறது.
உலகின் கொடூரமான கொலையாளிகளை மேற்கு நாடுகளும் இலங்கை அரச அதிகாரமும் இணைந்தே பாதுகாத்து வருகின்றன.